அஜித்தோட தீவிர ஃபேனா இருப்பாங்களோ! விரைவில் மேக்னைட் காரில் 'ரெட் எடிசன்'.. இன்னும் 10 நாள்ல அறிமுகமாகபோகுது!

நிஸான் நிறுவனம் அதன் மலிவு விலை கார் மேக்னைட்டின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக ரெட் எடிசன் எனும் சிறப்பு பதிப்பை அக்காரில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

அஜித்தோட தீவிர ஃபேனா இருப்பாங்களோ! விரைவில் கைகர் காரில் 'ரெட் எடிசன்'... இன்னும் பத்தே நாள்ல அறிமுகமாகபோகுது!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த மிக முக்கியமான திரைப்படங்களில் 'ரெட்' -ம் ஒன்று. இதனால்தான் ரெட் என்றால் பலருக்கு அது நிறம் என்பதற்கு பதிலாக அஜித் குமார் நினைவில் வருகின்றார். குறிப்பாக மொட்டை தலை, நெற்றியில் சிவப்பு நிற குங்குமம், சிவப்பு நிற சட்டை அணிந்த அஜித் குமாரே அவரது ரசிகர்களுக்கு நினைவிற்கு வருவார்.

அஜித்தோட தீவிர ஃபேனா இருப்பாங்களோ! விரைவில் கைகர் காரில் 'ரெட் எடிசன்'... இன்னும் பத்தே நாள்ல அறிமுகமாகபோகுது!

இதுமாதிரியான ஓர் பாவனையிலேயே பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று அதன் முன்னணி கார் மாடல் ஒன்றை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, காரை சிவப்பு நிறத்தாலும், சிவப்பு நிற உடல்கூறுகளாலும் அலங்காரம் செய்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அஜித்தின் தீவிர ஃபேனாக அவங்க இருப்பாங்களோ என நம்மை யோசிக்கச் செய்யும் வகையில் உள்ளது.

அஜித்தோட தீவிர ஃபேனா இருப்பாங்களோ! விரைவில் கைகர் காரில் 'ரெட் எடிசன்'... இன்னும் பத்தே நாள்ல அறிமுகமாகபோகுது!

நிஸான் நிறுவனமே தனது பிரபல கார் மாடலை 'ரெட் எடிசன்' எனும் சிறப்பு பதிப்பு வாகனமாக உருவாக்கிய நிறுவனம் ஆகும். நிறுவனம் அதன் புகழ்பெற்ற மேக்னைட்டிலேயே ரெட் எடிசனை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. சிறப்பு பதிப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வாகனம் வரும் ஜூலை 18ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

அஜித்தோட தீவிர ஃபேனா இருப்பாங்களோ! விரைவில் கைகர் காரில் 'ரெட் எடிசன்'... இன்னும் பத்தே நாள்ல அறிமுகமாகபோகுது!

இதன் வருகையை முன்னிட்டு இப்போது 'ரெட் எடிசன் மேக்னைட்' காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இளைஞர்கள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்பைப் பெறும் காராக நிஸான் மேக்னைட் மாறியிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் வகையிலேயே இந்த சிறப்பு பதிப்பை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

அஜித்தோட தீவிர ஃபேனா இருப்பாங்களோ! விரைவில் கைகர் காரில் 'ரெட் எடிசன்'... இன்னும் பத்தே நாள்ல அறிமுகமாகபோகுது!

நிஸான் மேக்னைட் ரெட் எடிசனின் முன் பக்க க்ரில், முன் பக்க பம்பர் கிளாடிங், வீல் ஆர்ச்சுகள் மற்றும் சைடு பாடி கிளாடிங் உள்ளிட்டவற்றில் சிவப்பு நிற அக்சென்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ரெட் எடிசன் எனும் பிரத்யேக பேட்ஜும் காரில் வழங்கப்பட்டிருக்கும். இதுதவிர, எல்இடி ஸ்கஃப் பிளேட், டெயில் டூர் கார்னிஷ் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் உள்ளிட்டவையும் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளன.

அஜித்தோட தீவிர ஃபேனா இருப்பாங்களோ! விரைவில் கைகர் காரில் 'ரெட் எடிசன்'... இன்னும் பத்தே நாள்ல அறிமுகமாகபோகுது!

இதுபோன்ற மிக கணிசமான மாற்றங்களை மட்டுமே இச்சிறப்பு பதிப்பு வாகனத்தில் நிஸான் வழங்கியிருக்கின்றது. டர்போ மோட்டாருடன் சேர்த்து இரு விதமான பெட்ரோல் மோட்டார் தேர்வை நிஸான் மேனைட்டில் வழங்குகின்றது. இத்துடன், இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

அஜித்தோட தீவிர ஃபேனா இருப்பாங்களோ! விரைவில் கைகர் காரில் 'ரெட் எடிசன்'... இன்னும் பத்தே நாள்ல அறிமுகமாகபோகுது!

5 ஸ்பீடு மேனுவல் மற்றும் எக்ஸ்-ட்ரானிக் சிவிடி கியர்பாக்ஸ் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகளே மேக்னைட்டில் வழங்கப்படுகின்றது. இத்துடன், இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிரைவர்களுக்கான திரை, எஞ்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அஜித்தோட தீவிர ஃபேனா இருப்பாங்களோ! விரைவில் கைகர் காரில் 'ரெட் எடிசன்'... இன்னும் பத்தே நாள்ல அறிமுகமாகபோகுது!

இதுபோன்ற அதிக அம்சங்களை இக்கார் கொண்டிருந்தாலும் இக்காரின் விலை மிகக் குறைவானதாகக் காட்சியளிக்கின்றது. தற்போதையே விலை ரூ. 5.97 லட்சம் ஆகும். இதுவே மேக்னைட்டின் ஆரம்ப விலை ஆகும். இதன் உச்சபட்ச வேரியண்டின் விலை ரூ. 10.57 லட்சம் ஆகும். அதேவேலையில் விற்பனைக்கு வந்த புதிதில் ரூ. 5 லட்சம் என்ற மிக மிக குறைவான விலைக்கே அது அறிமுகம் செய்யபப்பட்டது.

அஜித்தோட தீவிர ஃபேனா இருப்பாங்களோ! விரைவில் கைகர் காரில் 'ரெட் எடிசன்'... இன்னும் பத்தே நாள்ல அறிமுகமாகபோகுது!

இத்தகைய மிகக் குறைவான விலையில் மேக்னைட் விற்பனைக்கு வந்த காரணத்தினாலேயே இந்தியர்கள் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக மாறியது. இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் மேக்னைட் கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. நிஸான் நிறுவனம் இந்த காரை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அஜித்தோட தீவிர ஃபேனா இருப்பாங்களோ! விரைவில் கைகர் காரில் 'ரெட் எடிசன்'... இன்னும் பத்தே நாள்ல அறிமுகமாகபோகுது!

அப்போதில் இருந்து தற்போது வரை இக்காருக்கு இந்தியாவில் சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இக்கார் இந்தியாவில் விற்பனையில் உள்ள ரெனால்ட் கைகர், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூ300 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Nissan soon to launch magnite red edition in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X