Just In
- 11 hrs ago
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- 17 hrs ago
ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர்... முழுசார்ஜில் 500 கி.மீ பயணிக்கும் கார்... ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு
- 23 hrs ago
நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்
- 24 hrs ago
ஸ்கிராட்ச் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!
Don't Miss!
- News
இவ்ளோதாங்க வாழ்க்கை.. "கெளசிக்" வைத்திருந்த உருக்கமான வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்.. இப்படி ஆகிடுச்சே!
- Movies
எனக்கு அண்ணனோட இந்த படம் தான் பிடிக்கும்.. கார்த்தி சொன்ன தகவலால் பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்!
- Technology
காத்திருந்தது போதும்., விரைவில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும்: PM Modi அறிவிப்பு!
- Finance
’எனது குழந்தை 12 மாதத்தில் பிறந்தது... ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் கடைசி நிகழ்ச்சி!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்திட வேண்டும்...
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
ஸ்கோடா குஷாக் மாண்டே கர்லோ எடிசன் இந்தியாவில் அறிமுகம்... வேற லெவல் பிரீமியம் அம்சங்களுடன் வந்திருக்கு!
ஸ்கோடா குஷாக் மாண்டே கர்லோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

செக் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்கோடா (Skoda) நிறுவனம், குஷாக் மாண்டே கர்லோ (Kushaq Monte Carlo) எனும் சிறப்பு எடிசன் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ. 15.99 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் எஞ்ஜின் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

எஞ்ஜின் விபரங்கள்:
ஸ்கோடா நிறுவனம் நான்கு விதமான தேர்வுகளில் இக்காரை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அதாவது, 1.0 லிட்டர் டிஎஸ்ஐ எம்டி (1.0 TSI MT), 1.0 லிட்டர் டிஎஸ்ஐ ஏடி (1.0 TSI AT), 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எம்டி (1.5 TSI MT) மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டிஎஸ்ஜி (1.5 TSI DSG) ஆகிய நான்கு விதமான கியர் மற்றும் எஞ்ஜின் தேர்விலேயே புதிய குஷாக் மாண்டே கர்லோ விற்பனைக்குக் கிடைக்கும்.

முழு விலை விபரம்:
குஷாக் மாண்டே கர்லோ | விலை |
1.0 TSI MT | ₹15.99 Lakh |
1.0 TSI AT | ₹17.69 Lakh |
1.5 TSI MT | ₹17.89 Lakh |
1.5 TSI DSG | ₹19.49 Lakh |

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் விபரம்:
தற்போது விற்பனையில் இருக்கும் குஷாக் மாடலைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் கொண்டதாக மாண்டே கர்லோ எடிசனை ஸ்கோடா உருவாக்கியிருக்கின்றது. ஸ்கோடாவின் மோட்டார்ஸ்போர்ட் ஹெரிடேஜ் மற்றும் ரேல்லி மாண்டே கர்லோ ஆகியவைக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக குஷாக் மாண்டே கர்லோ உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ரேபிட் கார் மாடலிலேயே மாண்டே கர்லோ எடிசனை ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கியது. இக்கார் மாடல் தற்போது விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றது. ஆகையால், ரேபிட் கர்லோ மாண்டே எடிசன் விற்பனைக்குக் கிடைக்காத நிலை தென்படுகின்றது.

இந்தநிலையைப் போக்கும் விதமாக குஷாக் மாடலில் மாண்டே கர்லோ எடிசன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்காரை இரண்டு விதமான நிற தேர்வுகளில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கும். டொர்னடோ ரெட் மற்றும் கேண்டி வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் மட்டுமே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

இவ்விரு நிற தேர்வுகளுடன் கூடுதல் அலங்கரிப்பாக செயல்பாடாக வெளிப்புறத்தின் குறிப்பிட்ட சில பாகங்களில் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, காரின் கிரில் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இன்னும் சில நிறங்களும் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில், காரின் மேற்கூரைக்கு கார்பன் ஸ்டீல் பெயிண்ட்ஜாப் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கூடுதல் கவர்ச்சியை வழங்கும் வகையில் மேற்கூரையில் உள்ள ரூஃப் ரெயில்களுக்கு கருப்பு நிறம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, 17 அங்குல வெகா அலாய் வீல்கள் இரட்டை நிறங்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற மிக சிறப்பான வேலைப்பாடுகளால் புதிய ஸ்கோடா குஷாக் மாண்டே கர்லோ எடிசன் பல மடங்கு கவர்ச்சியான வாகனமாக மாறியிருக்கின்றது. இதுபோதாதென்று அக்காரை கூடுதல் அழகானதாக மாற்றும் விதமாக மினு மினுப்பான கருப்பு நிறம், ஓஆர்விஎம் மற்றும் கார் கை பிடிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதன் 1.5 லிட்டர் வேரியண்டுகள், 1.0 லிட்டர் வேரியண்டைக் காட்டிலும் ஒரு படி மேலே அழகானதாக மாற்றியிருக்கின்றது, ஸ்கோடா. முன் பக்கத்தில் சிவப்பு நிற பிரேக் காலிபர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது காருக்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது.

இதேபோல் காரின் பின் பக்கத்திலும் சில கவர்ச்சிக்கான வேலைகள் செய்யப்பட்டுள்ளன. இரட்டை நிற டெயில்கேட் ஸ்பாய்லர், கிளாஸ் பிளாக் ஸ்கோடா மற்றும் குஷாக் பேட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறே வெவ்வேறு நிற கலவையால் இக்கார் கவர்ச்சியாக்கப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, காரின் உட்பகுதியிலும் சில பிரத்யேக நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், கருப்பு நிறத்துடன் கூடிய ரூபி ரெட் மெட்டாலிக்க வண்ணம் டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், டூர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், முன் ஆர்ம்ரெஸ்டுகள், அனுமினிய பெடல்கள் மற்றும் ரெட் ஆம்பியண்ட் மின் விளக்கு உள்ளிட்டவையும் குஷாக் மாண்டே கர்லோ எடிசனில் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவர்களுக்கான திரை ஆகிய நவீன-கால தொழில்நுட்ப அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவை வழக்கமான குஷாக்-இல் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக சிவப்பு மற்றும் கருப்பு நிறங்கள் அவற்றை வழங்கப்பட்டுள்ளன. இதேநிற கலவைதன் இருக்கையின் ஹெட்ரெஸ்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய அலங்கரிப்பு மாற்றங்களுடனேயே புதிய ஸ்கோடா குஷாக் மாண்டே கர்லோ எடிசன் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதைதவிர வேறு எந்த மெக்கானிக்கல் மாற்றமும் இக்காரில் வழங்கப்படவில்லை. 1.0 லிட்டர் மோட்டார் 115 எச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இதைவிட சற்று அதிக பவராக 150 எச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியதாக 1.5 லிட்டர் மோட்டார் காட்சியளிக்கின்றது. இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆகிய தேர்வுகள் இரு மோட்டார்களிலும் வழங்கப்படுகின்றது.
-
கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?
-
இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!
-
அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!