டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக விபரம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்ளும் வகையில் ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக விபரம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 2027ம் ஆண்டிற்குள் 10 புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கர்வ் மற்றும் அவென்யா ஆகிய கான்செப்ட் எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியது. இதுதவிர டியாகோ எலெக்ட்ரிக், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் மற்றும் பன்ச் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக விபரம்!

இதுதவிர ஹாரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இந்த எலெக்ட்ரிக் காரின் முதற்கட்ட பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த காரின் அறிமுகம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் வரும் 2023ம் ஆண்டின் மத்தியில் டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக டீம்-பிஹெச்பி செய்தி வெளியிட்டுள்ளது.

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக விபரம்!

அதேபோல் பன்ச் எலெக்ட்ரிக் காரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 2023ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகாத நிலையில், டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதை வெகு சமீபத்தில்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதி செய்தது.

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக விபரம்!

இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக 10 லட்ச ரூபாய் என்ற விலைக்குள் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வரும் செப்டம்பர் 28ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அன்றைய தினத்திலேயே விலை அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக விபரம்!

ஒருவேளை வரும் செப்டம்பர் 28ம் தேதி விலை அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அதை தொடர்ந்து வரும் வாரங்களில் விலை அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும். எனினும் வரும் செப்டம்பர் 28ம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ எலெக்ட்ரிக் காரின் தொழில்நுட்ப விபரங்கள் அனைத்தையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விடும். அதில் நமக்கு எவ்வித சந்தேகமும் தேவையில்லை.

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக விபரம்!

இருப்பினும் தற்போதைய நிலையிலேயே டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் தொழில்நுட்ப விபரங்கள் தொடர்பாக யூகங்கள் வெளியாகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே டிகோர் எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 26kWh பேட்டரி தொகுப்புதான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரிலும் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக விபரம்!

அதே நேரத்தில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் அனேகமாக 300 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரும் 2023ம் ஆண்டில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக விபரம்!

இதற்கு அடுத்தபடியாகவே ஹாரியர் மற்றும் பன்ச் எலெக்ட்ரிக் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு வரும் தெரிகிறது. எதிர்காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதன் காரணமாக தற்போது உள்ள நாட்களை போலவே எதிர்காலத்திலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Tata harrier electric suv india launch details
Story first published: Monday, September 19, 2022, 20:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X