ஆஹா எதிர்பார்க்காத தகவல் எல்லாம் வெளியாகுதே! வர அக்டோபர் மாசத்துல செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் நிஸான்!

நிஸான் அதன் புதுமுக எலெக்ட்ரிக் காரை வரும் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை சமூக வலைதள பக்க பதிவின் வாயிலாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆஹா எதிர்பார்க்காத தகவல் எல்லாம் வெளியாகுதே!.. வர அக்டோபர் மாசத்துல செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் நிஸான்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் டிகோர் இவி மற்றும் நெக்ஸான் இவி (பிரைம் மற்றும் மேக்ஸ் என இரு மாடல்களில் இது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது) ஆகிய இரு கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் டியாகோ இவி-யை இன்று (செப்டம்பர் 28) இந்திய சந்தையில் அறிமுகம் செய்கின்றது. இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஹா எதிர்பார்க்காத தகவல் எல்லாம் வெளியாகுதே!.. வர அக்டோபர் மாசத்துல செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் நிஸான்!

இந்த எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக பிரபல கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன், அதன் புதுமுக எலெக்ட்ரிக் காரை இந்த மாதம் இறுதியில் வெளியீடு செய்ய இருக்கின்றது. ஏற்கனவே, மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி 300 காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடல் எக்ஸ்யூவி400-ஐ இந்திய சந்தையில் வெளியீடு செய்துவிட்டது.

ஆஹா எதிர்பார்க்காத தகவல் எல்லாம் வெளியாகுதே!.. வர அக்டோபர் மாசத்துல செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் நிஸான்!

இவ்வாறு முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் இந்திய மின்சார வாகன சந்தையை மையமகாக் கொண்டு களமிறங்கிக் கொண்டிருக்கின்ற இந்தவேலையில், மற்றுமொரு முன்னணி கார் உற்பத்தி நிறுவனமும் தங்களின் புதுமுக எலெக்ட்ரிக் காரை நடப்பாண்டிலேயே இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

ஆஹா எதிர்பார்க்காத தகவல் எல்லாம் வெளியாகுதே!.. வர அக்டோபர் மாசத்துல செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் நிஸான்!

நிஸான் நிறுவனமே விரைவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. வரும் அக்டோபர் 18ம் தேதியையே புதுமுக எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய அந்நிறுவனம் தேர்வு செய்திருக்கின்றது. போதியளவு விற்பனை வரவேற்புக் கிடைக்காத காரணத்தினால் இந்த நிறுவனம் இந்தியாவை விட்டு ஃபோர்டு நிறுவனத்தைப் போல் பின் வாங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆஹா எதிர்பார்க்காத தகவல் எல்லாம் வெளியாகுதே!.. வர அக்டோபர் மாசத்துல செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் நிஸான்!

ஆனால், இந்தியர்களின் மன நிலையை புரிந்து மேக்னைட்டை தனது கடைசி முயற்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டின் மலிவு விலை கார் பிரிவில் விற்பனைக்குக் களமிறக்கியது. நிறுவனத்தின் இந்த யுக்தியே தற்போது இந்தியாவில் நிஸான் ஆழமாக காலூன்ற உதவி செய்திருக்கின்றது. நிஸான் மேக்னைட்டிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு அந்நிறுவனத்தின் இந்திய இருப்பை தக்க வைக்க செய்திருக்கின்றது.

ஆஹா எதிர்பார்க்காத தகவல் எல்லாம் வெளியாகுதே!.. வர அக்டோபர் மாசத்துல செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் நிஸான்!

இந்த நிலையிலேயே நிறுவனம் அதன் தயாரிப்புகளை விரிவாக்கம் செய்யும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் காரை நாட்டில் வெளியீடு செய்ய இருக்கின்றது. வெளிநாட்டு சந்தைகளில் தற்போது விற்பனையில் இருக்கும் லீஃப் எலெக்ட்ரிக் காரையே நிஸான் இந்திய மின் வாகன சந்தையில் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஹா எதிர்பார்க்காத தகவல் எல்லாம் வெளியாகுதே!.. வர அக்டோபர் மாசத்துல செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் நிஸான்!

ஆனால், இதனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. தற்போதைய நிலவரப்படி புதுமுக எலெக்ட்ரிக் காரின் அறிமுக நாள், நேரம் மற்றும் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இடம் பற்றிய விபரங்களையே அது வெளியிட்டிருக்கின்றது. ஆகையால், அது அறிமுகம் செய்ய இருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடல் பற்றிய முழு விபரங்களும் அறியப்படாத நிலையே உள்ளது.

ஆஹா எதிர்பார்க்காத தகவல் எல்லாம் வெளியாகுதே!.. வர அக்டோபர் மாசத்துல செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் நிஸான்!

தலைநகர் டெல்லியில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியிலேயே நிஸான் அதன் புதுமுக எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய இருக்கின்றது. உலக சந்தையில் விற்பனையில் இருக்கும் நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் காரை அது அன்றைய தினத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இஎம்57 எலெக்ட்ரிக் மோட்டார், இந்த மோட்டாருக்கு தேவையான மின்சக்தியை வழங்குவதற்காக 40 kWh பேட்டரி பேக் உள்ளிட்டவையே நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஆஹா எதிர்பார்க்காத தகவல் எல்லாம் வெளியாகுதே!.. வர அக்டோபர் மாசத்துல செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் நிஸான்!

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400க்கும் அதிகமான கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேவேலையில், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 146 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதுமட்டுமின்றி இந்த எலெக்ட்ரிக் காரில் நவீன கால தொழில்நுட்ப வசதிகளும் மிக ஏராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆஹா எதிர்பார்க்காத தகவல் எல்லாம் வெளியாகுதே!.. வர அக்டோபர் மாசத்துல செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் நிஸான்!

அந்தவகையில், ப்ரோ பைலட் வசதியுடன் கூடிய செமி-அட்டானமஸ் டிரைவிங் சிஸ்டம், ஒன் பெடல் டிரைவிங்கிற்கான இ-பெடல் மோட், அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே இந்த எலெக்ட்ரிக் கார் சிபியூ வாயிலாக இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆஹா எதிர்பார்க்காத தகவல் எல்லாம் வெளியாகுதே!.. வர அக்டோபர் மாசத்துல செம்ம ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் நிஸான்!

இவ்வாகனம் இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் தற்போது விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ், எம்ஜி இசட்எஸ் இவி, ஹூண்டாய் கோனா மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் பிஒய்டி நிறுவனத்தின் அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களுக்கு போட்டியாளனாக அமையும்.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை. இவற்றையே வரும் 2030ம் ஆண்டிற்குள் நிஸான் உலகளவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan leaf electric reveal date announced officially
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X