சத்தமே இல்லாமல் பாதுகாப்பான கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்! டாடா மோட்டார்ஸின் சூப்பரான செயல்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் புகழ்பெற்ற டியாகோ (Tiago) கார் மாடலில் புதிய தேர்வு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய தேர்வில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என அனைத்து முக்கிய விபரங்களையும் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சத்தமே இல்லாமல் பாதுகாப்பான கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்! டாடா மோட்டார்ஸின் சூப்பரான செயல்!

டாடா (Tata) நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் டியாகோ (Tiago)-வும் ஒன்று. இந்த கார் மாடலிலேயே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தற்போது புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. 'டியாகோ எக்ஸ்டி ரிதம்' (Tata Tiago XT Rhythm) எனும் பெயரில் அந்த புதுமுக தேர்வு விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 6.45 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

சத்தமே இல்லாமல் பாதுகாப்பான கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்! டாடா மோட்டார்ஸின் சூப்பரான செயல்!

சத்தமே இல்லாமல் இந்த காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. குறிப்பாக, எந்தவொரு ஆர்பாட்டமும் இல்லாமல் புதிய வேரியண்டை அது அறிமுகம் செய்திருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, புதிய தேர்வின் வருகைகுறித்து நிறுவனம் இதற்கு முன்னதாக எந்தவொரு முன்னறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

சத்தமே இல்லாமல் பாதுகாப்பான கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்! டாடா மோட்டார்ஸின் சூப்பரான செயல்!

ஏற்கனவே பன்முக தேர்வுகளில் டாடா டியாகோ விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. என்ஆர்ஜி, என்ஆர்ஜி ஏஎம்டி, எக்ஸ்இ, எக்ஸ்இ சிஎன்ஜி, எக்ஸ்டி, எக்ஸ்டி சிஎன்ஜி, எக்ஸ்டி என்ஆர்ஜி, எக்ஸ்டி (ஓ), எக்ஸ்டிஏ, எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட் பிளஸ் சிஎன்ஜி, எக்ஸ்இசட்ஏ பிளஸ் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைத்துக் கொண்டிருக்கின்றது.

சத்தமே இல்லாமல் பாதுகாப்பான கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்! டாடா மோட்டார்ஸின் சூப்பரான செயல்!

இந்த தேர்வுகளுடனேயே புதிதாக எக்ஸ்டி ரிதம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேர்வு நடுநிலை தேர்வான எக்ஸ்டி மற்றும் உயர்நிலை தேர்வான எக்ஸ்இசட் பிளஸ் ஆகிய இரண்டிற்கும் இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, மிகக் குறைவான அல்லது மிக அதிகமான அம்சங்கள் கொண்டிராத நடுநிலை அளவில் சிறப்பு வசதிகளைக் கொண்ட தேர்வாக இப்புதிய வேரியண்ட் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

சத்தமே இல்லாமல் பாதுகாப்பான கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்! டாடா மோட்டார்ஸின் சூப்பரான செயல்!

இந்த புதிய தேர்வில் சிறப்பு வசதிகளாக 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நான்கு ஸ்பீக்கர்களுடன் சேர்த்து நான்கு ட்வீட்டர்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த தொடுதிரையானது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, வாய்ஸ் கமேண்ட் மற்றும் வீடியோ பிளேபேக், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

சத்தமே இல்லாமல் பாதுகாப்பான கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்! டாடா மோட்டார்ஸின் சூப்பரான செயல்!

இந்த அம்சங்கள் காரணத்தினாலேயே ஆரம்ப நிலை வேரியண்டைக் காட்டிலும் ரூ. 45 ஆயிரம் அதிக விலையைக் கொண்டதாக புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்திருக்கின்றது. மிக சமீபத்தில் டாடா நிறுவனம் டியாகோ கார் மாடலில் புதிய என்ஆர்ஜி எக்ஸ்டி வேரியண்டை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ. 6.42 லட்சம் ஆகும்.

சத்தமே இல்லாமல் பாதுகாப்பான கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்! டாடா மோட்டார்ஸின் சூப்பரான செயல்!

இதில், கூடுதல் அம்சங்களாக 14 அங்குல ஹைப்பர் ஸ்டைல் வீல்கள், 3.5 அங்குல ஹர்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டியரிங் வீல் மவுண்டட் கன்ட்ரோல்கள் என பல அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. டாடா நிறுவனம் அனைத்து டியாகோ தேர்விலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

சத்தமே இல்லாமல் பாதுகாப்பான கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்! டாடா மோட்டார்ஸின் சூப்பரான செயல்!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியற்றும் திறன் கொண்டது. இத்துடன் இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இத்துடன், பெட்ரோல் தேர்வு மட்டுமின்றி சிஎன்ஜி தேர்விலும் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சத்தமே இல்லாமல் பாதுகாப்பான கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்! டாடா மோட்டார்ஸின் சூப்பரான செயல்!

இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட காராகவே டாடா டியாகோ இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, டாடா டியாகோ ஓர் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற காராகும். இது வாடிக்கையாளர்களின் ரேட்டிங் இல்லைங்க, பாதுகாப்பு விஷயத்தில் குளோபல் என்சிஏபி இடமிருந்து பெறப்பட்ட ரேட்டிங் ஆகும். ஆகையால், இது ஓர் பாதுகாப்பான வாகனம் என்பதை நம் யாராலும் மறுக்க முடியாது.

சத்தமே இல்லாமல் பாதுகாப்பான கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்! டாடா மோட்டார்ஸின் சூப்பரான செயல்!

இத்தகைய சூப்பரான காரையே சிறப்பிக்கும் விதமாக புதிய தேர்வு தற்போது சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக இரு ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமிரா டைனமிக் கைட்லைன்ஸுடன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஃபாலோ மீ ஹோம் லைட்டுகள், டிஃபாக்கருடன் கூடிய ரியர் வாஷ் வைப்பர், ஸ்பீடு சென்சிடிவ் ஆட்டோ டூர் லாக்கிங், பஞ்சர் ரிப்பேர் கிட் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Tata motors introduced new xt rhythm variant in the tiago line up
Story first published: Saturday, August 20, 2022, 11:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X