என்னங்க சொல்றீங்க ரூ.23.20 லட்சமா!! பிரேசில் நாட்டில் ரெனால்ட் க்விட் இவி அறிமுகம்!

குறிப்பாக நமது இந்தியர்களை ஆச்சிரியப்பட வைக்கும் வகையில் சுமார் ரூ.23.20 லட்சத்தில் ரெனால்ட் க்விட் இவி பிரேசிலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

என்னங்க சொல்றீங்க ரூ.23.20 லட்சமா!! பிரேசில் நாட்டில் ரெனால்ட் க்விட் இவி அறிமுகம்!

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு வேகமாக விரிவடைந்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் தற்சமயம் எரிபொருள் என்ஜின் கார்களுக்கு இணையாக எலக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி கொண்டிருக்கின்றன.

என்னங்க சொல்றீங்க ரூ.23.20 லட்சமா!! பிரேசில் நாட்டில் ரெனால்ட் க்விட் இவி அறிமுகம்!

அத்தகைய பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுள் ஒன்றான பிரேசிலில் சமீப மாதங்களாக ரெனால்ட் நிறுவனம் க்விட் ஹேட்ச்பேக் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனை சோதனை செய்துவந்தது. இந்த நிலையில் தற்போது எலக்ட்ரிக் க்விட் கார், க்விட் இ-டெக் (Kwid E-Tech) என்கிற பெயரில் அந்த நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க ரூ.23.20 லட்சமா!! பிரேசில் நாட்டில் ரெனால்ட் க்விட் இவி அறிமுகம்!

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் க்விட் இ-டெக் காரினை பிரேசிலில் ரூ.23.20 லட்சம் என்கிற விலை அறிமுகம் செய்துள்ளது. இந்த விலை நம் இந்திய சந்தையை பொருத்தவரையில் அதிகமாக தோன்றலாம், ஆனால் உண்மையில் ரெனால்ட்டின் சர்வதேச கார்கள் வரிசையில் க்விட் இ-டெக் ஆனது விலை குறைவான எலக்ட்ரிக் காராக விளங்குகிறது.

என்னங்க சொல்றீங்க ரூ.23.20 லட்சமா!! பிரேசில் நாட்டில் ரெனால்ட் க்விட் இவி அறிமுகம்!

இந்த ரெனால்ட் எலக்ட்ரிக் காரே ஐரோப்பிய சந்தைகளில் டேசியா ஸ்ப்ரிங் என்கிற பெயரில் விற்பனையில் உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், இந்தியாவில் விற்பனையில் உள்ள ரெனால்ட் க்விட்டிற்கும், க்விட் இ-டெக்கிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் ஒரு எலக்ட்ரிக் கார் தனது அடையாளமாக என்னென்ன கொண்டிருக்குமோ அவற்றை க்விட் இ-டெக்கும் கொண்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க ரூ.23.20 லட்சமா!! பிரேசில் நாட்டில் ரெனால்ட் க்விட் இவி அறிமுகம்!

குறிப்பாக, மூடப்பட்ட க்ரில் அமைப்பு மறக்காமல் இந்த எலக்ட்ரிக் காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் க்ரில் அமைப்பில் ரெனால்ட்டின் லோகோவிற்கு கீழே இரு வளைவான க்ரோம் ஸ்ட்ரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பெயரை வெளிக்காட்டும் வகையில் இ-டெக் முத்திரைகள் ஆங்காங்கே உள்ளன. இவற்றுடன் புதிய அலாய் சக்கரங்கள் இந்த எலக்ட்ரிக் காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க ரூ.23.20 லட்சமா!! பிரேசில் நாட்டில் ரெனால்ட் க்விட் இவி அறிமுகம்!

பிரேசில் நாட்டில் நோரோன்ஹா பச்சை, பனிபாறையின் வெள்ளை மற்றும் டைமண்ட் சில்வர் என்கிற 3 விதமான நிறத்தேர்வுகளில் ரெனால்ட் க்விட் இ-டெக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உட்புறத்தில் பிரத்யேகமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 4-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரத்தை இந்த க்விட் எலக்ட்ரிக் கார் கொண்டுள்ளது. ஆனால் கியர் தேர்ந்தெடுப்பான் இந்திய க்விட்டில் உள்ளதை போன்று அதே வட்ட வடிவில் உள்ளது.

என்னங்க சொல்றீங்க ரூ.23.20 லட்சமா!! பிரேசில் நாட்டில் ரெனால்ட் க்விட் இவி அறிமுகம்!

இவற்றுடன் க்விட் இ-டெக்கில் 7-இன்ச் தொடுத்திரை அமைப்பு, பவர் ஜன்னல் கண்ணாடிகள், மேனுவல் ஏசி மற்றும் குரல் கண்டறிதல் உள்ளிட்ட வசதிகளையும் ரெனால்ட் வழங்கியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு பிரேக் உதவி உடன் ஏபிஎஸ், ஹில்-ஸ்டார்ட் உதவி, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 6 காற்றுப்பைகள் மற்றும் டயரின் அழுத்தத்தை கண்காணிப்பான் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

என்னங்க சொல்றீங்க ரூ.23.20 லட்சமா!! பிரேசில் நாட்டில் ரெனால்ட் க்விட் இவி அறிமுகம்!

பிரேசில் நாட்டு சந்தையில் க்விட் இ-டெக் காரில் அதிகப்பட்சமாக 65 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆற்றலை வழங்க 26.8kWh பேட்டரி தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈக்கோ மோடில் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் பொருட்டு, சற்று குறைவாக 44 பிஎஸ் வரையில் மட்டுமே இயக்க ஆற்றலை பெற முடியும்.

என்னங்க சொல்றீங்க ரூ.23.20 லட்சமா!! பிரேசில் நாட்டில் ரெனால்ட் க்விட் இவி அறிமுகம்!

இந்த எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரில் 0-வில் இருந்து 50kmph வேகத்தை வெறும் 4.1 வினாடிகளில் எட்டிவிடலாமாம். 977 கிலோ மட்டுமே எடை கொண்டதாக உள்ள இந்த எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக மணிக்கு சுமார் 298கிமீ வேகத்தில் பயணிக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே கூறியதுதான், க்விட் இ-டெக்கில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வழங்கப்பட்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க ரூ.23.20 லட்சமா!! பிரேசில் நாட்டில் ரெனால்ட் க்விட் இவி அறிமுகம்!

இந்த ரெனால்ட் இவி-ஐ 7 கிலோவாட்ஸ் சுவர் பெட்டக சார்ஜரின் மூலமாகவோ அல்லது டிசி விரைவு சார்ஜரின் மூலமாகவோ சார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் சுவர் பெட்டக சார்ஜரின் மூலம் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப கிட்டத்தட்ட 3 மணிநேரங்களாகும் என கூறும் ரெனால்ட், அதுவே டிசி விரைவு சார்ஜரின் மூலமாக 15-80% சார்ஜை வெறும் 40 நிமிடங்களில் நிரப்பிவிடலாம் என்கிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault kwid ev launched in brazil market
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X