நம்ம ஊருல இந்த சுசுகி கார் இன்னும் அறிமுகம்கூட ஆகல... அதுக்குள்ள டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

பிரபல நிறுவனம் ஒன்று உலக ஃபேமஸான கார் மாடல் ஒன்றை டூப்ளிகேட் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நம்ம ஊருல இந்த சுசுகி கார் இன்னும் விற்பனைக்குகூட வரல... அதுக்குள்ள டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க! வேற யாரு சீனாக்காரங்கதான்!

சீன நிறுவனம் ஒன்று வேர்ல்டு ஃபேமஸான கார் மாடலுக்கு போட்டியளிப்பதற்காக அந்த காரையே அப்படியே டூப்ளிகேட் செய்து புதிய கார் மாடலை உருவாக்கி இருக்கின்றது. சீன நிறுவனத்தின் இந்த செயல் வாகன உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

நம்ம ஊருல இந்த சுசுகி கார் இன்னும் விற்பனைக்குகூட வரல... அதுக்குள்ள டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க! வேற யாரு சீனாக்காரங்கதான்!

சீன நிறுவனங்கள் இதுபோன்று பிற நிறுவனங்களின் புகழ்பெற்ற கார் மாடல்களை டூப்ளிகேட் செய்து புதிய வாகனத்தை உருவாக்குவது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்று காப்பியடிப்பு சம்பவங்களை சீன நிறுவனங்கள் அரங்கேற்றி இருக்கின்றன. அந்தவகையில், மிக மிக சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த ஜெடூர் நிறுவனம் டி-எக்ஸ் எனும் ஹைபிரிட் காரை வெளியீடு செய்தது.

நம்ம ஊருல இந்த சுசுகி கார் இன்னும் விற்பனைக்குகூட வரல... அதுக்குள்ள டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க! வேற யாரு சீனாக்காரங்கதான்!

இது ஓர் கான்செப்ட் மாடல் வாகனமாகும். ஃபோர்டு நிறுவனத்தின் ப்ரோன்கோ மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் ஆகிய கார் மாடல்களின் டூப்ளிகேட் வெர்ஷனே டி-எக்ஸ் கார். இரு வெவ்வேறு கார்களின் கலவையாக இது உருவாக்கப்பட்டிருந்தாலும், சில தனித்துவமான அம்சங்களை அக்கார் பெற்றிருக்கின்றது.

நம்ம ஊருல இந்த சுசுகி கார் இன்னும் விற்பனைக்குகூட வரல... அதுக்குள்ள டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க! வேற யாரு சீனாக்காரங்கதான்!

இருப்பினும், உருவமானது ஃபோர்டு ப்ரோன்கோ மற்றும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் ஆகிய கார்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் மற்றுமொரு சீன நிறுவனம், வேர்ல்டு பேமஸான கார் மாடல் ஒன்றை டூப்ளிகேட் செய்திருக்கின்றது.

நம்ம ஊருல இந்த சுசுகி கார் இன்னும் விற்பனைக்குகூட வரல... அதுக்குள்ள டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க! வேற யாரு சீனாக்காரங்கதான்!

மாருதி சுசுகி நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்றாக இருக்கும் ஜிம்னி (Jimny)-யே தற்போது டூப்ளிகேட் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த காருக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. மிக விரைவில் இந்த கார் நமது நாட்டில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நம்ம ஊருல இந்த சுசுகி கார் இன்னும் விற்பனைக்குகூட வரல... அதுக்குள்ள டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க! வேற யாரு சீனாக்காரங்கதான்!

இந்த மாதிரியான சூழலிலேயே சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல சீன நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் சுசுகி ஜிம்னியை டூப்ளிகேட் செய்திருக்கின்றது. டேங்க் 100 (Tank 100) எனும் பெயரில் புதிய கார் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது. மூன்று கதவுகள் மற்றும் ஐந்து கதவுகள் என இரு விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

நம்ம ஊருல இந்த சுசுகி கார் இன்னும் விற்பனைக்குகூட வரல... அதுக்குள்ள டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க! வேற யாரு சீனாக்காரங்கதான்!

புதிய டேங்க் 100 காரின் முகப்பு பகுதி மற்றும் பாக்ஸ் போன்ற உருவ அமைப்பை வைத்தே இதனை ஜிம்னியின் காப்பி வெர்ஷன் என்று அழைக்கத் தொடங்கி இருக்கின்றனர். அதேநேரத்தில் சிறு சிறு வித்தியாசங்களைக் கொடுக்கும் வகையில் சற்றே வித்தியாசமான அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நம்ம ஊருல இந்த சுசுகி கார் இன்னும் விற்பனைக்குகூட வரல... அதுக்குள்ள டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க! வேற யாரு சீனாக்காரங்கதான்!

சுசுகி ஜிம்னி காரின் படம்

அந்தவகையில், முழு கருப்பு நிறத்திலான மல்டி-ஸ்லேட் அமைப்பு கொண்ட க்ரில், இந்த க்ரில்லின் இரு முனைகளில் வட்ட வடிவ ஹெட்லேம்ப் எல்இடி டிஆர்எல்களுடன் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த ஹெட்லேம்பிலேயே டர்ன் இன்டிகேட்டர்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

நம்ம ஊருல இந்த சுசுகி கார் இன்னும் விற்பனைக்குகூட வரல... அதுக்குள்ள டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க! வேற யாரு சீனாக்காரங்கதான்!

சுசுகி ஜிம்னி காரின் படம்

இத்துடன், கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மிகவும் முரட்டுதனமான பேனல்கள், டயர்கள், ரிம்கள் மற்றும் கிளாடிங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவையே இந்த காரையே சுசுகி ஜிம்னியை போல் காட்சியளிக்க வைத்திருக்கின்றன. மேலும், கருப்பு நிற ரூஃப், ரூஃபில் ஸ்டாப் லேம்ப், பின் பக்கத்தில் ஸ்பேர் வீல் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.

நம்ம ஊருல இந்த சுசுகி கார் இன்னும் விற்பனைக்குகூட வரல... அதுக்குள்ள டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க! வேற யாரு சீனாக்காரங்கதான்!

சுசுகி ஜிம்னி காரின் படம்

டேங்க் 100 காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 224 பிஎச்பி பவர் மற்றும் 387 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. நான்கு வீல்கள் இயக்கம் திறன் வசதியுடனும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆனால், இந்த வசதி உயர் நிலை வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Suzuki jimny copycat tank 100 suv debuts in china
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X