Just In
- 6 min ago
ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...
- 36 min ago
கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சிட்டாரா... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு கார்கள்!
- 1 hr ago
இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ
- 2 hrs ago
கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!
Don't Miss!
- News
மிஸ்ஸாக கூடாது.. இனிதான் "கச்சேரியே".. செஸ் ஒலிம்பியாட் ஓவர்.. பெரிய முடிவு எடுக்க போகும் ஸ்டாலின்?
- Finance
மும்பையில் மிகவும் காஸ்ட்லியான வீடுகளின் சொந்தக்காரர்கள் இவர்கள் தான்..!
- Movies
ரஜினியிடம் கேள்வி கேட்டு மடக்கிய அதிதி, மிரண்டுப் போன ஷங்கர்: அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?
- Technology
இரண்டு அட்டகாசமான Vivo ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Sports
இது வேற லெவல்.. வாள்வீச்சு போட்டியில் வீர தமிழச்சி சாதனை.. 2வது முறையாக தங்கம் வென்ற பவானி தேவி
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பழைய நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடலாம்...
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
விலை கம்மியா கிடைக்குதுனு சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இத படிச்சுட்டு போங்க!
செகண்ட் ஹேண்டில் சொகுசு கார்களை வாங்கவது லாபமான செயல்தானா என்பதை விளக்கும் பொருட்டு இந்த பதிவை வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

அனைவருக்கும் லக்சூரி கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கம். ஆனால், அவற்றின் அதீத விலையோ பெரும் தடை கல்லாக இருக்கின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பலரின் சொகுசு வாகன கனவிற்கு முட்டுக் கட்டையாக பல லட்சங்களில் சொகுசு கார்கள் விற்கப்படுவதே காரணமாக இருக்கின்றது. இதனால்தான் ஒரு சிலர், அதாவது, சொகுசு வாகனங்கள்மீது ஆசை உள்ளவர்கள் செகண்ட் ஹேண்ட் சந்தை வாயிலாக அவற்றை வாங்கிக் கொள்கின்றனர். யூஸ்டு கார் சந்தையில் சொகுசு கார்கள் பல மடங்கு குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இதன் விளைவாக பயன்படுத்திய வாகனங்களின் சந்தையில் இருந்து ஆடம்பர கார்களை வாங்குவோர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இது உண்மையிலேயே லாபகரமான செயல்தானா? மற்றும் பயன்படுத்திய லக்சூரி வாகனத்தை வாங்கிய பின்னரும் நமக்கு பயன்பாட்டு விஷயத்திலும் அவை லாபத்தை மட்டுமே வழங்குமா? இதற்கு பின்னால் என்ன மாதிரியான சிக்கல்கள் உள்ளன?, இவை பற்றிய விரிவான தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

செகண்ட் ஹேண்ட் சந்தையில் வேண்டுமானால் ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர் மற்றும் வால்வோ உள்ளிட்ட நிறுவனங்களின் சொகுசு கார்கள் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கலாம். ஆனால், அவற்றை பராமரிக்கும்போதும் நமக்கு குறைவான செலவை மட்டுமே வழங்குமா என கேட்டால், பெருத்த சந்தேகமே நீடிக்கின்றது.

பலர் ஆசைப்பட்டு குறைவான விலையில் பயன்படுத்திய சொகுசு கார் கிடைக்குது என வாங்கி, பின்னாளில் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த மாதிரியான சிக்கல்களை தவிர்க்கும் பொருட்டே இந்த பதிவு. குறிப்பாக, செகண்ட் ஹேண்ட் சொகுசு கார்களுக்கு பின்னால் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதை விளக்கும் பொருட்டும் இந்த பதிவு வழங்கப்பட்டுள்ளது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பராமரிப்பு செலவு:
மாருதி சுஸுகி மற்றும் டாடா கார்களைப் போன்று ஓர் ஆடம்பர காரை பராமரிப்பு என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சொகுசு கார்களைப் போலவே அவற்றிற்கான எஞ்ஜின் ஆயில், ஏர் ஃபில்டர் மற்றம் ஆயில் ஃபில்டர் போன்றவையும் அதிக விலையைக் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன. இதேபோல், பிற பாகங்களும் மிக அதிக விலையைக் கொண்டதாகவே இருக்கும்.

