Just In
- 29 min ago
ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
- 1 hr ago
இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!
- 2 hrs ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 3 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
Don't Miss!
- Finance
ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு.. இனி மக்கள் நிம்மதியாக இருக்கலாம்..!!
- Movies
ஜெயிலர் படத்தில் இவங்க தான் ஹீரோயினா? இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலையே.. முதல்முறையாக ரஜினியுடன்!
- News
தமிழக பொறியியல் கலந்தாய்வு.. கல்லூரிகளில் 7 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் இடங்கள் காலி
- Sports
சிஎஸ்கே வீரர் அதிரடி.. 9 மாதத்திற்கு பிறகு டி20 விளையாடிய வில்லியம்சன்.. வெஸ்ட் இண்டீஸ்க்கு சோகம்
- Technology
நோ, நோ, தோற்ற இடத்திலேயே ஜெயிப்போம்., இது நல்ல பாடம்: ISRO வின் அடுத்த பிளான்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
நாசா துணையுடன் உருவாக்கப்பட்ட பிரேக்... நவீன யுகத்தின் புதிய டெக்னாலஜி! அதிக எரிபொருள் சிக்கனம், மைலேஜை தரும்!
ஆர்பிஸ் பிரேக்ஸ் (Orbis Brakes) எனும் நிறுவனம் நாசாவுடன் இணைந்து புதிய பீரியாடிக் வேவ் டிஸ்க் (Periodic Wave disc) எனும் பிரேக்கை உருவாக்கியிருக்கின்றது. இந்த டிஸ்க் பிரேக்கின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஆர்பிஸ் பிரேக்ஸ் (Orbis Brakes) நிறுவனம் அது உருவாக்கியிருக்கும் 'பீரியாடிக் வேவ் டிஸ்க்' (Periodic Wave disc) எனும் புதிய தொழில்நுட்பத்திலான பிரேக்கை நேற்றைய தினம் (ஜூன் 5 ஆம் தேதி) இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இதனை நாசா (NASA) உடன் இணைந்து அந்நிறுவனம் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அண்மையில் இந்த கூட்டணி பீரியடிக் வேவ் டிஸ்க் பிரேக்கிற்கான பேடெண்டை பெற்றிருந்த நிலையில், தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கின்றது. வழக்கமான டிஸ்க் பிரேக்கைக் காட்டிலும் பல மடங்கு சூப்பரான மற்றும் அதிக பயனை வழங்கக் கூடியதாக இந்த டிஸ்க் பிரேக் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள டிஸ்க் பிரேக்குகள் பயன்பாட்டிற்கு பின்னர் அதிக சூடானதாக இருக்கும். அதாவது, வேகத்தைக் குறைப்பதற்காக நாம் பிரேக் பிடிக்கும்போது டிஸ்க் மற்றும் பிரேக் கட்டை உராய்வின் காரணத்தினால் அவை சூடாகும். ஆனால், நாசா மற்றும் ஆர்பிஸ் பிரேக்ஸ் உருவாக்கியிருக்கும் இந்த டிஸ்க் எந்த சூழலில் சூடாகாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஸ்க் பிரேக்கின் மேற்பரப்பு குளிர்ச்சியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இதுமட்டுமின்றி, பிரேக் பிடிக்கும் போது வாகனத்தில் இருப்பவர்களைத் தூக்கி எறியும் வகையில் இந்த பிரேக் செயல்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பிரேக் ஃபெயிலியர் போன்ற பிரச்னைகளும் அதில் ஏற்படாதாம். ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக கூற வேண்டும் எனில் ஆபத்தில்லா பிரேக்கிங்கை பீரியாடிக் டிஸ்க் பிரேக் வழங்கும்.

இதுதவிர மைலேஜை அதிகரிக்கவும், எரிபொருள் சிக்கனத்தைஅதிகரிக்கவும் நாசா மற்றும் ஆர்பிஸ் பிரேக்ஸின் இந்த தயாரிப்பு உதவியாக இருக்கும். இதுபோன்று, இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாகவே வேவ் டிஸ்க் பிரேக் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இரும்பு பிரேக்குகளைக் காட்டிலும் எடைக் குறைவானதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. 50 சதவீதம் எடைக் குறைவாக அது இருக்கும்.

இதுமட்டுமின்றி கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையிலும் இந்த டிஸ்க் பிரேக் உருவாக்கப்பட்டுள்ளது. எஞ்ஜினில் இருந்து வெளிவரும் கரும்புகையைப் போலவே, ஒவ்வொரு முறையும் நாம் பிரேக்கை பிடிக்கும்போது பிரேக் கட்டை உராய்வின் வாயிலாகக் கணிசமான அளவில் கார்பன் வெளியேற்றம் நிகழ்கின்றது.

இதனை தவிர்க்கக் கூடிய ஓர் தயாரிப்பாகவே ஆர்பிஸ் பிரேக் மற்றும் நாசா கூட்டணி பீரியடிக் வேவ் டிஸ்க் பிரேக்கை உருவாக்கியிருக்கின்றது. விரைவில் உலக நாடுகள் சில மாசுகட்டுப்பாடு சார்ந்து புதிய விதிகளை அறிமுகப்படுத்த இருக்கின்றன. குறிப்பாக, வாகனங்கள் விஷயத்தில் ஐரோப்பிய ஒன்றியம், 'யூரோ 7' விதிகளை நடைமுறைப்படுத்த இருக்கின்றது.

இன்னும் ஒரு சில மாதங்ளில் அது நடைமுறைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த புதிய யூரோ 7 விதி, பிரேக் கட்டைகளில் இருந்து வெளிவரும் மாசு வெளிப்பாட்டைக் குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே ஆர்பிஸ் பிரேக்ஸ் புதுமுக டிஸ்க் பிரேக்ஸை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

நிறுவனம், இதுபோன்று இன்னும் பல புதிய தொழில்நுட்பத்திலான டிஸ்க்குகளை உருவாக்கியிருக்கின்றது. அந்தவகையில், அது உருவாக்கியிருக்கும் நெக்ஸ்ட் வேவ் டிஸ்க் வெகு விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்தே அது விற்பனைக்குக் கிடைக்க உள்ளது.

இதைத்தொடர்ந்து, 2023ஆம் ஆண்டில் ஈகோ வேவ் பிரேக்கையும் அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவையிரண்டிற்குமான ப்ரீ-ஆர்டர்களை ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஆர்பிஸ் பிரேக்ஸின் அதிகாரப்பூர்வ வலைதளம் வாயிலாகவே இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிறுவனம் உலகின் முதல் ஒருங்கிணைந்த சக்கரம் மற்றும் பிரேக்கையும் உருவாக்கியிருக்கின்றது. அதாவது வீலே பிரேக் பேடாக செயல்படுகின்ற மாதிரியான ஓர் தயாரிப்பையும் ஆர்பிஸ் பிரேக்ஸ் வடிவமைத்திருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு தயாரிப்புகளை வெளியிட நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
-
இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?
-
ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?
-
இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!