ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்களுக்கு செம டிமாண்ட்... புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடக்கம்!

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதையடுத்து, புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்களுக்கு செம டிமாண்ட்... புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடக்கம்!

ஸ்கோடா ஸ்லாவியா உள்ளிட்ட புதிய கார்களுக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வரவேற்பு காரணமாக, ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தற்போது பிஸியாக உள்ளது. அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்களுக்கு செம டிமாண்ட்... புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடக்கம்!

இதன் காரணமாக மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சஹான் தொழிற்சாலையில் மூன்றாவது ஷிஃப்ட்டை ஆரம்பித்துள்ளதாக ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிரீமியம் மிட்-சைஸ் செடான் காரான ஸ்கோடா ஸ்லாவியா, முதல் மாதத்திலேயே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை குவித்தது.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்களுக்கு செம டிமாண்ட்... புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடக்கம்!

இதற்கிடையே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து வரும் ஜூன் 9ம் தேதி ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுவும் பிரீமியம் மிட்-சைஸ் செடான் ரகத்தை சேர்ந்த கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்களுக்கு செம டிமாண்ட்... புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடக்கம்!

இந்தியாவின் மிட்-சைஸ் செடான் செக்மெண்ட்டில் தற்போதைய நிலையில், மாருதி சுஸுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற கார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த கார்களுக்கு ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஆகிய கார்கள் போட்டியாக இருக்கும். அத்துடன் இந்த 2 கார்களும், தங்களுக்குள்ளும் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு கொள்ளும்.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்களுக்கு செம டிமாண்ட்... புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடக்கம்!

இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான பியூஷ் அரோரா கூறுகையில், ''எங்களது புனே தொழிற்சாலையில் மூன்றாவது ஷிஃப்ட்டை தொடங்கியிருப்பது என்பது, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கார்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கான சாட்சி ஆகும்.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்களுக்கு செம டிமாண்ட்... புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடக்கம்!

ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது'' என்றார். உண்மையிலேயே ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கும், ஸ்கோடா ஸ்லாவியா பிரீமியம் மிட்-சைஸ் செடான் காருக்கும் இந்திய சந்தையில் தற்போது பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்களுக்கு செம டிமாண்ட்... புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடக்கம்!

அடுத்து விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கும், இதே அளவிற்கான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தற்போது இந்திய சந்தையில் தங்களை புதுப்பித்து கொண்டு வருகின்றன என்று சொல்லலாம். இந்திய சந்தையில் தங்களது தயாரிப்புகளின் விற்பனையை உயர்த்துவதுதான் இதன் நோக்கம்.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்களுக்கு செம டிமாண்ட்... புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடக்கம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள விர்டுஸ் செடான் கார், சவால் நிறைந்த செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செக்மெண்ட்டை சேர்ந்த ஹோண்டா சிட்டி காரின் ஹைப்ரிட் மாடல் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்களுக்கு செம டிமாண்ட்... புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடக்கம்!

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் கார் சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் உற்பத்தி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. வரும் மே மாதத்தில் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்களுக்கு செம டிமாண்ட்... புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடக்கம்!

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களும் இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் தடுமாற்றத்தைதான் சந்தித்து கொண்டிருந்தன. ஆனால் அந்த நிறுவனங்களின் புது வரவுகளான குஷாக், டைகுன் மற்றும் ஸ்லாவியா ஆகிய கார்கள் விற்பனையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல் சிட்டி ஹைப்ரிட் மாடலும் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை உயர ஓரளவிற்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்களுக்கு செம டிமாண்ட்... புனே தொழிற்சாலையில் 3வது ஷிஃப்ட் தொடக்கம்!

ஆனால் அதற்கு விலை நிர்ணயம் சரியாக இருக்க வேண்டும். ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் அறிமுக தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் மே மாதத்தின் தொடக்கத்தில், சிட்டி ஹைப்ரிட் காரை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Skoda auto volkswagen india commences third shift at chakan manufacturing facility details here
Story first published: Wednesday, April 20, 2022, 17:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X