எனவே சொகுசு காரை பராமரிப்பது என்பது பெரும் செலவை ஏற்படுத்தக் கூடியதாக அமையலாம். உதாரணமாக, ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் அல்லது ஹோண்டா சிட்டி கார்களைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக செலவே ஆடி ஏ3 செடான் காரை பராமரிக்க ஏற்படும். ஆகையால், செகண்ட் ஹேண்ட் சந்தையில் சொகுசு காரை வாங்கும் முன் அதனை முறையாக பராமரிக்க முடியுமா? என்பதை அறிந்து வாங்குங்கள்.

உதிரி பாகங்கள்:
பழுது அல்லது விபத்தை சந்திக்காத வரை சொகுசு கார் மிகவும் மகிழ்ச்சியான இயக்க அனுபவத்தை வழங்கும். ஆனால், இவையிரண்டில் ஏதேனும் ஒன்றை அது சந்திக்கும் எனில் கதை முடிந்தது என்றே நினைத்துவிடலாம். ஆமாங்க, சொகுசு வாகனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உதிரி பாகங்கள் மிக விலையுயர்ந்தவை. அவற்றை மாற்ற பெரும் தொகையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். இன்சூரன்ஸ் இருந்தால் நம்முடையை கைகளை பெரியளவில் கடிக்காமல் வாகனத்தை சரி செய்துவிடலாம். ஆனால், வயதின் காரணமாக காப்பீட்டு கொள்கைக்கு சொகுசு வாகனம் உட்படவில்லை எனில், அந்த காரை சரி செய்ய உங்களின் ஒட்டுமொத்த சேமிப்பையும் கொடுக்க நேரிடலாம்.

எரிபொருள் சிக்கனம்:
சொகுசு வாகனம், சொகுசான பயணங்களுக்கு மட்டுமே பெயர்போனவை அல்ல. அவை, அதிக பவர்ஃபுல்லான எஞ்ஜினைக் கொண்டவையாகும் காட்சியளிக்கின்றன. சூப்பர் திறன் வெளிப்பாட்டிற்காக எஞ்ஜினில் பிரீமியம் தர பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் செயல்பாட்டிற்கு அதிக தரம் வாய்ந்த மற்றும் அதிக எரிபொருள் தேவைப்படுகின்றது. ஆகையால், இவற்றில் எரிபொருள் சிக்கனத்தை எதிர்பார்ப்பது சாத்தியமில்லாதது. பொரும்பாலான உயரிய விலைக் கொண்ட ஆடம்பர கார்கள் லிட்டருக்கு 10 கிமீ முதல் 16 கிமீ மைலேஜ் தருவதையே பெரிய விஷயமாகக் கொண்டுள்ளன.

காப்பீடு புதுப்பித்தல்:
நாம் பயன்படுத்தும் வாகனம் எந்த அளவு அதிகமான விலைக் கொண்டதாக இருக்கின்றதோ, அதற்கேற்ப வாகனத்தின் காப்பீட்டு பிரீமியம் தொகையும் அதிகம் இருக்கும் என்பது பொதுவான ஒன்று. பயன்படுத்திய சொகுசு வாகனங்களுக்கு முழு காப்பீட்டை பெற செல்லும்போது, அவற்றிற்கான இன்சூரன்ஸ் 'காப்பீட்டு தேய்மான மதிப்பை' பொருத்தே வழங்கப்படுகின்றது.

இது சில நேரங்களில் சந்தையில் புதிதாக விற்பனைக்குக் கிடைக்கும் டாடா மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்களின் ஆரம்ப நிலை மாடல் கார்களின் விலைக்கு இணையானதாக இருக்கலாம். இதன் காரணத்தினாலேயே ஒரு சில சொகுசு வாகன உரிமையாளர்கள் தங்களின் லக்சூரி காருக்கான காப்பீட்டை புதுப்பிக்காமலேயே விட்டுவிடுகின்றனர். ஆனால், இது பின்னாளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மறுபதிவு:
இந்தியாவில் 10 ஆண்டுகள் பழைய டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகள் பெட்ரோல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லி போன்ற முக்கிய பகுதிகளில் இந்த மாதிரியான பழைய வாகனங்கள் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நாட்டின் பிற பகுதிகளில் இந்த வாகனங்களை மறு பதிவு செய்ய முடியும். ஆனால், வழக்கமான மறு பதிவைக் காட்டிலும் பல மடங்கு அதிக கட்டணம் இதற்கு வசூலிக்கப்படுகின்றது.