சிவப்பு வண்ணத்தால சூப்பரா அலங்கரிச்சிருக்காங்க... புதிய நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

நிஸான் (Nissan) நிறுவனம் மேக்னைட் ரெட் எடிசன் (Magnite Red Edition)-ஐ இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிறப்பு பதிப்பு வாகனம் பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் தகவலைப் பார்க்கலாம்.

சிவப்பு நிறத்தால அலங்கரிச்சுட்டாங்க... புதிய நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

நிஸான் (Nissan) நிறுவனம் அதன் மேக்னைட் காரில் ரெட் எடிசன் (Magnite Red Edition) -ஐ எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இக்காருக்கு கிடைத்து வரும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலும், மேக்னைட் காரை சிறப்பும் நோக்கிலும் இந்த சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிவப்பு நிறத்தால அலங்கரிச்சுட்டாங்க... புதிய நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பை நிஸான் மேக்னைட் பெற்று வருகின்றது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகவும் காராகவும் அது மாறியுள்ளது. எனவேதான் ரெட் எடிசன் வாயிலாக மேக்னைட்டை நிஸான் சிறப்பித்திருக்கின்றது. நிறுவனம் இந்த ரெட் எடிசனை எக்ஸ்வி வேரியண்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. எக்ஸ்வி ஓர் உயர்நிலை தேர்வு என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிவப்பு நிறத்தால அலங்கரிச்சுட்டாங்க... புதிய நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரெட் எடிசன் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எம்டி எக்ஸ்வி ரெட் எடிசன், டர்போ எம்டி எக்ஸ்வி ரெட் எடிசன் மற்றும் டர்போ சிவிடி எக்ஸ்வி ரெட் எடிசன் ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைக்கும். ரூ. 7.86 லட்சம் தொடங்கி ரூ. 9.99 லட்சம் வரையிலான விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிவப்பு நிறத்தால அலங்கரிச்சுட்டாங்க... புதிய நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

இது ரெட் எடிசன் என்பதால் இக்காரில் முக்கிய பகுதிகளில் சிவப்பு நிற அலங்காரப் பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. முகப்பு பகுதியில் உள்ள க்ரில், முன் பக்க பம்பர் கிளாடிங், பாடி சைடு கிளாடிங் ஆகியவற்றிலேயே சிவப்பு நிற அலங்காரப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க காரின் டேஷ்போர்டும் சிவப்பு நிறத்தாலயே அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

சிவப்பு நிறத்தால அலங்கரிச்சுட்டாங்க... புதிய நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

தொடர்ந்து, கதவு பக்கத்தில் இருக்கும் ஆர்ம் ரெஸ்ட், சென்டர் கன்சோல் ஆகியவற்றிலும் சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க காரின் உடல் பகுதியிலும் சிவப்பு நிற கிராஃபிக் மற்றும் ரெட் எடிசன் பேட்ஜ் உள்ளிட்டவையும் ரெட் எடிசன் மேக்னைட் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மாதிரியான சிறப்பு மாற்றங்களுடனேயே நிஸான் மேக்னைட் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

சிவப்பு நிறத்தால அலங்கரிச்சுட்டாங்க... புதிய நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

வீல் மற்றும் லைட் ஆகியவற்றைப் பொருத்தவரை வழக்கமான மேக்னைட் காரைப் போலவே இந்த ரெட் எடிசன் மேக்னைட் காட்சியளிக்கின்றது. 16 அங்குல அலாய் வீல், எல்இடி பனி மின் விளக்கு மற்றும் பகல்நேர லைட் ஆகியவை எக்ஸ்வி ட்ரிம்மின் வழக்கமான ஒன்றில் காணப்படுவதைப் போலவே உள்ளது.

சிவப்பு நிறத்தால அலங்கரிச்சுட்டாங்க... புதிய நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

இதேபோல் எஞ்ஜின் விஷயத்திலும் இவை ஒரே மாதிரியான காட்சியளிக்கின்றன. 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே ரெட் எடிசன் மேக்னைட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் நேச்சுரல்லி அஸ்பைரேடட் டர்போசார்ஜர் மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாக 71 பிஎச்பி மற்றும் 91 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

சிவப்பு நிறத்தால அலங்கரிச்சுட்டாங்க... புதிய நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

நிஸான் மேக்னைட் டர்போசார்ஜர் மோட்டார் தேர்விலும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்த மோட்டார் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவர் மற்றும் 160 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆகிய இருவிதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

சிவப்பு நிறத்தால அலங்கரிச்சுட்டாங்க... புதிய நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

நிஸான் மேக்னைட் கார் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த போட்டியானது புதிய ரெட் எடிசன் வருகையால் இன்னும் பல மடங்கு அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிவப்பு நிறத்தால அலங்கரிச்சுட்டாங்க... புதிய நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

நிஸான் நிறுவனம் மேக்னைட் காரில் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிரைவர்களுக்கான திரை, எஞ்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட எக்கசக்க அம்சங்களை வாரி வழங்கியிருக்கின்றது. தற்போதையே நிலவரப்படி ரூ. 5.97 லட்சம் தொடங்கி ரூ. 10.57 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

Most Read Articles
English summary
Nissan launched magnite red edition in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X