இதுவரை இல்லாத புதிய அடர் கருப்பு நிறத்தில் ரெனால்ட் கைகர் எஸ்யூவி!! கம்பீரமாக ஷோரூமில்...

முற்றிலுமாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட ரெனால்ட் கைகர் எஸ்யூவி கார் ஷோரூம் ஒன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளது. கைகரில் எதற்காக இந்த புதிய நிறத்தேர்வு? புதிய ஸ்பெஷல் எடிசன் ஏதேனும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதா? என்பவற்றை குறித்து இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இதுவரை இல்லாத புதிய அடர் கருப்பு நிறத்தில் ரெனால்ட் கைகர் எஸ்யூவி!! கம்பீரமாக ஷோரூமில்...

இந்திய சந்தையில் தனக்கான ஓர் இடத்தை பிடிக்க நீண்ட வருடங்களாக போராடிவரும் ரெனால்ட்டிற்கு கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கைகர் தற்போதைக்கு நம்பிக்கைக்குரிய தயாரிப்பாக விளங்குகிறது. இதற்கு காரணம், இந்திய சந்தையில் தற்சமயம் பலத்த போட்டிமிகுந்ததாக விளங்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் ரெனால்ட் சார்பில் கைகர் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை இல்லாத புதிய அடர் கருப்பு நிறத்தில் ரெனால்ட் கைகர் எஸ்யூவி!! கம்பீரமாக ஷோரூமில்...

ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 2,500 யூனிட்கள் விற்பனை செய்யப்படும் கைகர் மாடலுக்கும் மற்ற போட்டி காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களை போல் புதிய நிறத்தேர்வை வழங்க ரெனால்ட் திட்டமிட்டுள்ளதுபோல் தெரிகிறது. இவ்வாறான ஸ்பெஷல் நிறத்தேர்வுகள் பொதுவாக இந்திய சந்தையில் இந்த பிரெஞ்சு கார் பிராண்டின் க்விட் ஹேட்ச்பேக் மாடலுக்கே வழக்கமாக வழங்கப்படுவது உண்டு.

இதுவரை இல்லாத புதிய அடர் கருப்பு நிறத்தில் ரெனால்ட் கைகர் எஸ்யூவி!! கம்பீரமாக ஷோரூமில்...

இதில் தற்போது கைகர் மாடலும் இணையவுள்ளது. இந்த ரெனால்ட் காம்பெக்ட் எஸ்யூவி கார் தற்சமயம் நீலம், சில்வர், வெள்ளை, ப்ரவுன், க்ரே மற்றும் சிவப்பு என்ற 6 விதமான நிறத்தேர்வுகளில் சந்தைப்படுத்தப்படுகிறது. கருப்பு நிறத்தில் தற்போது வரையில் எந்த ரெனலாட் கைகர் காரும் சாலையில் காட்சி தந்தது இல்லை. ஆனால் இந்த படத்தை பாருங்கள்...

இதுவரை இல்லாத புதிய அடர் கருப்பு நிறத்தில் ரெனால்ட் கைகர் எஸ்யூவி!! கம்பீரமாக ஷோரூமில்...

Image Courtesy: Raftaar 7811/YouTube

ரஃப்டார் 7811 என்ற யுடியூப்பர் வாயிலாக கிடைத்துள்ள இந்த படத்தில், ஷோரூம் ஒன்றில் கைகர் எஸ்யூவி கார் ஒன்று முற்றிலுமாக கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. ரெனால்ட் கைகருக்கு புதியதாக கருப்பு நிறத்தேர்வு வழங்கப்பட்டுள்ளதா? அல்லது ஸ்பெஷல் எடிசன் ஏதேனும் வரவுள்ளதா என்பது தெரியவில்லை. ஏனெனில் ரெனால்ட்டின் சார்பில் புதிய கைகர் வேரியண்ட் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

இதுவரை இல்லாத புதிய அடர் கருப்பு நிறத்தில் ரெனால்ட் கைகர் எஸ்யூவி!! கம்பீரமாக ஷோரூமில்...

