சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நல்ல காரியம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

ஐபிஎல் 2022 கிரிக்கெட் திருவிழாவில், டாடா பன்ச் காஸிரங்கா எடிசன் ஏலம் விடப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. ஐபிஎல் 2022 திருவிழாவின்போது, மே 1-3 நாட்களில் இந்த ஏலம் நடைபெற்றது. இதில், டாடா பன்ச் காஸிரங்கா எடிசனுக்கு ரசிகர்கள் ஆன்லைன் மூலம் ஏலம் கேட்டனர்.

சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இந்த சூழலில், டாடா பன்ச் காஸிரங்கா எடிசன் ஏலத்தின் வெற்றியாளர் யார்? என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. புனே நகரை சேர்ந்த அமீர்கான் என்பவர்தான் இந்த ஏலத்தின் வெற்றியாளர் ஆவார். ஏலம் விடப்பட்ட டாடா பன்ச் காஸிரங்கா எடிசன் காரின் சாவி தற்போது அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இதற்கான நிகழ்ச்சி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதனுடன் ஐபிஎல் இறுதி போட்டிக்கான 2 டிக்கெட்களையும் அமீர்கான் வென்றுள்ளார். இதுதவிர காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு பயணம் செய்யும் வாய்ப்பையும் அமீர்கான் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்திற்கு அவர் எந்த செலவையும் செய்ய வேண்டியதில்லை.

சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

மேலும் டாடா பன்ச் காஸிரங்கா எடிசனின் கூடுதல் ஆக்சஸெரீஸ்களையும் அவர் வென்றுள்ளார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்திருந்ததன்படி, இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த வருமானம் அனைத்தும் காஸிரங்கா தேசிய பூங்காவின் பாதுகாப்பிற்காக வழங்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள காஸிரங்கா தேசிய பூங்காவை பற்றி தனியாக அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறோம்.

சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

உலகில் காண்டாமிருகங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் வேட்டைக்காரரர்களால் காண்டமிருகங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரிய விலங்குகளில் ஒன்றான காண்டாமிருகங்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாக்கும் விதமாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் காஸிரங்கா எடிசனை ஏலத்தில் விட்டு, அதன் வருமானத்தை வழங்கியுள்ளது.

சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

டாடா பன்ச் காரை பொறுத்தவரையில், இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து சமீபத்தில் வெளிவந்த கார் ஆகும். இது மைக்ரோ-எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக டாடா பன்ச் உருவெடுத்துள்ளது. இது மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்று என்பது இதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா பன்ச் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. டாடா பன்ச் காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் கூடிய 7 இன்ச் ஹார்மன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது.

சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இதுதவிர செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், ஸ்மார்ட் கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ளது.

சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 84.48 பிஹெச்பி பவரையும், 3,300 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது பன்ச் காரின் காஸிரங்கா எடிசனை ஏலம் விட்டு, அதனை காஸிரங்கா தேசிய பூங்கா மற்றும் அங்குள்ள காண்டாமிருகங்களின் பாதுகாப்பிற்காக வழங்கியிருப்பதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டியதின் முக்கியத்துவத்தையும் இது அனைவருக்கும் உணர்த்துவதாக இருக்கிறது.

சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் காலங்களில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில், ஐசி இன்ஜின் வெர்ஷனை போலவே, டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறலாம்.

Most Read Articles
English summary
Tata announces the auction winner of its punch kaziranga edition check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X