ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?

இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?

இந்திய மார்க்கெட்டில் சமீப ஆண்டுகளாக செடான் கார்கள் செல்வாக்கை இழந்து வருகின்றன. அவை தங்களது சந்தை பங்கை எஸ்யூவி கார்களிடம் தாரை வார்த்து கொண்டுள்ளன. எனினும் ஒரு சில நிறுவனங்கள் இந்தியாவின் செடான் செக்மெண்ட் மீண்டு வரும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஸ்கோடாவும் ஒன்று.

ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?

ஸ்கோடா நிறுவனத்திடம் இருந்து சமீபத்தில் விற்பனைக்கு வந்த புதிய செடான் கார் ஸ்லாவியா. இது இந்தியாவின் மிட்-சைஸ் செடான் செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்கோடா நிறுவனம் 2,431 ஸ்லாவியா கார்களை விற்பனை செய்துள்ளது. அதற்கு முந்தைய மார்ச் மாதம் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் 2,665 ஸ்லாவியா கார்களை விற்பனை செய்திருந்தது.

ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?

இது ஸ்கோடா ஸ்லாவியா காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள 8.78 சதவீத வீழ்ச்சியாகும். இது சிறிய சரிவுதான் என்றாலும் இந்திய சந்தையில் சமீப காலமாக ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக ஸ்லாவியா மாறியுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா கார் நடப்பாண்டுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?

எனவே கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் இதன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. ஸ்கோடா ஸ்லாவியா கார் இந்திய சந்தையில் 2 இன்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கிறது. இதில், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்லைன்-3 பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?

6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகளுடன் இந்த இன்ஜின் கிடைக்கும். இதுதவிர 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்லைன்-4 பெட்ரோல் இன்ஜின் தேர்வும் ஸ்கோடா ஸ்லாவியா காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?

ஸ்கோடா ஸ்லாவியா காரில் டீசல் இன்ஜின் தேர்வு இல்லை. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற கார்கள் ஸ்கோடா ஸ்லாவியா காரின் மிக முக்கியமான போட்டி மாடல்களாக உள்ளன. இந்த வரிசையில் மேலும் ஒரு செடான் கார் ஸ்கோடா ஸ்லாவியாவிற்கு போட்டியாக வரவுள்ளது.

ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?

இங்கே குறிப்பிட வேண்டிய சுவாரஸ்யம் என்னவென்றால், அதுவும் ஸ்கோடா நிறுவனம் செயல்பட்டு வரும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தை சேர்ந்ததுதான். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?

சரியாக சொல்வதென்றால் வரும் ஜூன் 9ம் தேதி இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன. இந்த காரை இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு அனுப்பும் பணிகளையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தொடங்கி விட்டது.

ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?

இனி விலையை அறிவிப்பதும், முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படுவதும் மட்டும்தான் பாக்கி. அதுவும் வரும் ஜூன் 9ம் தேதி நடந்து விடும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள் கார்களில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும் ஒன்றாகும். எனவே ஸ்கோடா ஸ்லாவியா காரை போலவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?

இதற்கு முன்னதாக ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் இருந்து வெளிவந்த ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய இரண்டு கார்களுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவை இரண்டும் மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள் ஆகும். இதேபோல் மிட்-சைஸ் செடான் செக்மெண்ட்டில் ஸ்கோடா ஸ்லாவியாவுடன், ஃபோக்ஸ்வேகன் டைகுனும் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda slavia sales decline by 8 78 per cent in april 2022 check full details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X