பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு தொழிற்சாலையை கைப்பற்றி, தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்த்திருப்பதுடன், மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சூழலில், ஃபோர்டு இந்தியா நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. இதன் காரணமாக ஃபோர்டு இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

தற்போது அவர்களின் வயிற்றில் இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பால் வார்த்துள்ளது. ஆம், குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் உள்ள ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் தற்போது கையெழுத்தாகி விட்டது. 725.7 கோடி ரூபாய்க்கு சனந்த்தில் உள்ள ஃபோர்டு இந்தியா தொழிற்சாலையை டாடா வாங்கியுள்ளது.

பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

இந்த ஒப்பந்தம் மூலமாக நிலம், உபகரணங்கள் என தொழிற்சாலை முழுவதுமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கைக்கு வந்துள்ளது. இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தகுதி வாய்ந்த ஊழியர்களை தக்க வைத்து கொள்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

இதன் காரணமாக சனந்த் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தொழிற்சாலை மூலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி திறன் ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் அதிகரிக்கும். இந்த எண்ணிக்கையை ஒரு ஆண்டுக்கு 4.2 லட்சம் கார்கள் என அதிகரித்து கொள்ளவும் முடியும்.

பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே சனந்த் பகுதியில் சொந்தமாக ஒரு தொழிற்சாலை உள்ளது. நானோ கார்களை உற்பத்தி செய்வதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன் இந்த தொற்சாலையை அமைத்தது. அந்த தொழிற்சாலைக்கு அருகிலேயேதான், தற்போது ஃபோர்டு இந்தியா நிறுவனத்திடம் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள தொழிற்சாலையும் அமைந்துள்ளது.

பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொந்த தொழிற்சாலையில் நானோ காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. எனவே டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களை உற்பத்தி செய்வதற்கு இந்த தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தி வருகிறது. இதற்கிடையே ஃபோர்டு இந்தியா நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ள தொழிற்சாலையை, டாடா மோட்டார்ஸ் எதற்கு பயன்படுத்த போகிறது? என்ற கேள்வி எழுகிறது.

பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

இந்த தொழிற்சாலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்தால், தொழிற்சாலையை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு கூடுதலாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலீடு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

இந்தியாவில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் ஆகியவை விற்பனையில் தூள் கிளப்பி வருகின்றன. இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரானது, இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளது.

பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை, டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அத்துடன் எதிர்காலத்தில் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

இதில், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மற்றும் பன்ச் எலெக்ட்ரிக் கார் போன்றவை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன் அவ்னியா, கர்வ் போன்ற எலெக்ட்ரிக் கார்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் கான்செப்ட் வெர்ஷன்கள் சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

ஒட்டுமொத்தத்தில் எலெக்ட்ரிக் கார்கள்தான் எதிர்காலம் என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறைய திட்டங்களை கையில் வைத்துள்ளது. எனவே ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையை வாங்கியிருப்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதியில் விட்டுட்டு ஓடிய ஃபோர்டு... தொழிற்சாலையை கைப்பற்றி தொழிலாளர்களை காப்பாற்றிய டாடா... மாஸ்டர் ஸ்ட்ரோக்!

இதற்கிடையே சனந்த் மட்டுமல்லாது, சென்னையிலும் ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. அதையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனமே வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலையில் சனந்த் தொழிற்சாலையை மட்டும் டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Tata motors buys ford s sanand factory
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X