மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு!

ஸ்கோடா (Skoda) நிறுவனம் அதன் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றான குஷாக் (Skoda) மாடலில் புதிய தேர்வு ஒன்றை விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இதன் விலை மற்றும் பிற முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

இந்திய சந்தையில் நடப்பு 2021ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் அதிகம் கார்களை விற்பனைச் செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஸ்கோடா (Skoda)வும் ஒன்று. இந்நிறுவனம் 1.8 சதவீதம் சந்தை பங்குடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இதன் மதிப்பு வெறும் 0.4 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

இந்த நிலை ஸ்கோடா நிறுவனத்தை இந்தியாவை விட்டு வெளியேற்றிவிடும் என மக்களின் வாய்களில் இருந்து வார்த்தைகளை வரவழைத்தது. ஆனால், தற்போது அதற்கு மாறாக ஸ்கோடா நிறுவனம் புது கார்கள் விற்பனையில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

இதற்கு நிறுவனம் இந்தியாவில் களமிறக்கிய புதுமுகங்களின் வருகையே காரணமாக உள்ளது. நிறுவனம் இந்தியா 2.0 திட்டத்தின்கீழ் பல்வேறு கார் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. ஸ்லாவியா, குஷாக், கோடியாக் மற்றும் ஆக்டேவியா உள்ளிட்ட கார் மாடல்களை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவையே நிறுவனத்தை இந்திய சந்தையில் தற்போது தூக்கி நிறுத்தியிருக்கின்றன.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

இந்த நிலையில், தனது இருப்பை வலுவாக ஊன்ற செய்த கார் மாடல்களில் ஒன்றான குஷாக் (Kushaq) மாடலில் ஸ்கோடா நிறுவனம் தற்போது புதிய வேரியண்ட் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. குஷாக் ஆம்பிஷன் கிளாசிக் (Skoda Kushaq Ambition Classic variant) எனும் வேரியண்டையே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

இது மேனுவல் மற்றும் தானியங்கி என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆம்பிஷன் கிளாசிக் மேனுவல் வேரியண்டின் விலை ரூ. 12.69 லட்சம் என்ற விலையிலும், ஆம்பிஷன் கிளாசிக் தானியங்கி வேரியண்ட் ரூ. 14.09 லட்சத்திற்கும் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

தற்போது விற்பனையில் இருக்கும் ஆம்பிஷன் வேரியண்டிற்கு கீழே இப்புதிய ஆம்பிஷன் கிளாசிக் வேரியண்ட் அமர்த்தப்பட்டுள்ளது. இக்காரை நிறுவனம் ட்யூவல் டோன் நிற வசதியுடன் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அந்தவகையில், டொர்னடோ ரெட் மற்றும் பிளாக் ரூஃப், கேன்டீ ஒயிட் மற்றும் பிளாக் ரூஃப், ஹனி ஆரஞ்சு மற்றும் பிளாக் ரூஃப், பிரில்லியன்ட் சில்வர் மற்றும் பிளாக் ரூஃப் ஆகிய ட்யூவல் டோன் தேர்விலேயே புதிய வேரியண்ட் விற்பனைக்குக் கிடைக்கும்.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

இதுதவிர பல்வேறு பிரீமியம் தர அம்சங்கள் கொண்ட காராகவும் குஷாக் ஆம்பிஷன் கிளாசிக் வேரியண்ட் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அந்தவகையில், காரின் உட்பகுதியில் பிரீமியம் தோற்றத்தை வழங்கும் விதமாக குரோம் இன்செர்ட்டுகள் விண்டோக்களில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், முன் பக்க பம்பர், கதவின் அடிப்பக்கம் மற்றும் ட்ரன்க் லைன் உள்ளிட்ட பகுதிகளிலும் குரோம் இன்செர்டுகள் இடம் பெற்றிருக்கின்றன.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

இதேபோல் சிறப்பம்சம் விஷயத்திலும் இந்த கார் மிக சூப்பரானதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய இணைப்பு வசதிகளுடன் வழங்கப்பட்டுள்ளன.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

இது தவிர சூட் இருக்கைகள், தானியங்கி ஏசி மற்றும் கார் இணைப்பு வசதி உள்ளிட்ட அம்சங்களும் புதிய குஷாக் ஆம்பிஷன் கிளாசிக் வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் இதயமாகக் கருதப்படும் எஞ்ஜின் விஷயத்தில் மிக சூப்பரான திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரை இத்தேர்வில் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

நிறுவனம் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டிஎஸ்ஐ எஞ்ஜினை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 115 எச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றன.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

இதுதவிர, ஸ்கோடா குஷாக் காரில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட தேர்வுகளும் கிடைக்கின்றது. இந்த மோட்டார் கொண்ட குஷாக் 150 எச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும். கியர்பாக்ஸை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் ஆகிய தேர்வுகள் வழங்கப்படுகின்றது.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

மேலே பார்த்த இரு மோட்டார்களும் சூப்பரான திறனை வெளிப்படுத்தக் கூடியவையாக காட்சியளிக்கின்றன. அந்தவகையில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டாரின் மேனுவல் வேரியண்ட் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 10.6 செகண்டுகளையே எடுத்துக் கொள்ளும். ஆனால், இதன் தானியங்கி வேரியண்ட் 11.7 செகண்டுகளை எடுத்துக் கொள்கின்றது.

மேனுவல்-ஆட்டோமேட்டிக் இரு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்... அதிகம் விற்பனையாகும் குஷாக்கில் புதிய தேர்வு அறிமுகம்!

இவற்றைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாக 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார் இருக்கின்றது. இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 8.6 செகண்டுகளிலேயே எட்டிவிடும். இத்தகைய சூப்பர் திறன் கொண்ட காராகவே ஸ்கோடாவின் இந்த குஷாக் கார் மாடல் இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda launched new ambition classic variant in kushaq at rs 12 69 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X