சூரரை போற்று நடிகை அபர்ணா வாங்கியிருக்கும் காரா இது!.. இந்த காருல போறதுக்கு எல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்!

சூரரைப் போற்று படத்தின் கதாநாயகி அபர்ணா பாலமுரளி விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரொம்ப நாள்கூட ஆகல... அதுக்குள்ள இவ்ளோ விலையுயர்ந்த காரை வாங்கிட்டாங்களா! நடிகை அபர்ணாவின் புதிய கார் விலை எவ்வளவு தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு காரை பிரபல நடிகை அபர்ணா பாலமுரளி வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை நடிகை அபர்ணா அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். திரையுலகில் கால் தடம் பதித்து வெகுசில ஆண்டுகளே ஆகின்ற நிலையில், அபர்ணா பெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்துக் கொண்டிருக்கின்றது.

ரொம்ப நாள்கூட ஆகல... அதுக்குள்ள இவ்ளோ விலையுயர்ந்த காரை வாங்கிட்டாங்களா! நடிகை அபர்ணாவின் புதிய கார் விலை எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக, அவரின் லேட்டஸ்ட் கொள்முதல் (பென்ஸ் கார் வாங்கியிருப்பது) நிகழ்வு ஒட்டுமொத்த திரையுலகினரின் பார்வையும் அபர்ணாவின் பக்கம் திரும்ப செய்திருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜிஎல்ஏ (Mercedes-Benz AMG GLA35) காரையே அவர் வாங்கியிருக்கின்றார். இந்த கார் தற்போதைய நிலவரப்படி ரூ. 60 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

ரொம்ப நாள்கூட ஆகல... அதுக்குள்ள இவ்ளோ விலையுயர்ந்த காரை வாங்கிட்டாங்களா! நடிகை அபர்ணாவின் புதிய கார் விலை எவ்வளவு தெரியுமா?

மேலே பார்த்தது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய விலையுயர்ந்த காரையே அபர்ணா தற்போது வாங்கியிருக்கின்றார். இந்த வாகனம் இவ்வளவு அதிக விலையில் விற்கப்படுவதற்கு அதில் வழங்கப்பட்டிருக்கும் ஆடம்பர வசதிகளே முக்கிய காரணமாக இருக்கின்றது. இக்காரின் கேபின் பிரீமியம் தோற்றம் மற்றும் சொகுசு வசதிகளால் நிரப்பிவிடப்பட்டிருக்கின்றது.

ரொம்ப நாள்கூட ஆகல... அதுக்குள்ள இவ்ளோ விலையுயர்ந்த காரை வாங்கிட்டாங்களா! நடிகை அபர்ணாவின் புதிய கார் விலை எவ்வளவு தெரியுமா?

முழுக்க முழுக்க இக்காரின் கேபினை கருப்பு நிறத்தால் பென்ஸ் நிறுவனம் அலங்கரித்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, மிக சொகுசான பயண அனுபவத்தை பயணிகள் பெற்றுக் கொள்ளும் விதமாக ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் காருக்குள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் திரை, டிஜிட்டல் டிரைவர் திரை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

ரொம்ப நாள்கூட ஆகல... அதுக்குள்ள இவ்ளோ விலையுயர்ந்த காரை வாங்கிட்டாங்களா! நடிகை அபர்ணாவின் புதிய கார் விலை எவ்வளவு தெரியுமா?

இவ்விரு திரைகளும் 10.25 அங்குல அளவுடையது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே அளவுள்ள திரைகளே ஏ-கிளாஸ் லிமோசைன் கார்களில் மெர்சிடிஸ் வழங்குகின்றது. இதுமட்டுமின்றி இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ரேடார் தொழில்நுட்பம் அடிப்படையிலான பிரேக்கிங் அசிஸ்ட் சிஸ்டம், 7 ஏர் பேக்குகள், ஆக்டீவ் பான்னட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ரொம்ப நாள்கூட ஆகல... அதுக்குள்ள இவ்ளோ விலையுயர்ந்த காரை வாங்கிட்டாங்களா! நடிகை அபர்ணாவின் புதிய கார் விலை எவ்வளவு தெரியுமா?

