அடடே போற போக்க பாத்தா டாடா கார்கள்தான் சாலை முழுக்க இருக்கும் போலிருக்கே.. சூப்பரான வளர்ச்சி பாதையில் டாடா!

டாடா மோட்டார்ஸின் கார்களுக்கு இந்தியாவில் பல மடங்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, 2021 நவம்பரைக் காட்டிலும் 2022 நவம்பரில் பல மடங்கு விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெற்றிருப்பதாக தற்போது ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பான கார்களை விற்பனைக்கு வழங்கும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் இருக்கின்றது. இந்-நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் பாதுகாப்பு ரேட்டிங்கில் 4 முதல் 5 ஸ்டார்களைப் பெற்றவையாக இருக்கின்றன. இதுபோன்ற காரணத்தினாலயோ என்னமோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 2022 நவம்பரில் அதிக எண்ணிக்கையில் டாடா வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன.

டாடா

ஒட்டுமொத்தமாக 75,478 யூனிட் டாடா வாகனங்கள் கடந்த 2022 நவம்பரில் விற்பனையாகி உள்ளன. உள் மற்றும் வெளிநாடு என இரண்டிலும் சேர்த்து விற்பனைச் செய்யப்பட்ட எண்ணிக்கை இதுவாகும். இதுமட்டுமில்லைங்க, வர்த்தகம் மற்றும் பயணிகள் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையும் இதிலேயே அடங்கும். இந்த எண்ணிக்கை கடந்த 2021 நவம்பரைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் நிறுவனம் ஒட்டுமொத்தமாகவே 62,192 யூனிட் வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது.

இதை வைத்து பார்க்கையில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு நடப்பாண்டு நவம்பரில் மேலும் அதிகரித்திருப்பது தெளிவாக தெரிகின்றது. அதேவேலையில், வர்த்தக வாகன பிரிவு லேசான விற்பனைச் சரிவைச் சந்தித்திருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இதற்கு நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த பிரிவு 2021 நவம்பரைக் காட்டிலும் 2022 நவம்பரில் 55 சதவீதம் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்திருக்கின்றது.

சென்ற நவம்பரில் மட்டும் டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகனம் 46,037 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதே டாடாவின் பயணிகள் வாகனம் கடந்த ஆண்டு நவம்பரில் வெறும் 29,778 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனையில் மின்சார வாகனங்களும் அடங்கும். நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் 146 சதவீதம் விற்பனை வளர்ச்சியை அடைந்திருக்கின்றது. 2021 நவம்பரில் 1,811 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையான நிலையில் 2022 நவம்பரில் அது 4,451 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இது உண்மையில் அபரீதமான விற்பனை வளர்ச்சி ஆகும்.

டாடா மோட்டார்ஸ் மீது அதிகரித்துக் காணப்படும் நம்பிக்கையினாலேயே அது தயாரிக்கும் மின்சார வாகனங்களுக்கும் கிடை்கும் வரவேற்பு அபரீதமாக வளர்ந்துக் காணப்படுகின்றது. நிறுவனம் இப்போதைய நிலவரப்படி இந்திய சந்தையில் நெக்ஸான் இவி மேக்ஸ், நெக்ஸான் இவி பிரைம், டியாகோ இவி மற்றும் டிகோர் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றில் அதிகம் விற்பனையாகும் மின்சார காராக நெக்ஸான் இவி-யே இருக்கின்றது.

அதேவேலையில் நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி இருக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 8.49 லட்சம் மட்டுமே ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பதிலேயே குறைவான விலை மற்றும் குறைவான ரேஞ்ஜ் தரக் கூடிய டாடா எலெக்ட்ரிக் காராக இது இருக்கின்றது. இந்த மாதிரியான விலை குறைவான வாகனங்களை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சமீப காலமாக வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

நிறுவனத்தின் பயணிகள் வாகனம் மட்டுமல்ல வர்த்தக வாகன பிரிவிலும் சிலவற்றிற்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. அந்தவகையில், பயணிகளைக் கையாளும் கேரியர் ரக வாகனம் மற்றும் எம் மற்றும் எச்சிவி ரக வாகனங்களுக்கும் இந்தியாவில் கடந்த நவம்பரில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. பயணிகள் கேரியர் வாகனம் 73 சதவீத விற்பனை வளர்ச்சியையும், எம் மற்றும் எச்சிவி ரக வாகனம் 42 சதவீத விற்பனை வளர்ச்சியையும் பெற்றிருக்கின்றன.

மற்ற பிரிவில் உள்ள வாகனங்கள் லேசானது முதல் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. இருப்பினும், நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவு கை கொடுத்து விற்பனையில் வளர்ச்சி பாதையை நோக்கி நகர்த்தியிருக்கின்றது. உறுதித் தன்மை நிறைந்த வாகனங்களை நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பதும் இந்த அமோகமான விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. எதிர்காலத்திலும் இந்த வளர்ச்சி பாதையில் டாடா மோட்டார்ஸ் தொடர்ச்சியாக பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக நிறுவனம் மலிவு விலை மற்றும் சூப்பரான கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Tata domestic international 2022 november sale
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X