ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்

விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான முக்கிய விபரங்கள் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்

சர்வதேச சந்தைகளில் ஸ்கோடா கோடியாக் கார் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை கடந்த ஆண்டில் பெற்றது. கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக வெளியீடு செய்யப்பட்ட கோடியாக் எஸ்யூவி மாடல் அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் நோக்கில் பெற்றுள்ள மிக முக்கிய அப்கிரேட் இதுவாகும். அப்கிரேட் செய்யப்பட்ட ஸ்கோடா கோடியாக் கார் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்

ஆனால் இதன் அறிமுகத்தினை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் முன்னதாகவே திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலினாலும், உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையினால் இந்த திட்டம் தொடர்ந்து தாமதமாகியது. இருப்பினும் இந்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை எதிர்பார்க்கிறோம்.

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்

செக் குடியரசு நாட்டில் எஸ்.இ, எஸ்.இ எல், ஸ்போர்ட்லைன், எல்&கே மற்றும் விஆர்எஸ் என்கிற 5 விதமான ட்ரிம் நிலைகளில் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஸ்டைல், ஸ்போர்ட்லைன் மற்றும் எல்&கே என்ற 3 விதமான வேரியண்ட்களில் இந்த ஸ்கோடா ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள விபரங்களின்படி, ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் வெளிப்பக்கத்தில், ஒளியூட்டப்பட்ட கண்ணாடியுடன் ஸ்கோடா பிராண்டின் க்ரிஸ்டலைன் எல்இடி ஹெட்லைட்கள், ஸ்கோடா கார்களுக்கே உண்டான ஸ்டைலில் க்ரோம்-ஆல் சூழப்பட்ட அறுக்கோண க்ரில், காரின் உடல் நிறத்தில் பம்பர் & முன்பக்க ஸ்பாய்லர் மற்றும் உள்ளிழுக்கக்கூடிய ஹெட்லைட் சுத்திகரிப்பான் உள்ளிட்டவற்றை பெற்றுவரவுள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்

இவற்றுடன் 4 சென்சார்களுடன் சாவியில்லா நுழையும் வசதி மற்றும் செயல்பாட்டுடன் கூடிய மேற்கூரை தண்டவாளங்கள் உள்ளிட்டவையும் முக்கிய சிறப்பம்ங்களாக கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்டில் வழங்கப்பட உள்ளன. அலாய் சக்கரங்கள் இரட்டை-நிறத்தில் வழங்கப்பட, உட்புறத்திலும் இந்த புதிய ஸ்கோடா எஸ்யூவி கார் ஏகப்பட்ட வசதிகளை பெற்று வரவுள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்

தற்போது ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இதன் கேபினின் படத்தில், டேஸ்போர்டில் நாவிகேஷன் மற்றும் வயர் இல்லா ஸ்மார்ட்லிங் இணைப்பு வசதி உடன் 20.32 செ.மீ-இல் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் ஏசி, சப்-வூஃப் உடன் 12 625வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 26.03செ.மீ-இல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை பெற்றுவரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்

இவற்றுடன் 3-மெமரி செயல்பாட்டுடன் 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகளை பெற்றுவரும் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் உட்புறத்தில் ப்ரீமியம் தோற்றத்திற்காக பனோராமிக் சன்ரூஃப்-ஐயும் கொண்டுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு வழக்கமான 2.0 லிட்டர் பெட்ரோல் டிஎஸ்ஐ என்ஜினே புதிய கோடியாக்கிலும் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்

அதிகப்பட்சமாக 4200-6000 ஆர்பிஎம்-இல் 190 குதிரையாற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே 4x4 ட்ரைவ் அமைப்புடன் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மற்றப்படி அறிமுகத்தின்போது கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்டில் டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படுவதற்கு வாய்ப்பில்லையாம்.

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்

இந்த எஸ்யூவி காரின் நீளம் 4,699மிமீ, அகலம் 1,882மிமீ மற்றும் வீல்பேஸ் 2,791மிமீ ஆகும். புதிய கோடியாக் காரின் எடை 2,493 கிலோ ஆகும். இந்தியாவில் 5-இருக்கை மற்றும் 7-இருக்கை தேர்வுகளில் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரை விற்பனை செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அம்சங்கள் மட்டுமின்றி, புதிய கோடியாக் மாடல் பயணிகளின் பாதுகாப்பிற்கு 9 காற்றுப்பைகள், 360-கோண கேமிரா, ஒரே பாதையில் இயங்க வைக்கும் தொழிற்நுட்பம், கணிக்கக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றையும் சர்வதேச சந்தைகளில் பெற்றுள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்

இந்திய சந்தையில் புதிய ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் வருகிற ஜனவரி 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதனை தொடர்ந்து டெலிவிரிகள் ஜனவரி 14இல் துவங்கப்பட உள்ளனவாம். இந்தியாவில் முன்பு விற்பனையில் இருந்த கோடியாக் எஸ்யூவி மாடலின் விற்பனை கடந்த 2020 ஏப்ரலில் புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளினால் நிறுத்தி கொள்ளப்பட்டது. இதனால் தான் விரைவில் பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டும் இந்த காரினை மீண்டும் அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kodiaq Details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X