இவற்றைத் தொடர்ந்து, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ காரில் 64 வண்ணங்களை உள்ளடக்கிய ஆம்பியன்ட் மின் விளக்கு, டூயல் ஜோன் டெம்ப்ரேச்சர் கன்ட்ரோல், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், ஒயர்லெஸ் சார்ஜிங் பேட், பனோரமிக் சன்ரூஃப், யுஎஸ்பி சி போர்ட் மற்றும் எலெக்ட்ரிக் அசிஸ்ட் டெயில் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

ரொம்ப நாள்கூட ஆகல... அதுக்குள்ள இவ்ளோ விலையுயர்ந்த காரை வாங்கிட்டாங்களா! நடிகை அபர்ணாவின் புதிய கார் விலை எவ்வளவு தெரியுமா?

இதுமாதிரியான அம்சங்களால் இந்த வாகனத்தின் உட்பக்கம் மிகவும் ரம்மியமானதாகக் காட்சியளிக்கின்றது. மேலும், பயணங்களையும் அதிக சுவராஷ்யமானதாக அவை மாற்றுகின்றன. இத்தகைய சூப்பரான கார் மாடலையே அபர்ணா பாலமுரளி தற்போது வாங்கியிருக்கின்றார். இவர் வாங்கியிருக்கும் கார் ,அவரை போலவே அதிக அழகானதாகவும் காட்சியளிக்கின்றது.

ரொம்ப நாள்கூட ஆகல... அதுக்குள்ள இவ்ளோ விலையுயர்ந்த காரை வாங்கிட்டாங்களா! நடிகை அபர்ணாவின் புதிய கார் விலை எவ்வளவு தெரியுமா?

இதன் அழகிற்காக மல்டி பீம்கள் கொண்ட எல்இடி ஹெட்லைட், புதிய ஸ்பிளிட் ரக டெயில் லைட், 18 அங்குல ஸ்குவாரிஷ் வீல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையே காரை அழகானதாக மட்டுமின்றி ஸ்போர்ட்டி தோற்றத்தைக் கொண்டதாகவும் காட்சியளிக்க உதவியாக இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க அபர்ணா வாங்கியிருக்கும் இந்த சொகுசு கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது.

ரொம்ப நாள்கூட ஆகல... அதுக்குள்ள இவ்ளோ விலையுயர்ந்த காரை வாங்கிட்டாங்களா! நடிகை அபர்ணாவின் புதிய கார் விலை எவ்வளவு தெரியுமா?

இந்த சூப்பர் ஃபாஸ்ட் பவருக்காக மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 302 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு டிடிசி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கருவியே இந்த சொகுசு காரில் வவங்கப்பட்டுள்ளது. இத்துடன், ஆல்-வீல் டிரைவிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரொம்ப நாள்கூட ஆகல... அதுக்குள்ள இவ்ளோ விலையுயர்ந்த காரை வாங்கிட்டாங்களா! நடிகை அபர்ணாவின் புதிய கார் விலை எவ்வளவு தெரியுமா?

இதுமாதிரியான அம்சங்களை இந்த வாகனம் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அபர்ணா தற்போது மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ காரை வாங்கியிருக்கின்றார். 2015ம் ஆண்டிலேயே இவர் திரையுலகில் கால் தடம் பதித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கின்ற போதிலும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்த திரைப்படமாக சூரரைப் போற்று இருக்கின்றது. இந்த படத்தில் நடித்ததன் வாயிலாக அவர் தற்போது தேசிய விருதைப் பெற்ற நடிகையாக அவர் மாறியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Soorarai potru actress aparana balamurali reveals latestly bought luxury car
Story first published: Monday, September 19, 2022, 13:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X