இந்த நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களிலும் இது தொடர்பான பதிவு எதுவும் இல்லை. ஒருவேளை... இனி வெளிவரலாம். அதேநேரம், இந்த குறிப்பிட்ட கைகர் கார் மட்டும் டீலர்ஷிப் மூலமாக மேற்கொள்ளப்பட்ட மாடிஃபிகேஷனாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஆர்.எக்ஸ்.இ, ஆர்.எக்ஸ்.எல், ஆர்.எக்ஸ்.டி மற்றும் ஆர்.எக்ஸ்.இசட் என்கிற 4 விதமான வேரியண்ட்களில் ரெனால்ட் கைகர் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை இல்லாத புதிய அடர் கருப்பு நிறத்தில் ரெனால்ட் கைகர் எஸ்யூவி!! கம்பீரமாக ஷோரூமில்...

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.79 லட்சத்தில் இருந்து ரூ.10.23 லட்சம் வரையில் உள்ளன. கைகரில் இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளை ரெனால்ட் நிறுவனம் வழங்குகிறது. இதில் ஒன்றான 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது விலை குறைவான, ஆரம்ப நிலை வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது.

இதுவரை இல்லாத புதிய அடர் கருப்பு நிறத்தில் ரெனால்ட் கைகர் எஸ்யூவி!! கம்பீரமாக ஷோரூமில்...

இதனை காட்டிலும் ஆற்றல்மிக்கதாக விளங்கும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மூலம் 99 பிஎச்பி மற்றும் 160 என்எம் (ஆட்டோமேட்டிக் தேர்வில் 152 என்எம்) டார்க் திறன் வரையில் பெறலாம். இவை இரண்டுடனும் நிலையான தேர்வாக 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. கூடுதல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக நேச்சுரலி அஸ்பிரேட்டட் உடன் 5-ஸ்பீடு ஏஎம்டி-யும், டர்போ என்ஜின் உடன் சிவிடியும் கைகரில் கொடுக்கப்படுகின்றன.

இதுவரை இல்லாத புதிய அடர் கருப்பு நிறத்தில் ரெனால்ட் கைகர் எஸ்யூவி!! கம்பீரமாக ஷோரூமில்...

கைகரின் டாப் ஆர்.எக்ஸ்.இசட் வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், வயர் இல்லா சார்ஜிங், கேபினை சுற்றிலும் விளக்குகள், என்ஜினை ஸ்டார்ட்/ஸ்டாப் செய்ய அழுத்து-பொத்தான், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இதுவரை இல்லாத புதிய அடர் கருப்பு நிறத்தில் ரெனால்ட் கைகர் எஸ்யூவி!! கம்பீரமாக ஷோரூமில்...

இதில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடியதாக உள்ளது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் கைகர் மாடல் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு ஐந்திற்கு 4 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுவே, குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 2 நட்சத்திரங்களை மட்டுமே இந்த ரெனால்ட் கார் பெற்றுள்ளது.

இதுவரை இல்லாத புதிய அடர் கருப்பு நிறத்தில் ரெனால்ட் கைகர் எஸ்யூவி!! கம்பீரமாக ஷோரூமில்...

ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் வடிவமைக்க பயன்படுத்தப்பட்ட அதே சிஎம்எஃப்ஏ+ ப்ளாட்ஃபாரத்தில்தான் கைகர் காம்பெக்ட் எஸ்யூவியும் உருவாக்கப்படுகிறது. மேலும், இதே இயக்குத்தளத்தின் அடிப்படையில்தான் கூட்டணி ஜப்பானிய நிறுவனமான நிஸானின் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிஸான் மேக்னைட் ஆசியன் என்சிஏபி சோதனையில் 4 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault kiger black colour spotted find here all new details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X