ஆடி ஆர்8 காரை விற்றுவிட்டு வேறொரு காரை வாங்கிய பிரபல பாடகர்... இந்த முறை வாங்கிய காரோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்திய பாடகர் ஒருவர் மிக மிக விலை உயர்ந்த சூப்பர் காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் வாங்கி இருக்கும் காரின் விலை பல மடங்கு அதிகம் என்பதால் இந்த தகவல் வாகன உலகின் தலைப்பு செய்தியாக மாறி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.

ஆடி ஆர்8 காரை விற்றுவிட்டு புதிய சூப்பர் காரை வாங்கிய பிரபல பாடகர்... இந்த முறை வாங்கிய காரோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்திய பாடகர் ஒருவர் மிக மிக விலை உயர்ந்த சூப்பர் காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாடகர் வாங்கி இருப்பது பல மடங்கு அதிக விலைக் கொண்ட வாகனம் என்பதால், இந்த கொள்முதல் வாகன உலகின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கின்றது.

ஆடி ஆர்8 காரை விற்றுவிட்டு புதிய சூப்பர் காரை வாங்கிய பிரபல பாடகர்... இந்த முறை வாங்கிய காரோட விலை எவ்ளோ தெரியுமா?

கேகே என்று அறியப்படும் பாடகர் கிருஷ்ண குமார் குன்னத், இவரே கோடி ரூபாய் செலவு செய்து சூப்பர் காரை வாங்கியவர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, பெங்காளி, மராத்தி, குஜராத்தி மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் இவர் பாடல்களை பாடி இருக்கின்றார். மிக சிறந்த இந்திய பிளேபேக் சிங்கராக இவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

ஆடி ஆர்8 காரை விற்றுவிட்டு புதிய சூப்பர் காரை வாங்கிய பிரபல பாடகர்... இந்த முறை வாங்கிய காரோட விலை எவ்ளோ தெரியுமா?

இவர் பாடகர் மட்டுமல்ல, சிறந்த வாகன காதலராகவும், வாகன பந்தயங்களில் ஈடுபடுபவராகவும் காட்சியளிக்கின்றார், என்பது இவரை பற்றி அறியாத நபர்களுக்கு கூடுதல் சிறப்பு தகவல் ஆகும். எனவேதான் இவரது கராஜில் அதிக திறன் வாய்ந்த கார்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.

ஆடி ஆர்8 காரை விற்றுவிட்டு புதிய சூப்பர் காரை வாங்கிய பிரபல பாடகர்... இந்த முறை வாங்கிய காரோட விலை எவ்ளோ தெரியுமா?

இவற்றின் வரிசையிலேயே தற்போது புதிதாக ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரையே சேர்த்திருக்கின்றார். ஆம், இந்த காரை பாடகர் கேகே வாங்கி இருக்கின்றார். ஸ்மேஷ் மெட்டாலிக் டேங்கோ சிவப்பு நிறத்திலான ஆர்எஸ்5 ஸ்போர்ட் பேக் (Audi RS5 Sportback) காரையே அவர் வாங்கியிருக்கின்றார். இந்த காரை தனது வாழ்க்கை துணையான ஜோதி உடன் சென்று அவர் டெலிவரி பெற்றிருக்கின்றார்.

ஆடி ஆர்8 காரை விற்றுவிட்டு புதிய சூப்பர் காரை வாங்கிய பிரபல பாடகர்... இந்த முறை வாங்கிய காரோட விலை எவ்ளோ தெரியுமா?

இதுகுறித்த புகைப்படங்களை அவர், அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். மேலும், ஆடி நிறுவனமும் இதுகுறித்த படங்களை வெளியிட்டிருக்கின்றது. இத்துடன், கேகே இப்புதிய காரை வாங்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் பயன்பாட்டில் இருந்த முதல் தலைமுறை ஆடி ஆர்8 (Audi R8) காரை விற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆடி ஆர்8 காரை விற்றுவிட்டு புதிய சூப்பர் காரை வாங்கிய பிரபல பாடகர்... இந்த முறை வாங்கிய காரோட விலை எவ்ளோ தெரியுமா?

முன்னதாக பயன்படுத்தி வந்த ஆடி ஆர்8 சூப்பர் காரின் மதிப்பு ரூ. 2.30 கோடி - ரூ. 2.72 கோடி ஆகும். மேலும், இது ஓர் இரட்டை இருக்கைகள் மட்டுமே கொண்ட வாகனமும் கூட. ஆனால், தற்போது வாங்கப்பட்டிருக்கும் சூப்பர் இரு வரிசை இருக்கை அமைப்பைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், முந்தையதைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் கொண்டதாக புதிய ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காட்சியளிக்கின்றது.

ஆடி ஆர்8 காரை விற்றுவிட்டு புதிய சூப்பர் காரை வாங்கிய பிரபல பாடகர்... இந்த முறை வாங்கிய காரோட விலை எவ்ளோ தெரியுமா?

இதன் விலை ரூ. 1.07 கோடிகள் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். முதல் தலைமுறை ஆடி ஆர்8 சூப்பர் காரில் 4.2 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 424 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

ஆடி ஆர்8 காரை விற்றுவிட்டு புதிய சூப்பர் காரை வாங்கிய பிரபல பாடகர்... இந்த முறை வாங்கிய காரோட விலை எவ்ளோ தெரியுமா?

ஆனால், இதைக் காட்டிலும் பல மடங்கு அதிக சூப்பர் திறனை வெளியேற்றக் கூடிய தேர்வும் ஆர்8-இல் கிடைக்கின்றது. 518 பிஎச்பி மற்றும் 530 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 5.2 லிட்டர் வி10 எஞ்ஜின் உடன் அது கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின் வெறும் 3.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.

ஆடி ஆர்8 காரை விற்றுவிட்டு புதிய சூப்பர் காரை வாங்கிய பிரபல பாடகர்... இந்த முறை வாங்கிய காரோட விலை எவ்ளோ தெரியுமா?

இதே திறனை வெளிப்படுத்த 4.3 செகண்டுகளை எடுத்துக் கொள்கின்றது இதன் 4.2 லிட்டர் வி8 எஞ்ஜின். ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் 2.9 லிட்டர் பை-டர்போ வி6 டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 444 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.

ஆடி ஆர்8 காரை விற்றுவிட்டு புதிய சூப்பர் காரை வாங்கிய பிரபல பாடகர்... இந்த முறை வாங்கிய காரோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்த மோட்டார் 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது. மேலும், வெறும் 3.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் கொண்டிருக்கின்றது. ஆகையால், ஆர்8 சூப்பர் காரின் 4.2 லிட்டர் வி8 எஞ்ஜின் தேர்வைக் காட்டிலும் சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொண்டதாக இது காட்சியளிக்கின்றது.

ஆடி ஆர்8 காரை விற்றுவிட்டு புதிய சூப்பர் காரை வாங்கிய பிரபல பாடகர்... இந்த முறை வாங்கிய காரோட விலை எவ்ளோ தெரியுமா?

இத்தகைய சூப்பர் திறன்கள் கொண்ட புதிய ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரை கேகே தற்போது கையகப்படுத்தியிருக்கின்றார். இந்த சூப்பர் திறன்களே அவர் இக்காரை வாங்க காரணமாக அமைந்திருக்கின்றது. இந்த கார் மணிக்கு 250 கிமீ பயணிக்கும் திறனைக் கொண்டது அதன் கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Singer krishnakumar kunnath buys brand new audi rs5 sportback worth rs 1 07 crore
Story first published: Monday, January 10, 2022, 20:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X