இன்டிகேட்டர் போடாமல் சடாரென திரும்பிய தாத்தா.. இனி வண்டி ஓட்டுற ஆசையே அவருக்கு வராது! தரமான ஆப்பு வைத்த போலீஸ்

சைடு இன்டிகேட்டர் போடாமல் ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய முதியவர் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இன்டிகேட்டர் போடமால் சடாரென திரும்பிய தாத்தா... இனி வண்டி ஓட்டுற ஆசையே அவருக்கு வராது! தரமான ஆப்பு வைத்த போலீஸ்!

இந்தியாவில் அரங்கேறும் பெரும்பாலான விபத்துகள் இருசக்கர வாகனங்கள் சார்ந்தே அரங்கேறுகின்றன. இதனால்தான் அவைகளுக்கென கெடுபிடி நிறைந்த போக்குவரத்து விதிகள் மோட்டார் வாகன சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தினந்தோறும் டூ-வீலர்கள் சார்ந்து விபத்துகள் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. மேலும், நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் விபத்துக்குள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காததும், ஆஜாக்ரதையாக (அடாவடியாக) இருசக்கர வாகனங்களை இயக்குவதனாலயே அதிகளவில் விபத்துகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இன்டிகேட்டர் போடமால் சடாரென திரும்பிய தாத்தா... இனி வண்டி ஓட்டுற ஆசையே அவருக்கு வராது! தரமான ஆப்பு வைத்த போலீஸ்!

இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் நிகழ்வே நமது அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது அரங்கேறியிருக்கின்றது. நல்வாய்ப்பாக பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதன் காரணத்தினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. வீடியோவில் பேருந்து ஒன்று மிதமான வேகத்தில் வந்துக் கொண்டிருக்க, அப்போது முன்னால் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று சடாரென இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் திரும்பியது.

இன்டிகேட்டர் போடமால் சடாரென திரும்பிய தாத்தா... இனி வண்டி ஓட்டுற ஆசையே அவருக்கு வராது! தரமான ஆப்பு வைத்த போலீஸ்!

இருசக்கர வாகனம் திரும்புவதை சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை திருப்பி, அதேநேரத்தில் பிரேக்கையும் பிடித்தார். இவ்வாறு முயல் வேகத்தில் செயல்பட்டதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. அந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

இன்டிகேட்டர் போடமால் சடாரென திரும்பிய தாத்தா... இனி வண்டி ஓட்டுற ஆசையே அவருக்கு வராது! தரமான ஆப்பு வைத்த போலீஸ்!

வைரலாகும் இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கண்மூடித் தனமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர், ஓர் வயதான முதியவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் வாகனத்தை ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லை என்பது காவல்துறையினரின் ஆய்வின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

இன்டிகேட்டர் போடமால் சடாரென திரும்பிய தாத்தா... இனி வண்டி ஓட்டுற ஆசையே அவருக்கு வராது! தரமான ஆப்பு வைத்த போலீஸ்!

இருப்பினும், பல ஆண்டுகளாக அவர் இருசக்கர வாகனத்தில் வலம் வந்திருக்கின்றார். தற்போது, வைரல் வீடியோவால் அவர் சிக்கலில் சிக்கியிருக்கின்றார். முதியவருக்கு ரூ. 11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியது, தலைக் கவசம் அணியாமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறுக் காரணங்களை கூறி காவல்துறையினர் உச்சபட்ச அபராதத்தை விதித்துள்ளனர்.

இன்டிகேட்டர் போடமால் சடாரென திரும்பிய தாத்தா... இனி வண்டி ஓட்டுற ஆசையே அவருக்கு வராது! தரமான ஆப்பு வைத்த போலீஸ்!

இத்துடன், அவர் சைடு இன்டிகேட்டரைப் போடாமல் திடீரென திரும்பியதைக் காரணம் காட்டியும் முதியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதியவரால் ஏற்பட இருந்த பெரும் அசம்பாவிதம் ஓட்டுநரின் சாமரத்தியத்தால் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. ஓட்டுநரின் துரிதமான செயலுக்கு பலர் பாராட்டு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்டிகேட்டர் போடமால் சடாரென திரும்பிய தாத்தா... இனி வண்டி ஓட்டுற ஆசையே அவருக்கு வராது! தரமான ஆப்பு வைத்த போலீஸ்!

குறிப்பாக, நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் பொதுவானது. இந்தியர்கள் பலர் சைடு இன்டிகேட்டரை பயன்படுத்துவதையே பெரும் சிரமமான ஒன்றாக பார்க்கின்றனர். இதன் விளைவாகவே பல விபத்துகள் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சைடு இன்டிகேட்டர் போடாமல் வாகனத்தை திருப்பியதை முக்கிய காரணமாகக் கொண்டு, லைசென்ஸே இல்லாமல் இத்தனை நாட்கள் வாகனங்களை இயக்கி வந்த முதியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல் வாதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையைக் காவல்துறை எடுத்திருக்கின்றது.

இன்டிகேட்டர் போடமால் சடாரென திரும்பிய தாத்தா... இனி வண்டி ஓட்டுற ஆசையே அவருக்கு வராது! தரமான ஆப்பு வைத்த போலீஸ்!

இன்டிகேட்டரை போடவில்லை என்றாலும், குறைந்தபட்சம் வாகனங்கள் வருவதைப் பார்த்து, சாலை காலியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு வாகனங்களை திருப்பினாலே பெரும்பாலான விபத்துகள் தவிர்க்கப்படும். ஆனால், வாகன ஓட்டிகளிடத்தியில் இந்த பழக்கம் அறவே இல்லை. திடீரென டிராக் (லேன்) மாறுவது, திடீரென வலதில் இருந்து இடதும், இடதில் இருந்து வலதும் என சரசரவென திரும்புகின்றனர். அப்போது வாகனம் ஏதேனும் வந்து மோதிவிட்டால், அந்த வாகன ஓட்டி மீதே முழு பழியையும் போட்டுவிடுவர்.

இன்டிகேட்டர் போடமால் சடாரென திரும்பிய தாத்தா... இனி வண்டி ஓட்டுற ஆசையே அவருக்கு வராது! தரமான ஆப்பு வைத்த போலீஸ்!

நல்ல வேலையாக பேருந்தில் சிசிடிவி இருந்ததால், பேருந்தின் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கின்றார். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், மிக சாமர்த்தியமாக அவர் செயல்பட்டதால், முதியவர் மற்றும் அவருடன் வந்த பெண் இருவரும் சிறு சிராய்ப்புகூட இல்லாமல் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். இருப்பினும், அவர்கள் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. தற்போது காவல்துறையினர் முதியவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பு: படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Risky rider grandpa gets rs 11k fine here is viral video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X