எந்த நாட்டிலிருந்தும் காரை இறக்குமதி செய்ய மாட்டோம்... பாக் தடாலடி முடிவு இந்தியாவிற்கு புதிய தலைவலி

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க எந்த நாட்டிலிருந்தும் கார் மற்றும் ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது என தடை விதித்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

 எந்த நாட்டி லிருந் தும் காரை இறக்கு மதி செய்ய மாட் டோம் . . . பாக் தடா லடி முடிவு இந் தியா விற்கு புதிய தலை வலி

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்நாட்டில் பண வீக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் இருநாட்டு அரசுகளும் திவாலாகும் நிலையில் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இந்த நிலையைச் சீராக்க வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியம் இல்லாத பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது.

 எந்த நாட்டி லிருந் தும் காரை இறக்கு மதி செய்ய மாட் டோம் . . . பாக் தடா லடி முடிவு இந் தியா விற்கு புதிய தலை வலி

முக்கியமான விலை அதிகம் கொண்ட உணவுப் பொருட்கள், சொக்குக்கான பொருட்கள், கார்கள், ஆடம்பர செல்போன்களை இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது. இப்படியாகச் செய்வது மூலம் பாகிஸ்தான் நாட்டில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மார்கெட்டில் மவுசு ஏறும் . இந்த பொருட்களை மக்கள் அதிகம் வாங்குவதால் வேலை வாய்ப்புகள் உருவாகும். என அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

 எந்த நாட்டி லிருந் தும் காரை இறக்கு மதி செய்ய மாட் டோம் . . . பாக் தடா லடி முடிவு இந் தியா விற்கு புதிய தலை வலி

பாகிஸ்தானைப் பொருத்தவரை ஆட்டோமொபைல் உற்பத்தியில் பெரிய நாடு இல்லை. அங்கு வெகு சில மற்றும் சிறிய ஆட்டோமொபைல் நிறுவனங்களே உள்ள. இந்நாட்டில் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களே அதிகம் விற்பனையாகிறது. குறிப்பா பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, சுஸூகி, ஆகிய பிராண்ட்களின் கார்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

 எந்த நாட்டி லிருந் தும் காரை இறக்கு மதி செய்ய மாட் டோம் . . . பாக் தடா லடி முடிவு இந் தியா விற்கு புதிய தலை வலி

தற்போது அதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து பாகிஸ்தானிற்குள் கார்களை இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளனர். இந்தியாவில் உள்ள மாருதி, டாடா உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களை பாகிஸ்தானிற்கு ஏற்றுமதி செய்து வந்தனர். தற்போது அது முடியாமல் போகவுள்ளது.

 எந்த நாட்டி லிருந் தும் காரை இறக்கு மதி செய்ய மாட் டோம் . . . பாக் தடா லடி முடிவு இந் தியா விற்கு புதிய தலை வலி

இதை விட பெரிய பாதிப்பு பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான மார்கெட்டிற்குதான். இந்தியாவிலிருந்து புதிய வாகனங்களை விடப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மறு விற்பனைக்குப் பாகிஸ்தானிற்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்படுகிறது. இந்த வாகனங்கள் பாகிஸ்தான் மக்களை பொறுத்தவரையில் குறைந்த விலையில் கிடைக்கும். இந்தியாவில் உள்ள விற்பனையாளருக்கு இந்தியாவை விடச் சிறப்பான விலையில் இந்த கார்களை விற்பனை செய்துவிட முடியும். தற்போது இந்த மார்கெட்டிற்கும் செம அடி விழுந்துள்ளது.

 எந்த நாட்டி லிருந் தும் காரை இறக்கு மதி செய்ய மாட் டோம் . . . பாக் தடா லடி முடிவு இந் தியா விற்கு புதிய தலை வலி

பாகிஸ்தான் தற்போது கார்கள் இறக்குமதியைத் தடை செய்துள்ளதால் அந்நாட்டிற்கான கார் தேவைகளை எப்படி பூர்த்தி செய்யப்போகிறது என்பது தெரியவில்லை. இந்நாட்டில் மட்டும் உற்பத்தியாகும் கார்கள் விற்பனைக்கு பத்தாது. அதே நிலை பல மாதங்களுக்குத் தொடர்ந்தால் பாகிஸ்தான் நாட்டில் வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயரும் அபாயமும் உள்ளது.

 எந்த நாட்டி லிருந் தும் காரை இறக்கு மதி செய்ய மாட் டோம் . . . பாக் தடா லடி முடிவு இந் தியா விற்கு புதிய தலை வலி

பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார சிக்கல் தற்போது மறைமுகமாக இந்தியாவைப் பாதித்துள்ளது. பாகிஸ்தான் ஏற்றுமதி தடைப்பட்ட காரணத்தால் அதனால் ஏற்படும் இழப்புகளை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Pakistan bans import on cars know full details
Story first published: Saturday, May 21, 2022, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X