எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

காரை நிறுத்தும்போது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துதல் அல்லது ரிவர்ஸ் எடுத்து பார்க்கிங் செய்வது இரண்டில் எது நல்லது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

நம்மில் பலர் கார் ஓட்டுவதில் வேண்டுமானால் கை தேர்ந்தவர்களாக இருக்கலாம். அதை நிறுத்த (பார்க்கிங்) செய்யும் விஷயத்திற்கு வரும்போது, மிகப் பெரிய ஜாம்பவான் வாகன ஓட்டுநர்கள்கூட சில நேரங்களில் சொதப்பிவிடுகின்றனர். ஏனெனில், இங்கு வாகனத்தை எப்படி ஓட்டுவது என்று கற்பிப்பவர்களே அதிகமாக உள்ளனர். முறையாக வாகனங்களை நிறுத்துவது எப்படி என்று கற்று தருபவர்கள் மிகவும் குறைவே.

எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

இதனை அறிந்தே, வாகனம் சார்ந்து பல்வேறு டிப்ஸ்களை வழங்கி வரும் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம், தற்போது வாகனங்களை எப்படி நிறுத்தினால் சிறந்தது என்பது குறித்து விளக்கும் தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றது. வாருங்கள் விரிவான பிதிவிற்குள் போகலாம்.

எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

பார்க்கிங்:

பார்க்கிங் மொத்தம் மூன்று வகைப்படும். பாரல்லல்லாக நிறுத்துவது, (Parallel parking), பே பார்க்கிங் (Bay parking) செய்வது மற்றும் ஆங்கிள் பார்க்கிங் (Angle parking). இவையே அந்த மூன்று வகை பார்க்கிங்குகள் ஆகும்.

எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

பாரல்லல் பார்க்கிங்:

சாலையோரங்களில் வலது அல்லது இடது பக்கமாக நேராக இருக்கும் வகையில் நிறுத்தும் முறையையே பாரல்லல் பார்க்கிங் என அழைக்கின்றனர். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் சாலையில் வாகனங்கள் பயணிக்கும் திசையை நோக்கியவாறு நிறுத்துவதே பாரல்லல் பார்க்கிங் ஆகும். இந்த முறையில் காரை நிறுத்தும்போது நாம் பார்க்கிங் செய்திருக்கும் காரை காட்டிலும் மூன்று மடங்கு இடைவெளி இருந்தால் வாகனத்தை வெளியேற்றுவது மிகவும் சுலபம்.

எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

அதேவேலையில், முன் மற்றும் பின் பக்கத்தில் பிற வாகனங்களும் நிறுத்தப்பட்டிருக்குமானால் வாகனத்தை வெளியேற்றுவது சற்று சிரமமே. கொஞ்சம் ரிவர்ஸ், கொஞ்சம் ஃபார்வேர்டு, இதனுடன் சில நுணுக்கங்களை வழங்குவதன் வாயிலாக மட்டுமே காரை சுலபமாக வெளியேற்ற முடியும். இவ்வாறு வாகனங்களை நிறுத்துவதன் வாயிலாக சாலையின் அகலம் பெருமளவில் பாதிக்கப்படாது. எனவேதான் சில முக்கிய சாலைகளில் இந்த முறை பார்க்கிங் வசதி வழங்கப்படுகின்றது.

எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

பே பார்க்கிங்:

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்திக் கொண்டிருக்கும் நிச்சயம் இத்தகைய பார்க்கிங்கை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நம்புகின்றோம். இந்த நிலை பார்க்கிங்கில் காரை 90 டிகிரி திருப்பிய வண்ணம் நிறுத்த வேண்டியிருக்கும். அதாவது, சாலையோர நடைபாதையை காரின் பின் வீல் அல்லது முன் வீல் தொடும்படி இந்த பார்க்கிங் இருக்கும். இந்த பார்க்கிங் சிஸ்டமே பெரும்பாலான அலுவலக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களில் பயன்படுத்தப்படுத்தப்படுகின்றது.

எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

இந்த பே பார்க்கிங்கில் சில சிக்கல்கள் உள்ளன. நாம் ஒரு வேலை வாகனத்தை ஃபார்வார்டு டைப்பில் பார்க் செய்திருந்தால்,வாகனத்தை வெளியேற்றுவதற்கு வேறு ஒரு நபரின் உதவி தேவைப்படும். மலை மலை திரைப்படத்தில் வரும் கஞ்சா கருப்பு போன்ற ஓர் நபரை இந்த விஷயத்திற்கு கூப்பிட்றாதீங்க. ரிவர்ஸ் பார்க்க தெரியாமல் விபத்தில் சிக்க நேரிடும். அதுவே ரிவர்ஸ் பார்க் செய்திருந்தால் எவரின் உதவியும் இன்றி காரை வெளியேற்றிவிடலாம். சாலைமீது அதிக பார்வையைச் செலுத்த இந்த வகை பார்க்கிங் உதவியாக இருக்கும்.

எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

அதேநேரத்தில், உதவிக்கு யாரும் இல்லாத நேரங்களில் ஒரு முறைக்கு பல முறைக்கு பிற வாகனங்களின் குறுக்கீட்டை அறிந்து பின்னர் பார்க்கிங்கை விட்டு வெளியேறுவது மிக சிறந்தது. தற்போதைய நவீன காலத்தில் இம்மாதிரியான இக்கட்டான சூழலை சமாளிக்கும் பொருட்டு அதிகளவில் நவீன கருவிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

குறிப்பாக சென்சாருடன் கூடிய பார்க்கிங் கேமிரா வழங்கப்படுகின்றது. இது பார்க் செய்யும்போதும், பார்க்கிங்கில் இருந்து வாகனத்தை வெளியேற்றும்போது பாதுகாப்பாக வாகனத்தை வெளியேற்ற உதவியாக இருக்கும். அதேவேலையில், ரிவர்ஸின்போது ஏற்படும் பாதிப்புகளைக் கணிசமாகக் குறைக்கும் பொருட்டே வாகன உற்பத்தியாளர்கள் காரின் பின்பகுதியை முன்பக்கத்தைக் காட்டிலும் சற்று உயரமாக கட்டமைத்திருக்கின்றனர். சேதாரத்தைக் குறைக்கும் பொருட்டு இந்த யுக்தி கையாளப்படுகின்றது.

எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

ஆங்கிள் பார்க்கிங்:

பே பார்க்கிங் போன்றுதான் இந்த ஆங்கிள் பார்க்கிங்கும். ஆனால், மிக ஈசியான ஒன்று. சென்னை புறநகர் பேருந்து நிலையம் இதற்கு மிக சிறந்த உதாரணம். இந்த நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படுவதற்கு ஆங்கிள் பார்க்கிங் ரக நிறுத்தமே பயன்படுத்தப்படுகின்றது. வாகனங்களை சுலபமாகக் கொண்டு வந்து நிறுத்த மற்றும் வெளியேற்ற இது மிகுந்த உதவியாக இருக்கும். எனவேதான் குறிப்பிட்ட சில இடங்களில் இந்த முறை பார்க்கிங் தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

ரிவர்ஸ் பார்க்கிங்கே பாதுகாப்பானது:

பார்க்கிங்கில் நிறுத்தும்போது வாகனத்தை வந்தவாறே அப்படியே எடுத்துச் சென்று நிறுத்துவது ஈசியனாதாக இருக்கலாம். இதனை ஃபார்வார்டு பார்க்கிங் என்கின்றனர்.ஆனால், இதைவிட பாதுகாப்பானதாக ரிவர்ஸ் பார்க்கிங் இருக்கின்றது. வாகனத்தை முன்னரே ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதன் வாயிலாக பார்க்கிங்கை விட்டு வெளியேற்றுவது சுலபமாகிறது. குறிப்பாக, நம்மால் பாதுகாப்பை உணர முடியும். சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நம்மால் காண முடியும் என்பதால் விபத்தை பல மடங்கு முன்னெச்சரிக்கையுடன் தவிர்க்க முடியும்.

எது பாதுகாப்பான பார்க்கிங்?... ரிவர்ஸ் பார்க்கிங் அல்லது முன்னோக்கி பார்த்தவாறு நிறுத்துவது?..

மேலும், முன்னரே ரிவர்ஸ் செய்து வாகனத்தை நிறுத்துவதனால் எரிபொருளும் கணிசமாக சிக்கனமாகும். காரை ரிவர்ஸ் எடுக்க அதிக எரிபொருள் தேவைப்படும். குறிப்பாக, எஞ்ஜின் அதிக உஷ்ன நிலையில் இருக்க வேண்டும். ஒரு வேலை கார் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருக்குமானால், எஞ்ஜின் குளிர்ச்சியடைந்த நிலைியல் இருக்கும். இந்த மாததிரியான சூழலில் காரை ரிவர்ஸ் செய்யும்போது அதிக எரிபொருள் எஞ்ஜினை உஷ்னப்படுத்த உறிஞ்சப்படும். இதனைத்தவிர்க்க, பார்க்க செய்யும் முன்னரே காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்திவிடுவது நல்லது. இதனால்தான் ரிவர்ஸ் பார்க்கிங் முறையே பெஸ்ட் என்கின்றனர் ஆட்டோ துறை வல்லநுர்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Reverse parking or forward parking which one is safe
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X