செம்ம... ஸ்கோடா ஸ்லாவியாவின் உட்புறத்தில் இத்தனை வசதிகளா!! புதிய வீடியோ வெளியீடு!

விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரின் உட்புற கேபினின் தோற்றத்தை வெளிக்காட்டும் புதிய வீடியோ ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நமக்கு தெரிய வந்துள்ள விபரங்களை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

செம்ம... ஸ்கோடா ஸ்லாவியாவின் உட்புறத்தில் இத்தனை வசதிகளா!! புதிய வீடியோ வெளியீடு!

செக் குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா அதன் இந்தியா 2.0 திட்டத்தில் இரண்டாவது தயாரிப்பாக ஸ்லாவியா நடுத்தர அளவு செடான் காரை கடந்த 2021ஆம் ஆண்டில் வெளியீடு செய்தது. முன்பு விற்பனையில் இருந்த ஸ்கோடா ராபிட் செடான் மாடலுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் இந்த காருக்கு விற்பனையில் மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன.

செம்ம... ஸ்கோடா ஸ்லாவியாவின் உட்புறத்தில் இத்தனை வசதிகளா!! புதிய வீடியோ வெளியீடு!

இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா நடப்பு 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த புதிய செடான் காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தை வெளிக்காட்டும் வீடியோக்கள் சிலவற்றை இதற்குமுன் ஸ்கோடா வெளியிட்டுள்ளது.

செம்ம... ஸ்கோடா ஸ்லாவியாவின் உட்புறத்தில் இத்தனை வசதிகளா!! புதிய வீடியோ வெளியீடு!

இந்த வகையில் தற்போது ஸ்லாவியா காரின் உட்புற கேபினில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் இடவசதி குறித்த வீடியோ ஒன்று ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. காரின் முன்பக்கத்தை காட்டுவதில் இருந்து இந்த வீடியோ ஆரம்பிக்கிறது. ஸ்லாவியா செடான் மாடல் முன்பக்கத்தில் க்ரிஸ்டலைன் எல்இடி ஹெட்லேம்ப்கள், அடையாள ‘பட்டாம்பூச்சி' வடிவ க்ரில் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

இதன்பின் நேரடியாக காரின் உட்புற டேஸ்போர்டு முதலாவதாக காட்டப்படுகிறது. ப்ரீமியம் தரத்திலான நடுத்தர-அளவு செடான் காராக நிலைநிறுத்தப்படும் ஸ்லாவியா, அதற்கேற்ப உட்புற கேபினை மிகவும் பிரீமியம் தரத்தில் பெற்றுள்ளது. இதன் டேஸ்போர்டு பழுப்பு & கருப்பு என இரு விதமான நிறங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களை ஸ்டோன் பழுப்பு மற்றும் கருப்பு லக்ஸ் என ஸ்கோடா அழைக்கிறது. இவற்றுடன் பளபளப்பான கருப்பு நிற பேனலும் டேஸ்போர்டின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரையில் செல்கிறது.

செம்ம... ஸ்கோடா ஸ்லாவியாவின் உட்புறத்தில் இத்தனை வசதிகளா!! புதிய வீடியோ வெளியீடு!

இவை எல்லாம் சேர்ந்துதான் டேஸ்போர்டை மிகவும் காஸ்ட்லீயானதாக காட்டுகின்றன. ஸ்லாவியாவின் டாப் வேரியண்ட் கீழிறக்கும் வசதி உடன் 4 ஜன்னல் கண்ணாடிகள், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முதலியவற்றை பெற்றுள்ளதாக ஸ்கோடா ஏற்கனவே தெரிவித்திருந்தது.

செம்ம... ஸ்கோடா ஸ்லாவியாவின் உட்புறத்தில் இத்தனை வசதிகளா!! புதிய வீடியோ வெளியீடு!

இவற்றுடன் வயர் இல்லா போன் சார்ஜிங் பேட், பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், க்ரூஸ் கண்ட்ரோல், துளையிடப்பட்ட இரட்டை நிற லெதர் உள்ளமைவு, மடக்கும் வசதிகளுடன் முன் இருக்கைகள், எலக்ட்ரிக் சன்ரூஃப், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பின்பக்க ஏசி துளைகள், யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதி, தன்னிச்சையாக டிம்-ஆகக்கூடிய பின்பக்கத்தை காட்டும் உட்புற கண்ணாடி, 8 அதி செயல்திறன்மிக்க ஸ்பீக்கர்கள் & சப்-வூஃபர் உடன் ஸ்கோடா சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவையும் இந்த செடான் காரில் இடம்பெற்றுள்ளன.

செம்ம... ஸ்கோடா ஸ்லாவியாவின் உட்புறத்தில் இத்தனை வசதிகளா!! புதிய வீடியோ வெளியீடு!

இதன் ஸ்டேரிங் சக்கரம் முன் & பின்பக்கமாக நகர்த்து வசதி மற்றும் தேவைக்கேற்ப சாய்த்து கொள்ளும் வசதி உடன் வழங்கப்பட உள்ளது. இத்தகைய வசதிகளுடன் ஸ்லாவியாவின் கேபின் பிரீமியம் தரத்தில் அலங்கரிக்கப்பட்டிருப்பதுடன், உட்புறத்தில் இடவசதியும் நன்கு விசாலமானதாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியும் 521 லிட்டர் கொள்ளளவில் போதுமான அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

செம்ம... ஸ்கோடா ஸ்லாவியாவின் உட்புறத்தில் இத்தனை வசதிகளா!! புதிய வீடியோ வெளியீடு!

பயணிகளின் பாதுகாப்பிற்கு என்ஜினை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்ய பொத்தான், 6 காற்றுப்பைகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், காரை சுற்றிலும் ஏற்படும் மோதல்களை தவிர்க்கும் விதமான ப்ரேக்கிங், ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், பிரேக் டிஸ்க் துடைப்பான் மற்றும் எலக்ட்ரானிக் ப்ரேக் வழங்கி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் கூல்டு க்ளோவ் பாக்ஸ் மற்றும் கேபினிற்குள் ஆங்காங்கே கப் ஹோல்டர்கள் போன்ற காலி இடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

செம்ம... ஸ்கோடா ஸ்லாவியாவின் உட்புறத்தில் இத்தனை வசதிகளா!! புதிய வீடியோ வெளியீடு!

இந்தியா 2.0 திட்டத்தில் முதல் ஸ்கோடா காராக வெளிவந்த குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி மாடல்களின் அதே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்லாவியா இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் ஒன்றான 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎஸ் மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

செம்ம... ஸ்கோடா ஸ்லாவியாவின் உட்புறத்தில் இத்தனை வசதிகளா!! புதிய வீடியோ வெளியீடு!

இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன. மற்றொரு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த பெட்ரோல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda released slavia sedan new video showing interiors and features
Story first published: Thursday, January 20, 2022, 22:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X