Just In
- 9 hrs ago
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா.... என்னங்க இப்படி ஆகிபோச்சு
- 10 hrs ago
நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!
- 11 hrs ago
இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!
- 12 hrs ago
ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!
Don't Miss!
- News
கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 6,359,578 பேர் பலி.. 553,446,782 பேருக்கு பாதிப்பு
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பல எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரலாம்...
- Movies
நாசருக்கு சினிமா தான் மூச்சு.. வதந்தியை பரப்ப வேண்டாம்.. டென்ஷனான கமீலா நாசர்!
- Sports
தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
- Finance
இனி உங்க இஷ்டத்துக்கு வீடியோ போட முடியாது.. சமூக வலைத்தள வீடியோவுக்கு கடிவாளம்!
- Technology
இனி 6 மட்டும் "இல்ல" அனைத்தும் உங்களுக்கு தான்: வாட்ஸ்அப் புது அம்சம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அவசரப்பட்டு இப்போ வாங்கிடாதீங்க... ஒரு ஆண்டிற்குள் விலை குறைய போகுதாம்... சூப்பரான தகவலை வெளியிட்ட அமைச்சர்!
இன்னும் ஓராண்டிற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக மாற இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் வெளியிட்டிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. தொடர்ந்து பலர் எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அவற்றின் விலை ஒரு சிலருக்கு மிகுந்த சவாலானதாக இருக்கின்றது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் மின்சார கார்கள் பல மடங்கு அதிக விலையில் விற்பனைக்குக் கிடைப்பதை நம்மால் காண முடிகின்றது.

இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் என்று அழைக்கப்படும் டாடா டிகோர் இவி (Tata Tigor EV) -யின் ஆரம்ப மாடலின் விலையே ரூ. 12.49 லட்சமாக இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்வாறு நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தின் விலையும் பல மடங்கு அதிகமானதாக இருக்கின்றது. அதாவது, பல லட்சங்களைக் கொண்டதாக இருக்கின்றது.

ஆகையால், இந்தியர்கள் பலருக்கு எட்டாக் கனியாக எலெக்ட்ரிக் கார்கள் உள்ளன. இந்த சூழ்நிலையைக் களையும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், மின்சார வாகனங்களின் விலை தற்போதும் உச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல்-டீசல் வாகனங்களை போல் பல மடங்கு குறைய இருப்பதாக கூறியிருக்கின்றார். இவ்வாறு மத்திய அமைச்சர் கூறுவது முதல் முறையல்ல. அவர் இதற்கு முன்பாகவும் இதுபோல் கூறியிருக்கின்றார். இரண்டு முறை வரை மின்சார வாகனங்களின் விலை குறைய இருப்பதாக அவர் அறிவித்திருக்கின்றார்.

ஆனால், இதுவரை எந்த மாற்றமும் அவற்றின் விலையில் ஏற்படவில்லை. இந்த நிலையிலேயே மீண்டும் ஒரு முறை பெட்ரோல் வாகனங்களுக்கு இணையான விலையில் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக நிதின் கட்காரி அறிவித்திருக்கின்றார். மேலும், இந்த நிகழ்வு அடுத்த ஆண்டிற்குள் நிகழ்ந்துவிடும் என அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

மத்திய அமைச்சரின் இந்த தகவல் மின்வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "மின்சார வாகனங்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நான் முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றேன். ஒரு வருடத்திற்குள், மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமானதாக இருக்கும். இதன் மூலம் எரிபொருள் இறக்குமதிக்காக நாம் செய்யும் செலவு பெருமளவில் மிச்சப்படுத்தப்படும்" என்றார்.

இவ்வாறு நிதின் கட்காரி கடந்த 2021ம் ஆண்டிலும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தங்களுடைய அரசு மின்சார வாகனங்களின் விலையை குறைப்பதில் மும்பரமாக இயங்கிக் கொண்டிருக்கும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய தகவலை அமைச்சர் வெளியிட்டிருக்கின்றார்.

தற்போது இந்திய சந்தையில் மிக மிக குறைவான விலைக் கொண்ட காராக மாருதி சுஸுகி ஆல்டோ இருக்கின்றது. இது ரூ. 3.39 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய குறைவான விலையில் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

அதேவேலையில், அரசின் முயற்சியால் ரூ. 6 லட்சம் அல்லது ரூ. 7 லட்சம் அல்லது அதற்கும் மேலான விலையில் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய குறைவான விலைக்கு எலெக்ட்ரிக் கார்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்தியர்கள் பலர் இருக்கின்றனர்.

எனவே மலிவு விலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு வரும் எனில் இந்திய சாலைகள் முழுக்க மின்சார வாகனங்கள் ஆளுகை செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போதைய நிலவரப்படி இந்திய மின்வாகன பிரிவை டாடா மோட்டார்ஸ் நிறுவனமே ஆளுகை செய்துக் கொண்டிருந்தது.

இந்நிறுவனத்தின் நெக்ஸான் இவி மின்சார காருக்கு சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 14.79 லட்சமாக இருக்கின்ற நிலையிலும் இந்தியர்கள் இக்காருக்கு சூப்பரான வரவேற்பை வழங்கி வருகின்றனர். இக்காரின் அதிகம் ரேஞ்ஜ் தரும் வெர்ஷன் நெக்ஸான் இவி மேக்ஸ் ரூ. 17.74 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்க தொடங்கியிருக்கின்றது. இந்த வாகனமும் மக்களை சிறப்பாக கவர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
Source: auto economictimes