மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு? குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!

குளோபல் என்சிஏபி (Global NCAP) மாருதி சுஸுகி (Maruti Suzuki), எஸ்-பிரஸ்ஸோ (S Presso), காரின் லேட்டஸ்ட் கிராஷ் டெஸ்ட் ரிசல்டை வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு?.. இதோ குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை கார் மாடல்களில் மாருதி சுஸுகி (Maruti Suzuki), நிறுவனத்தின் எஸ்-பிரஸ்ஸோ (S Presso) -வும் ஒன்று. இந்த காரை சுஸுகி நிறுவனம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், தெற்கு ஆப்பிரிக்காவிலும் இந்த காரை சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு?.. இதோ குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!

மேட்-இன்-இந்தியா எஸ்-பிரஸ்ஸோ கார்களே அங்கு விற்கப்படுகின்றன. இந்த வாகனத்தின் பாதுகாப்பு திறனையே குளோபல் என்சிஏபி (Global NCAP) சமீபத்தில் சோதித்து பார்த்தது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் தென்னாப்பிரிக்காவிற்கான எஸ்-பிரஸ்ஸோ காரை அது மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு?.. இதோ குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!

இந்த ஆய்வில் கணிசமான அளவிலான ஸ்டார் ரேட்டிங்கை எஸ்-பிரஸ்ஸோ பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகபட்சமாக மாருதி சுஸுகி எஸ்பிரஸ்ஸோ ஐந்து ஸ்டார்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மோதல் ஆய்வில் மூன்று ஸ்டார்களை மட்டுமே பெற்றிருக்கின்றது. இது பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் எஸ்-பிரஸ்ஸோ பெற்ற ரேட்டிங் ஆகும்.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு?.. இதோ குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!

அதேவேலையில், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் மிக மிக குறைவான புள்ளிகளேயே எஸ்-பிரஸ்ஸோ பெற்றிருக்கின்றது. அது வெறும் இரண்டு ஸ்டார்களை மட்டுமே பெற்றிருக்கின்றது. இதுவும், ஐந்து ஸ்டார்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு?.. இதோ குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!

சிறுவர்களுக்கு மிக மிக குறைவான பாதுகாப்பையே எஸ்-பிரஸ்ஸோ வழங்கும் என்பதை இந்த மிக மிக குறைவான ஸ்டார்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. அதேவேலையில், இந்த ஸ்டார்கள் முன்பைக் காட்டிலும் எவ்வளவோ மேல் என கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக இதே எஸ்-பிரஸ்ஸோ காரை குளோபல் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியபோது, அந்த வாகனம் மிக மிக குறைவான ஸ்டார்களையே பெற்றது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு?.. இதோ குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!

குறிப்பாக, பெரியவர்களுக்கான பாதுகாப்பு குறித்து 2020 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது ஒரு ஸ்டார்களைக்கூட பெறாமல் எஸ்-பிரஸ்ஸோ மண்ணைக் கவ்வியது. அதேவேலையில், 2 ஸ்டார்களை சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் அது பெற்றிருந்தது. இத்தகைய குறைவான ஸ்டார் ரேட்டிங்கை எஸ்-பிரஸ்ஸோ பெற்றதன் விளைவாக இதன் சிங்கிள் ஏர்-பேக் வேரியண்டை விற்பனையில் இருந்து வெளியேற்றியது மாருதி சுஸுகி.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு?.. இதோ குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!

இதுமட்டுமின்றி ஆல்டோவில் விற்பனைக்குக் கிடைத்து வந்த ஒற்றை ஏர்-பேக் தேர்வையும் அது விற்பனையில் இருந்து அகற்றியது. இந்த நிலையிலேயே தற்போதைய புதிய மோதல் ஆய்வில் கணிசமான ஸ்டார்களை எஸ்-பிரஸ்ஸோ பெற்றிருக்கின்றது. ஆனால், தற்போது பெற்றிருக்கும் புள்ளிகள் அதீத பாதுகாப்பிற்கு போதாது என வாகனத்துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு?.. இதோ குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!

ஆனால், கணிசமான பாதுகாப்பே போதும் என்போருக்கு தற்போது பெற்றிருக்கும் புள்ளிகள் போதுமானது என்றும் அவர்கள் கூடுதல் கருத்தைத் தெரிவித்துள்ளனர். தெற்கு ஆப்பிரிக்காவில் விற்கப்படும் எஸ்-பிரஸ்ஸோ காரில் இரு ஏர்-பேக் மற்றும் முன்பக்க சீட்பெல்ட் ப்ரீடென்சனர் ஆகியவை ஸ்டாண்டர்டு பாதுகாப்பு அம்சங்களாக வழங்கப்படுகின்றன.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு?.. இதோ குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!

இதுமாதிரியான பாதுகாப்பு கருவிகளை அக்கார் கொண்டிருப்பதனாலயே மோதல் ஆய்வில் கணிசமான ஸ்டார்களைக் குவித்துள்ளது. அதேவேலையில், டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களோ ஐந்து ஸ்டார்களையும் குவிக்கக் கூடிய வாகனங்களை தயாரிப்பதில் போட்டாபோட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு?.. இதோ குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!

சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய எக்ஸ்யூவி 700, 'சேஃபஸ்ட் சாய்ஸ்' என்ற விருதை குளோபல் என்சிஏபி-யிடம் வென்றது. இந்த மாதிரியான சூழலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளோ நான்கு ஸ்டார்களை தொடுவதற்கே தடுமாறிக் கொண்டிருக்கின்றது. தன்னுடைய தயாரிப்புகளை விலைக் குறைவானதாக வழங்கும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதனாலயே மாருதி சுஸுகி இத்தகைய சிக்கலை அது சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

அதேவேலையில், இந்திய அரசோ நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களை அதிக பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது. இதற்காக சொந்த 'பாரத் என்சிஏபி' அமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு சமீபத்திலேயே வழங்கியது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு?.. இதோ குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!

இந்த அமைப்பு நாட்டில் விற்கப்படும் அனைத்து வாகனங்களையும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அவற்றின் பாதுகாப்பு திறன்குறித்து ஆராயும். இதுமட்டுமின்றி, நாட்டில் விற்கப்படும் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் போன்ற சில கடுமையான விதிகளும் அமல்படுத்தப்பட இருக்கின்றது. சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான பாதிப்புகளைக் குறைக்கும் பொருட்டு இதுமாதிரியான கெடுபிடியில் அரசு களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles
English summary
South africa spec maruti s presso gets 3 star safety rating in global ncap
Story first published: Thursday, June 30, 2022, 11:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X