ரெனால்டுக்கு ஒன்னும் முடியலபோல... டாடாவையே வம்புக்கு இழுக்க போகுதாம்! புதிய கார் மேல அவ்ளோ நம்பிக்கை!

ரெனால்ட் நிறுவனம் டாடாவின் சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்ட எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு போட்டியளிக்கும் வகையில் புதுமுக கார் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் முன்னணி கார் எஸ்யூவி ரக கார் மாடல்களாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700, எம்ஜி ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த கார் மாடல்கள் அனைத்தும் அதிகம் பிரீமியம் வசதிகள் நிறைந்த பெரிய உருவம் கொண்ட கார் மாடல்களாகும். இந்த கார் மாடலுக்கு போட்டியாகவே ரெனால்ட் நிறுவனம் வெகு விரைவில் ஓர் எஸ்யூவி காரை களமிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்

இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் அல்ல. விரைவில் இதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் தற்போது க்விட், கைகர், ட்ரைபர் ஆகிய மூன்று கார் மாடல்கள் மட்டுமே விற்பனையில் இருக்கின்றன. இவற்றில் ட்ரைபரே நிறுவனத்தின் அதிகம் இருக்கைகள் கொண்ட கார் மாடலாக இருக்கின்றது. இந்த காரை அடுத்து அதிக இருக்கை வசதிகள் கொண்டதாக விரைவில் அறிமுகமாக இருக்கும் கார் மாடல் இருக்கும்.

ஆனால், அது ட்ரைபரைக் காட்டிலும் அதிக பிரீமியம் வசதிகள் நிறைந்த காராக இருக்க அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றன. அதன் போட்டியாளர்களான மஹிந்திரா எக்ஸ்யூவி 700, எம்ஜி ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்டவையும் மிக மிக அதிக சிறப்பு வசதிகள் கொண்டவையாகவே விற்பனையில் இருக்கின்றன. இவற்றிற்கு டஃப் கொடுக்க வேண்டும் எனில் ரெனால்டின் புதிய வருகையும் அதிக சிறப்புகள் கொண்டதாக இருந்தால் மட்டுமே முடியும்.

கார்

நிறுவனம் பிக்ஸ்டர் எனும் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வராலம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கான்செப்ட் மாடலாக நிறுவனம் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. தனது சகோதர நிறுவனமான டாசியாவின் கீழே அதனை வெளியீடு செய்தது. இதையே விரைவில் நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் மேற்கொண்டு வரும் வர்த்தக பணிகளை விரிவாக்கம் செய்யும் முயற்சியின் அடிப்படையிலேயே இந்த பணியில் ரெனால்ட் நிறுவனம் களமிறங்கி உள்ளது. இந்த பணியில் ரெனால்ட் மட்டுமின்றி நிஸானும் களமிறங்கி உள்ளது. இரு நிறுவனங்களும் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டை இந்தியாவில் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பெரும் முதலீட்டை நிறுவனங்கள் புதிய கார்களில் போட இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய கார்கள் புதிய பிளாட்பாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட இருக்கின்றன. தற்போது நிறுவனம் சிஎம்எஃப்-ஏ மற்றும் எம்ஓ பிளாட்பாரங்களயே தனது கார்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இதில், எம்ஓ என்பது மிகவும் பழைய பிளாட்பாரம் ஆகும். அதை வெளியேற்றிவிட்டு சிஎம்எஃப்-பி எனும் புதிய பிளாட்பாரத்தை நிறுவனம் களமிறக்க இருக்கம் கூறப்படுகின்றது. இந்த பிளாட்பாரம் மிகவும் கவர்ச்சியான மற்றும் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட புதிய கார்களை தயாரிக்க பயன்படுத்தப்படும்.

இதைக் கொண்டே மேலே பார்த்த கார் மாடல்களுக்கு கடுமையான போட்டியை நிஸான் திட்டமிட்டிருக்கின்றது. இதன் போட்டியாளர்கள் அனைத்திற்கும் இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, மஹிந்திராவின் எக்ஸ்யூவி 700 காருக்கு நாட்டில் வருடக் கணக்கில் காத்திருக்கும் அளவிற்கு டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமல்ல டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்கஸார் காருக்கும் இந்தியாவில் கணிசமான அளவில் சிறந்த வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த வரேவற்பில் லேசான தாக்கத்தை நிஸானின் புதுமுக காரின் வருகை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரெனால்ட் நிறுவனம் பிக்ஸ்டர் காரை களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்ற அதேவேலையில், மறுபக்கம் புதிய தலைமுறை டஸ்டர் காரை அந்நிறுவனம் களமிறக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault to be launch new 7 seater in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X