இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு 3வது முறையாக 'பல்க்' ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார் நிறுவனம் கார் போன்ற பயணிகள் வாகனங்களை மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் பஸ்கள் போன்ற வர்த்தக வாகனங்களை தயாரித்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு, 715க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் பஸ்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சப்ளை செய்துள்ளது.

இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!

அந்த பஸ்கள் ஒட்டுமொத்தமாக 40 மில்லியன் கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக பயணம் செய்துள்ளன. அதாவது 4 கோடி கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக அந்த எலெக்ட்ரிக் பஸ்கள் இயங்கியுள்ளன. தொடர்ந்து வெற்றிகரமாக இயக்கப்பட்டும் வருகின்றன. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பல்வேறு நகரங்களில் இருந்தும் எலெக்ட்ரிக் பஸ்களுக்கான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!

இந்த வரிசையில் பிஎம்டிசி எனப்படும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்திடம் (BMTC - Bengaluru Metropolitan Transport Corporation) இருந்து தற்போது மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பிஎம்டிசி-க்கு, 921 எலெக்ட்ரிக் பஸ்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சப்ளை செய்யவுள்ளது.

இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!

இந்த மிகப்பெரிய ஆர்டரை வென்றிருக்கும் தகவலை தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இப்படி எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கான மிகப்பெரிய ஆர்டர்களை கைப்பற்றுவது இது முதல் முறையல்ல. வெகு சமீபத்தில் கூட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு 2 மிகப்பெரிய ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!

இதன்படி டிடிசி எனப்படும் டெல்லி போக்குவரத்து கழகத்திடம் (DTC - Delhi Transport Corporation) இருந்து 1,500 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் வென்றிருந்தது. அதேபோல் டபிள்யூபிடிசி எனப்படும் மேற்கு வங்க போக்குவரத்து கழகத்திடம் (WBTC - West Bengal Transport Corporation) இருந்தும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது.

இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!

இதன்படி மேற்கு வங்க போக்குவரத்து கழகத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,180 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்யவுள்ளது. இந்த வரிசையில் வெகு சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த 3வது மிகப்பெரிய எலெக்ட்ரிக் பஸ்களுக்கான ஆர்டராக தற்போதைய பிஎம்டிசி-யின் ஆர்டர் உள்ளது. வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் இதேபோல் பல்வேறு பெரிய ஆர்டர்களை வெல்லலாம்.

இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!

இதுகுறித்து பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனரான சத்யவதி ஐஏஎஸ் கூறுகையில், ''சுற்றுச்சூழலுக்கு நட்பான பொது போக்குவரத்திற்கு அதிக பயணிகளை ஈர்க்கும் வகையில், அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்களை சேர்ப்பதில் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் மகிழ்ச்சியடைகிறது'' என்றார்.

இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!

அதேபோல் இந்த சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் பஸ்கள் பெங்களூர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்கள், எலெக்ட்ரிக் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வமாக இருப்பதையே இந்த நிகழ்வுகள் நமக்கு எடுத்து காட்டுகின்றன.

இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!

அரசு நிர்வாக அளவில் மட்டுமல்லாது, பொதுமக்களிடமும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. வர்த்தக எலெக்ட்ரிக் வாகனங்களை போல், பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்களிலும், அதாவது எலெக்ட்ரிக் கார்களிலும் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முன்னிலையில் உள்ளது.

இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!

இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ்தான். டாடா அளவிற்கு வேறு எந்த நிறுவனத்தாலும் இன்னும் இங்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடியவில்லை. ஆனால் பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை அதிகரிக்கவும், புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் முயற்சி செய்து வருகின்றன.

Most Read Articles
English summary
Tata motors bags 921 electric bus order from bengaluru metropolitan transport corporation
Story first published: Thursday, August 18, 2022, 18:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X