குறைந்த விலையிலும் பிரிமியம் ஆப்ஷன்கள்... வெளியானது ஹாரியர் காரின் 3 புதிய வேரியன்ட்...

டாடா நிறுவனத்தின் ஹாரியர் கார்களில் 3 புதிய வேரியன்ட்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்

குறைந்த விலையிலும் பிரிமியம் ஆப்ஷன்கள் . . . வெளியானது ஹாரியர் காரின் 3 புதிய வேரியன்ட் . . .

டாடா நிறுவனம் அறிவித்துள்ள ஹாரியர் எஸ்யூவி கார் மக்கள் அதிகம் விரும்பும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. மக்கள் பலர் இந்த கார்களை வாங்க அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மக்களின் சௌகரியத்திற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஹாரியர் காரில் 3 புதிய வேரியண்ட்களை அறிவித்துள்ளது.

குறைந்த விலையிலும் பிரிமியம் ஆப்ஷன்கள் . . . வெளியானது ஹாரியர் காரின் 3 புதிய வேரியன்ட் . . .

அதன்படி அந்நிறுவனம் XZS, XZS Dual-Tone and XZS Dark Edition என்ற வேரியன்ட்களை அறிவித்துள்ளது. இந்த வேரியன்ட்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆகிய இரண்டு ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. இந்த புதிய வேரியன்டில் உள்ள அம்சங்கள் குறித்துக் காணலாம்.

குறைந்த விலையிலும் பிரிமியம் ஆப்ஷன்கள் . . . வெளியானது ஹாரியர் காரின் 3 புதிய வேரியன்ட் . . .

புதிய வேரியன்ட் கார்களில் பானராமிக் சன் ரூஃப், ஆர்17 டூயல் டோன் பவர் கட் அலாய் வீல், 6 வே பவர் அட்ஜெட்டபுள் சீட், அட்ஜெட்டபுள் லும்பர் சப்போர்ட், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் ஆகிய அம்சங்கள் உள்ளன. இது முன்னர் XZ+ அல்லது ZXA+ வேரியன்ட்களில் தான் கிடைக்கும்.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

குறைந்த விலையிலும் பிரிமியம் ஆப்ஷன்கள் . . . வெளியானது ஹாரியர் காரின் 3 புதிய வேரியன்ட் . . .

இந்த புதிய வேரியண்ட்களில் டிரைவர் மற்றும் கோ டிரைவருக்கான வெண்டிலேட்டட் சீட்கள், iRA கனெக்ட்டெட்ட கார் தொழில் நுட்பம், ஆகிய வசதிகள் இல்லை. இந்த வசதிகள் எல்லாம்XZ+, ZXA+ மற்றும் காஸிரங்கா எடிசன் கார்களில் மட்டும் தான் இருக்கிறது.

குறைந்த விலையிலும் பிரிமியம் ஆப்ஷன்கள் . . . வெளியானது ஹாரியர் காரின் 3 புதிய வேரியன்ட் . . .

ஆனால் புதிய வேரியன்ட் கார்களில் இந்த காரின் சாதாரண அம்சங்களான சேனான் எச்ஐடி புரோஜெக்டர் ஹெட்லைட், எலெக்ட்ரிக்கல் முறையில் மடக்கும் பக்க கண்ணாடிகள், எல்இடி டி ஆர்எல் உடன் கூடிய இன்டிகேட்டர்கள், முன் பக்க ஃபாக் விளக்குகள் இந்த காரிலும் இடம் பெற்றுள்ளது.

குறைந்த விலையிலும் பிரிமியம் ஆப்ஷன்கள் . . . வெளியானது ஹாரியர் காரின் 3 புதிய வேரியன்ட் . . .

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை 8.8 இன்ச் புளோட்டிங் ஐலேண்ட் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே, ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, காற்று சுத்திகரிப்பான், லெதர் பொருத்தப்பட்ட ஸ்டியரிங் வீல், கியர் மாற்றும் நாப், முழுவதும் ஆட்டோமெட்டிக்கால் ஆன எச்விஏசி உடன் கூடிய டெம்பரேச்சர் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன.

குறைந்த விலையிலும் பிரிமியம் ஆப்ஷன்கள் . . . வெளியானது ஹாரியர் காரின் 3 புதிய வேரியன்ட் . . .
Variant Price
XZS ₹20.00 Lakh
XZAS DT ₹20.20 Lakh
XZS Dark Edition ₹20.30 Lakh
XZAS DT ₹21.50 Lakh
XZAS Dark Edition ₹21.60 Lakh
XZAS ₹21.30 Lakh
குறைந்த விலையிலும் பிரிமியம் ஆப்ஷன்கள் . . . வெளியானது ஹாரியர் காரின் 3 புதிய வேரியன்ட் . . .

இந்த புதிய ஹாரியார் காரில் பாதுகாப்பு அம்சங்களான 6 ஏர்பேக்குகள், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஆஃப்ரோடு ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல், மழையை சென்ஸ் செய்யும் வைப்பர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள், பெரிமெட்ரிக் அலாரம் சிஸ்டம், கார்னர் ஸ்டபிலிட்டி கண்ட்ரோல், ரோல் ஓவர் மிட்டிகேஷன், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் ஆகிய அம்சங்கள் இந்த புதிய வேரியன்களில் உள்ளன.

குறைந்த விலையிலும் பிரிமியம் ஆப்ஷன்கள் . . . வெளியானது ஹாரியர் காரின் 3 புதிய வேரியன்ட் . . .

2019ம் ஆண்டு ஹாரியர் கார் வெளியான போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருந்தது. இந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 2785 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த காருக்கு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700, ஹூண்டாய் அல்காசர், எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ் ஆகிய கார்கள் மார்கெட்டில் உள்ளன.

குறைந்த விலையிலும் பிரிமியம் ஆப்ஷன்கள் . . . வெளியானது ஹாரியர் காரின் 3 புதிய வேரியன்ட் . . .

தற்போது இந்த கார் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 170 பிஎஸ் பவர் மற்றும் 350 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்களுடன் விற்பனைக்கு வருகிறது.

குறைந்த விலையிலும் பிரிமியம் ஆப்ஷன்கள் . . . வெளியானது ஹாரியர் காரின் 3 புதிய வேரியன்ட் . . .

தற்போது ஹாரியர் காரில் பெட்ரோல் ஆப்ஷன் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் பேஸ்லிஃப்ட் வெர்ஷனிற்காக டாடா நிறுவனம் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் 150 எச்பி பவருடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் புதிய அம்சமாக அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) மற்றும் 360 டிகிரி பார்க்கிங் கேமரா ஆகியவை இந்த காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Tata launched 3 new variants on harrier car know full details
Story first published: Tuesday, May 17, 2022, 13:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X