போர்ஷேவின் இரு புதிய 718 ஜிடிஎஸ் 4.0 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலையே ரூ.1.46 கோடியை தாண்டுது...!

போர்ஷே இந்தியா நிறுவனம் 718 கேமன் ஜிடிஎஸ் 4.0 மற்றும் 718 பாக்ஸ்டர் ஜிடிஎஸ் 4.0 என்ற இரு புதிய கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு புதிய போர்ஷே கார்களை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

போர்ஷேவின் இரு புதிய 718 ஜிடிஎஸ் 4.0 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலையே ரூ.1.46 கோடியை தாண்டுது...!

போர்ஷே இந்தியா நிறுவனம் அதன் இரு புதிய கார்களின் அறிமுகத்தினை இன்று (ஜன.6) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இரு புதிய போர்ஷே கார்களாவன, 718 கேமன் ஜிடிஎஸ் 4.0 மற்றும் 718 பாக்ஸ்டர் ஜிடிஎஸ் 4.0 ஆகும். இவை இரண்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.1,46,50,000 மற்றும் ரூ.1,49,78,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

போர்ஷேவின் இரு புதிய 718 ஜிடிஎஸ் 4.0 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலையே ரூ.1.46 கோடியை தாண்டுது...!

இதில் போர்ஷே 718 கேமன் ஆனது இரு-கதவுகளை கொண்ட கூபே மாடலாகும். அதுவே 718 பாக்ஸ்டர், இரு-கதவுகளை கொண்ட கேப்ரியோலெட் ரக மாடலாகும். ஆக மொத்தத்தில் இவை இரண்டும் இரண்டு கதவுகளை மட்டுமே கொண்ட போர்ஷே காராகும். தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவற்றின் சமீபத்திய அவதாரங்கள் சில சிறப்பம்சங்களை பெற்று வந்துள்ளன.

போர்ஷேவின் இரு புதிய 718 ஜிடிஎஸ் 4.0 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலையே ரூ.1.46 கோடியை தாண்டுது...!

இதில், எல்இடி டிஆர்எல்களுடன் கருமையாக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், பிரத்யேகமான ஜிஎடிஎஸ் முன்பக்க கண்ணாடி, 20-இன்ச் சாடின் கருப்பு நிற அலாய் சக்கரங்கள், கருப்பு நிறத்தில் வெளிப்புற காற்று ப்ளேட்கள், பெரிய காற்று ஏற்பான்கள் மற்றும் கருப்பு நிற முன்பக்க ஸ்பாய்லர் உள்ளிட்டவை அடங்குகின்றன. வழக்கமான போர்ஷே 718 மாடல்களின் பரிணாம வளர்ச்சியாக இந்த ஜிடிஎஸ் 4.0 மாடல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

போர்ஷேவின் இரு புதிய 718 ஜிடிஎஸ் 4.0 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலையே ரூ.1.46 கோடியை தாண்டுது...!

இவற்றில் 4.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 6-சிலிண்டர் தட்டையான என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 395 பிஎச்பி மற்றும் 430 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இரு புதிய போர்ஷே கார்களிலும் பயணிகளின் பாதுகாப்பிற்கும், செயல்படுதிறனிற்கும் ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

போர்ஷேவின் இரு புதிய 718 ஜிடிஎஸ் 4.0 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலையே ரூ.1.46 கோடியை தாண்டுது...!

இந்த பாதுகாப்பு & செயல்படுதிறன் தொழிற்நுட்பங்களாக, போர்ஷே நிலைப்பாட்டு மேலாண்மை கட்டுப்பாடு, முழுமையான டார்க், எலக்ட்ரோ மெக்கானிக்கல் பவர் ஸ்டேரிங் சக்கரம், லாஞ்ச் கண்ட்ரோல் மற்றும் ஸ்போர்ட் க்ரோனோ தொகுப்பு உள்ளிட்டவற்றை சொல்லலாம். இவற்றுடன் இந்த புதிய போர்ஷே 718 ஜிடிஎஸ் கார்கள் போர்ஷே ஆக்டிவ் சஸ்பென்ஷன் அமைப்புகளையும் பெற்றுள்ளன.

போர்ஷேவின் இரு புதிய 718 ஜிடிஎஸ் 4.0 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலையே ரூ.1.46 கோடியை தாண்டுது...!

சுருக்கமாக PASM எனப்படும் இந்த சஸ்பென்ஷன் அமைப்புகளில் விரைப்பான சுருள்கள் மற்றும் விரைப்பான ரோல்-எதிர்ப்பு பார்கள் உள்ளிட்டவையும் அடங்குகின்றன. உட்புறத்தில் பயணிகளுக்கான மற்ற சவுகரிய அம்சங்களாக பிசிஎம் எனப்படும் போர்ஷே தகவல் தொடர்பு அமைப்புடன் 7-இன்ச் தொடுத்திரை இந்த ஜிடிஎஸ் 4.0 மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது.

போர்ஷேவின் இரு புதிய 718 ஜிடிஎஸ் 4.0 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலையே ரூ.1.46 கோடியை தாண்டுது...!

இதனுடன் 4.6 இன்ச் வண்ண திரை உடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், தானியங்கி ஏசி, கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றையும் சிறப்பம்சங்களாக இவை உட்புற கேபினில் கொண்டுள்ளன. கடைசியாக இந்தியாவில் பனமேரா பிளாட்டினம் எடிசனை இந்த ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.

போர்ஷேவின் இரு புதிய 718 ஜிடிஎஸ் 4.0 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலையே ரூ.1.46 கோடியை தாண்டுது...!

வழக்கமான பனமேரா மாடலை காட்டிலும் ஆற்றல்மிக்கதாக உருவாக்கப்பட்டுள்ள இது அதேநேரத்தில் தோற்றத்திலும் கவர்ச்சியானதாக விளங்குகிறது. கடந்த 2021 நவம்பரில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட பனமேரா பிளாட்டினம் எடிசனுக்கு இந்தியாவில் முன்பதிவுகள் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதியில் துவங்கின. இந்த ஸ்பெஷல் எடிசன் பனமேரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.71 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போர்ஷேவின் இரு புதிய 718 ஜிடிஎஸ் 4.0 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலையே ரூ.1.46 கோடியை தாண்டுது...!

ஆனால் ஸ்டாண்டர்ட் போர்ஷே பனமேரா இந்தியாவில் ரூ.1.55 கோடி என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைகிறது. அதிகப்பட்சமாக பனமேராவின் டர்போ எஸ் இ-ஹைப்ரீட் வேரியண்ட்டின் விலை ரூ.2.71 கோடியாக உள்ளது. இவற்றிற்கு இடையில்தான் புதிய பிளாட்டினம் எடிசன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த பிளாட்டினம் எடிசனின் வெளிப்புறங்களில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தையும் லோகோக்களில் மற்றும் சக்கரங்களில் ப்ரேக் காலிபர்களாக பார்க்க முடிகிறது. இந்த ஸ்பெஷல் பனமேரா காரில் இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche launches 718 cayman gts 4 0 718 boxster gts 4 0 in india price details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X