அடுத்தடுத்து நடக்கும் தரமான சம்பவங்கள்... உலக நாடுகளை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்த இந்தியா... கொல மாஸ்!

உலக நாடுகளை எல்லாம் இந்தியா அண்ணாந்து பார்க்க வைத்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடுத்தடுத்து நடக்கும் தரமான சம்பவங்கள்... உலக நாடுகளை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்த இந்தியா... கொல மாஸ்!

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Skoda Auto Volkswagen India Private Limited - SAVWIPL), இந்தியாவில் இருந்து ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

அடுத்தடுத்து நடக்கும் தரமான சம்பவங்கள்... உலக நாடுகளை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்த இந்தியா... கொல மாஸ்!

முதல் பேட்ஜ் மேட்-இன்-இந்தியா ஸ்கோடா குஷாக் கார்கள் தற்போது, அரபு வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளுக்கு (Arab Gulf Cooperation Countries - AGCC) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இந்த நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) ஆகிய கார்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்து வருகிறது.

அடுத்தடுத்து நடக்கும் தரமான சம்பவங்கள்... உலக நாடுகளை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்த இந்தியா... கொல மாஸ்!

இந்த வரிசையில் தற்போது ஸ்கோடா குஷாக் கார்களின் ஏற்றுமதி பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரானது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த கார்களாக இருந்தாலும் கூட, ஸ்கோடா குஷாக்கும், ஃபோக்ஸ்வேகன் டைகுனும் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு வருகின்றன.

அடுத்தடுத்து நடக்கும் தரமான சம்பவங்கள்... உலக நாடுகளை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்த இந்தியா... கொல மாஸ்!

மறுபக்கம் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரானது, செடான் ரகத்தை சேர்ந்தது. ஆக்டிவ் (Active), ஆம்பிஷன் (Ambition), ஸ்டைல் (Style), மற்றும் மாண்டி கார்லோ (Monte Carlo) ஆகிய வேரியண்ட்களில் ஸ்கோடா குஷாக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்கோடா குஷாக் காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து நடக்கும் தரமான சம்பவங்கள்... உலக நாடுகளை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்த இந்தியா... கொல மாஸ்!

இதில், எல்இடி ஹெட்லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. செயல்திறனை பொறுத்தவரையில் ஸ்கோடா குஷாக் காரில், 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து நடக்கும் தரமான சம்பவங்கள்... உலக நாடுகளை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்த இந்தியா... கொல மாஸ்!

இதில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் ஆப்ஷன் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதுதவிர 148 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் ஆப்ஷனும் ஸ்கோடா குஷாக் காரில் வழங்கப்படுகிறது.

அடுத்தடுத்து நடக்கும் தரமான சம்பவங்கள்... உலக நாடுகளை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்த இந்தியா... கொல மாஸ்!

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மட்டுமல்லாது, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், போன்ற கார்களுடன் ஸ்கோடா குஷாக் கார் போட்டியிட்டு வருகிறது.

அடுத்தடுத்து நடக்கும் தரமான சம்பவங்கள்... உலக நாடுகளை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்த இந்தியா... கொல மாஸ்!

அத்துடன் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற கார்களுக்கும் இது போட்டியாக இருக்கும். இந்தியா தற்போது உலகின் முக்கியமான கார் ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக மாறி வருகிறது. இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.

அடுத்தடுத்து நடக்கும் தரமான சம்பவங்கள்... உலக நாடுகளை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்த இந்தியா... கொல மாஸ்!

கியா இந்தியா நிறுவனம் கூட சமீபத்தில் ஏற்றுமதியில் புதிய மைல்கல் ஒன்றை கடந்திருந்தது. இந்தியாவில் இருந்து 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் ஏற்றுமதி என்பதுதான் அந்த புதிய மைல்கல். அதேபோல் நிஸான் நிறுவனமும் இந்தியாவில் இருந்து 10 லட்சம் கார்கள் ஏற்றுமதி என்ற மைல்கல்லை சமீபத்தில் கடந்திருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அடுத்தடுத்து நடக்கும் தரமான சம்பவங்கள்... உலக நாடுகளை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்த இந்தியா... கொல மாஸ்!

இவ்வாறு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓடி கொண்டிருப்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், கியா, நிஸான் போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் இருந்து சர்வதேச சந்தைக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda kushaq exports commence from india
Story first published: Wednesday, October 5, 2022, 16:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X