விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' காரை பற்றிய இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்கு!

விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' கார் புதிய மைல்கல் ஒன்றை கடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' காரை பற்றிய இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ரெனால்ட் கைகர் (Renault Kiger). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும். கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெனால்ட் கைகர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதால், ரெனால்ட் கைகர் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' காரை பற்றிய இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்கு!

இதன் காரணமாக உற்பத்தியில் புதிய மைல்கல் ஒன்றை ரெனால்ட் கைகர் கார் தற்போது கடந்துள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், அதற்குள்ளாக 50 ஆயிரம் கைகர் கார்களை ரெனால்ட் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. 50 ஆயிரம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை கைகர் கார் கடந்திருப்பதாக ரெனால்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' காரை பற்றிய இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்கு!

இங்கே ஒரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். 'ஆசியாவின் டெட்ராய்டு' (Detroit of Asia) என வர்ணிக்கப்படும் தமிழக தலைநகர் சென்னையில்தான் ரெனால்ட் கைகர் கார் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் கார்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' காரை பற்றிய இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்கு!

இதன்படி தென் ஆப்ரிக்கா, கென்யா, ஜிம்பாப்வே, பெர்முடா, இந்தோனேஷியா, நேபாளம் மற்றும் பூடான் என உலகின் பல்வேறு நாடுகளிலும் 'மேட் இன் தமிழ் நாடு' ரெனால்ட் கைகர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியிருப்பதை கொண்டாடும் விதமாக, கைகர் காரில் புதிய 'ஸ்டீல்த் ப்ளாக்' (Stealth Black) என்ற வண்ண தேர்வை ரெனால்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' காரை பற்றிய இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்கு!

ரெனால்ட் கைகர் கார், 'சிஎம்எஃப்-ஏ+' (CMF-A+) பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் கைகர் காரின் மிக முக்கியமான போட்டி மாடல்களில் ஒன்றான நிஸான் மேக்னைட் காரும் கூட இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரெனால்ட் கைகர் காரில் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' காரை பற்றிய இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்கு!

இதில், 1.0 லிட்டர், 3-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஹெச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர 1.0 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் ரெனால்ட் கைகர் காரில் வழங்கப்படுகிறது.

விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' காரை பற்றிய இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்கு!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஹெச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகளுடன் இந்த இன்ஜின் கிடைக்கும். ரெனால்ட் கைகர் காரில், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், மற்றும் பிஎம் 2.5 ஏர் ஃபில்டர் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.

விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' காரை பற்றிய இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்கு!

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் கைகர் காரின் ஆரம்ப விலை 5.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.62 லட்ச ரூபாயாக இருக்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டிருப்பவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் மிகவும் சவால் நிறைந்த செக்மெண்ட்டில் ரெனால்ட் கைகர் கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' காரை பற்றிய இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்கு!

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ( Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்கள், ரெனால்ட் கைகர் காரின் மிக முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன.

விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' காரை பற்றிய இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்கு!

இதில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகிய கார்களின் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடல்கள் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட் கைகர் காரின் 2022 மாடலும் கூட நடப்பாண்டு மார்ச் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

விலை குறைவான 'மேட் இன் தமிழ்நாடு' காரை பற்றிய இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்கு!

முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது ரெனால்ட் கைகர் காரின் 2022 மாடல், பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சந்தையில் கடுமையான போட்டி, கொரோனா வைரஸ் மற்றும் செமிகண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறை என பல்வேறு பிரச்னைகளையும் கடந்து, 50 ஆயிரம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை ரெனால்ட் கைகர் கார் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Renault kiger compact suv achieves 50000 units production milestone
Story first published: Monday, July 4, 2022, 17:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X