வாடிக்கையாளர்கள் கோரிக்கை... குறிப்பிட்ட கார் வேரியண்டுகளின் விலையை குறைத்த டாடா! எவ்ளோங்க குறைச்சிருக்காங்க?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், மாருதி சுசுகி (Maruti Suzuki) உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து புதிய வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இத்துடன், வாடிக்கையாளர்களின் கருத்தை அடுத்து குறிப்பிட்ட சில கார் வேரியண்டுகளின் விலையை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வாடிக்கையாளர்கள் கோரிக்கை... சில டாடா கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலை குறைப்பு! எவ்ளோங்க குறைச்சிருக்காங்க?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் புதிய வாகனங்களின் விலையை அடுத்த மாதம் உயர்த்த இருப்பதாக கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், எவ்வளவு விலை உயர்த்தப்படும், எப்போதில் இருந்து புதிய விலை அமலுக்கு வரும் என்கிற முக்கிய தகவலை நிறுவனம் வெளியிடவில்லை.

வாடிக்கையாளர்கள் கோரிக்கை... சில டாடா கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலை குறைப்பு! எவ்ளோங்க குறைச்சிருக்காங்க?

இந்த நிலையில், நாளையில் (ஜனவரி 19) இருந்து டாடா நிறுவனத்தின் புதிய வாகனங்களின் விலை உயர்வுடன் விற்பனைச் ச செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, நிறுவனம் அறிவித்திருந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாடிக்கையாளர்கள் கோரிக்கை... சில டாடா கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலை குறைப்பு! எவ்ளோங்க குறைச்சிருக்காங்க?

0.9 சதவீதம் வரை பயணிகள் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களின் விலையை டாடா மோட்டார்ஸ் உயர்த்தி இருக்கின்றது. வேரியண்ட் மற்றும் மாடலை பொருத்து விலை உயர்வு இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், நாளையில் இருந்தே விலை உயர்வு செய்யப்பட இருப்பதால் இன்றைய தினம் பழைய விலையிலேயே டாடா கார்கள் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன.

வாடிக்கையாளர்கள் கோரிக்கை... சில டாடா கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலை குறைப்பு! எவ்ளோங்க குறைச்சிருக்காங்க?

ஆகையால், இன்று டாடா காரை புக் செய்பவர்களுக்கு புதிய விலை உயர்வு பொருந்தாது. அண்மையில் மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் வாகனங்களின் விலையை உயர்த்தியது அறிவிப்பு வெளியிட்டது. 0.1 சதவீதம் தொடங்கி 4.3 சதவீதம் வரை விலையை உயர்த்தியது, மாருதி சுசுகி.

வாடிக்கையாளர்கள் கோரிக்கை... சில டாடா கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலை குறைப்பு! எவ்ளோங்க குறைச்சிருக்காங்க?

இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் விலை உயர்வு குறித்த தகவலை வெளியிட்டிருக்கின்றது. இது டாடா காரை விரும்புவோர் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதேநேரத்தில், மாருதி சுசுகி நிறுவனத்தை போன்று வெறும் விலை உயர்வை மட்டுமே செய்யாமல், சில முக்கிய கார் மாடல்களின் விலையை டாடா குறைத்திருக்கின்றது.

வாடிக்கையாளர்கள் கோரிக்கை... சில டாடா கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலை குறைப்பு! எவ்ளோங்க குறைச்சிருக்காங்க?

ரூ. 10 ஆயிரம் வரை அது குறைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் கோரிக்கை மற்றும் கருத்துகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை நிறுவனம் குறைத்திருக்கின்றது. விரைவில் எந்த கார் மாடலின் எந்தெந்த வேரியண்டுகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீப சில காலமாக வாகன கட்டுமான பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது.

வாடிக்கையாளர்கள் கோரிக்கை... சில டாடா கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலை குறைப்பு! எவ்ளோங்க குறைச்சிருக்காங்க?

இதன் விளைவாகவே புதிய வாகனங்களின் விலையை வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக உயர்த்தி வருகின்றன. இதுவே தன்னுடைய விலை உயர்வு நடவடிக்கைக்குமான காரணம் என டாடா மோட்டார்ஸ் சுட்டிக் காட்டியிருக்கின்றது. இந்தியாவில் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் விலை உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுவிட்டன.

வாடிக்கையாளர்கள் கோரிக்கை... சில டாடா கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலை குறைப்பு! எவ்ளோங்க குறைச்சிருக்காங்க?

இது புத்தாண்டை மிகவும் கஸ்டமான ஆண்டாக மாற்ற தொடங்கியிருக்கின்றது. ஏற்கனவே கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் மக்களை தாக்க தொடங்கிவிட்டது. தற்போது மிக ஆரம்ப கட்டத்தில் காட்சியளிக்கும் வைரஸ் பரவல் வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என அரசு எச்சரித்து வருகின்றது. இதன் விளைவாக பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.

வாடிக்கையாளர்கள் கோரிக்கை... சில டாடா கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலை குறைப்பு! எவ்ளோங்க குறைச்சிருக்காங்க?

இந்த மாதிரியான சூழ்நிலையில் புதிய வாகனங்களின் விலை அதிகரித்து வருவது மக்களுக்கு மேலும் கூடுதல் பாரத்தை அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அதன் பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்தியிருந்தது. அப்போது 0.8 சதவீதம் வரை அது விலையுயர்வு செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

வாடிக்கையாளர்கள் கோரிக்கை... சில டாடா கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலை குறைப்பு! எவ்ளோங்க குறைச்சிருக்காங்க?

இந்த நிலையில் தற்போது ஒரே நாளில் விலை உயர்வு மற்றும் விலை குறைப்பு என சந்தோஷம் மறு பக்கம் துக்கம் என இரண்டையும் டாடா மோட்டார்ஸ் இந்தியர்களுக்கு வழங்கி இருக்கின்றது. சமீப சில காலமாக டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள் கோரிக்கை... சில டாடா கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலை குறைப்பு! எவ்ளோங்க குறைச்சிருக்காங்க?

நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக பாதுகாப்பு திறன் கொண்டவையாக காட்சியளிக்கின்றன. இத்துடன், டாடா கார்கள் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட காராகவும் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. இவற்றின் விளைவாக நாட்டில் கடந்த காலங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகளவில் டாடா கார்கள் விற்பனையாகத் தொடங்கியுள்ளன.

Most Read Articles
English summary
Tata motors announced price hike on its range of passenger vehicles in country
Story first published: Tuesday, January 18, 2022, 16:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X