இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரின் உற்பத்தி தொடங்கியது... மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஸ்கோடா ஸ்லாவியா காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரின் உற்பத்தி தொடங்கியது... மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

ஸ்கோடா நிறுவனம் வெகு விரைவில் ஸ்லாவியா (Skoda Slavia) காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது காம்பேக்ட் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஸ்கோடா ஸ்லாவியா காரின் உற்பத்தி பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. வரும் மார்ச் மாதம் ஸ்கோடா ஸ்லாவியா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரின் உற்பத்தி தொடங்கியது... மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே MQB A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஸ்கோடா ஸ்லாவியா காரும் உருவாக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் சஹான் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஸ்கோடா ஸ்லாவியா காம்பேக்ட் செடான் கார் உற்பத்தி பணிகள் நடைபெறுகின்றன.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரின் உற்பத்தி தொடங்கியது... மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

இந்திய சந்தையை மனதில் வைத்து ஸ்லாவியா காரை உருவாக்கியுள்ளதாக ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 4,541 மிமீ, 1,752 மிமீ மற்றும் 1,487 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,651 மிமீ ஆக உள்ளது. அதே சமயம் ஸ்கோடா ஸ்லாவியா காரில், எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரின் உற்பத்தி தொடங்கியது... மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

அத்துடன் இதன் மல்டி ஸ்போக் 16 இன்ச் அலாய் வீல்களும் கவனம் ஈர்க்கின்றன. பின் பகுதியை பொறுத்தவரையில் 'C' வடிவ எல்இடி டெயில்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் உள் பகுதியில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 10 இன்ச் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரின் உற்பத்தி தொடங்கியது... மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

மேலும் 2 ஸ்போக் மல்டி ஃபங்ஷனல் ஸ்டியரிங் வீலையும் ஸ்கோடா ஸ்லாவியா கார் பெற்றுள்ளது. மேலும் முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வெண்ட்கள் ஆகிய வசதிகளும் ஸ்கோடா ஸ்லாவியா காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதுகாப்பு வசதிகளிலும் ஸ்கோடா ஸ்லாவியா கார் தலைசிறந்து விளங்குகிறது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரின் உற்பத்தி தொடங்கியது... மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், இபிஎஸ் உடன் ஏபிஎஸ், இஎஸ்சி, ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மொத்தம் 3 வேரியண்ட்களில் ஸ்கோடா ஸ்லாவியா கார் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரின் உற்பத்தி தொடங்கியது... மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

1.0 லிட்டர் டிஎஸ்ஐ மூன்று சிலிண்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ நான்கு சிலிண்டர் என மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகளை ஸ்கோடா ஸ்லாவியா கார் பெற்றுள்ளது. இதில் முதலாவது இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரின் உற்பத்தி தொடங்கியது... மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

அதே நேரத்தில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்படும். அதே சமயம் இரண்டாவது இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரின் உற்பத்தி தொடங்கியது... மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

இந்தியாவில் கார் விற்பனை எண்ணிக்கையை பொறுத்தவரை ஸ்கோடா நிறுவனம் மிகவும் பின்தங்கியுள்ளது. எனினும் இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன், தனது வியாபாரத்தை ஸ்கோடா நிறுவனம் புதுப்பித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரின் உற்பத்தி தொடங்கியது... மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக் காரை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். இது மிட்-சைஸ் செடான் கார் ஆகும். ஸ்கோடா குஷாக் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஸ்கோடா நிறுவனம் ஸ்லாவியா செடான் காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. விலை நிர்ணயம் சரியாக இருந்தால், ஸ்கோடா ஸ்லாவியா காரும் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda slavia compact sedan production begins in india here are all the details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X