மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் அதன் டிகோர் கார் மாடலில் புதிய ஓர் ஐசிஎன்ஜி ஆப்ஷனை கூடுதலாக இணைத்திருக்கின்றது. இந்த தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் (Tata) அதன் பிரபல கார் மாடலான டிகோர் (Tigor)இல் புதிய சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே டிகோர் கார் மாடலில் எக்ஸ்இசட் (XZ) மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் (XZ+) ஆகிய ட்ரிம்களில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டு வந்தநிலையில் கூடுதலாக மூன்றாவதாக ஓர் புதிய தேர்வு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

புதிதாக எக்ஸ்எம் (XM) ட்ரிம்மிலேயே சிஎன்ஜி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இரு சிஎன்ஜி ஆப்ஷன்களைக் காட்டிலும் இது சற்று குறைவான தேர்வாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. டிகோர் ஐசிஎன்ஜி உயர்நிலை ட்ரிம்களான எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் ஆகியவற்றிலேயே விற்பனைக்குக் கிடைத்து வந்தது.

மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

இவையிரண்டிலும் சற்றும் சிறப்பம்சங்கள் என்பதால் விலையும் அதிகம். எனவேதான் இவையிரண்டைக் காட்டிலும் மலிவு விலை ஐசிஎன்ஜி தேர்வாக எக்ஸ்எம் ட்ரிம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது எக்ஸ்இசட் ட்ரிம்மைக் காட்டிலும் ரூ. 50 ஆயிரம் விலைக் குறைவான காராகும். அறிமுக விலையாக புதிய சிஎன்ஜி தேர்விற்கு ரூ. 7.39 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா நிறுவனத்தின் இந்த ஒற்றை கார் மாடலே பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் ஒரே கார் மாடலாகும். இந்தியாவில் வேறு எந்த கார் மாடலும் இவ்வாறு மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் மின்சார வாகனங்களைப் போல் சிஎன்ஜி வாகனங்களுக்கும் மிக சிறப்பாக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான் வாகன உற்பத்தியாளர்கள் பெட்ரோல் - டீசல் வாகனங்களைப் போல் சிஎன்ஜி வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதிலும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஏற்கனவே இரு ஆப்ஷன்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றநிலையில் கூடுதலாக ஓர் சிஎன்ஜி தேர்வை டிகோரில் டாடா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டிகோர் பெட்ரோல் மற்றும் மின்சாரம் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்தாலும் நிறுவனத்தின் சிஎன்ஜி ஆப்ஷன்களுக்கே அதிக டிமாண்ட் நிலவுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மிக துள்ளியமாகக் கூற வேண்டும் என்றால் சுமார் 75 சதவீதம் டிகோர் கார் மாடலில் சிஎன்ஜி தேர்வுகளே விற்பனையாகிக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய சிஎன்ஜி தேர்வு விலைக் குறைவானதாக விற்பனைக்கு வந்திருந்தாலும், அதில், சற்று சிறப்பு வசதிகள் தாராளமாகவே வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், ஹர்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, 4 ஸ்பீக்கர்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பன்முக சிறப்பம்சங்களும் டிகோர் எக்ஸ் ஐசிஎன்ஜி தேர்வில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

இத்துடன், எல்இடி டெயில் லைட், வீல் கவர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மல்டி இன்ஃபர்மேஷன் திரை, மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யும் ஓஆர்விஎம்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் டிகோர் சிஎன்ஜி தேர்வை இரு வண்ண தேர்விலும் விற்பனைக்கு வழங்குகின்றது.ஆனால், இந்த ஆப்ஷனை எக்ஸ்இசட் பிளஸ் மட்டுமே வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டிகோர் சிஎன்ஜி தேர்வுகளும் அதன் விலைகளும்:

டாடா டிகோர் ஐசிஎன்ஜி எக்ஸ்எம் தேர்வின் விலை: ரூ. 7,39,900

டாடா டிகோர் ஐசிஎன்ஜி எக்ஸ்இசட் தேர்வின் விலை: ரூ. 7,89,900

டாடா டிகோர் ஐசிஎன்ஜி எக்ஸ்இசட் பிளஸ் தேர்வின் விலை: ரூ. 8,49,900

டாடா டிகோர் ஐசிஎன்ஜி எக்ஸ்இசட் பிளஸ் டூயல் தேர்வின் விலை: ரூ. 8,58,900

மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டிகோர் ஐசிஎன்ஜி கார் மாடலில் அதிக பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஏற்கனவே இது அதிக பாதுகாப்பான கார் என்ற மகுடத்தைச் சூடியிருக்கின்றது. நான்கு ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற வாகனமே இதுவாகும். இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பன்சர் ரிப்பேர் கிட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட அம்சங்கள் டிகோர் ஐசிஎன்ஜி-யில் வழங்கப்பட்டிருக்கின்றன.

மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

எஞ்ஜினைப் பொருத்தவரை 1.2 லிட்டர், 3 சிலிடண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 73.4 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதே மோட்டாரே பெட்ரோல் வெர்ஷன் டிகோரில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த வெர்ஷனில் 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மலிவு விலையில் சிஎன்ஜி காரை வாங்க ஆசையா... பட்ஜெட் விலையில் புதிய டாடா டிகோர் ஐசிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்!

டிகோர் ஐசிஎன்ஜி தேர்வில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. அதேவேலையில், இதன் பெட்ரோல் வெர்ஷனில் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷன் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான ஆப்ஷன்களுடனேயே டாடா டிகோர் சிஎன்ஜி இந்தியாவில் குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata launches new cng variant in tigor
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X