டியாகோ என்ஆர்ஜி தற்போது குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்... புதிய தேர்வை அறிமுகம் செய்த டாடா!

டாடா மோட்டார்ஸ் அதன் டியாகோ என்ஆர்ஜி மாடலில் புதிய விலை குறைவான வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வேரியண்டின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டியாகோ என்ஆர்ஜி தற்போது குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்... புதிய தேர்வை அறிமுகம் செய்த டாடா!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் டியாகோ என்ஆர்ஜி (Tiago NRG) கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி ஒரு வருடங்கள் ஆகின்றன. ஆகையால் தற்போது இந்த காருக்கு ஆண்டு விழாவை நிறுவனம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இந்த நாளை மக்களுடனும் கொண்டாடும் விதமாக நிறுவனம் டியாகோ என்ஆர்ஜி மாடலில் புதிய தேர்வு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

டியாகோ என்ஆர்ஜி தற்போது குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்... புதிய தேர்வை அறிமுகம் செய்த டாடா!

டியாகோ என்ஆர்ஜி எக்ஸ்டி எனும் வேரியண்டையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. என்ஆர்ஜி ட்ரிம்மின் மலிவு விலை தேர்வாக இந்த வேரியண்ட் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ. 6.42 லட்சம் என்ற விலையே புதிய தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டியாகோ என்ஆர்ஜி தற்போது குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்... புதிய தேர்வை அறிமுகம் செய்த டாடா!

இந்தியாவில் டியாகோ என்ஆர்ஜி கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் எஸ்யூவி மாதிரியான தோற்றம், அதிக பாதுகாப்பு திறன் (4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இதுவாகும்), இந்தியாவின் பன்முக நில பரப்பை சமாளிக்கும் திறன் உள்ளிட்டவற்றின் காரணத்தினாலேயே டியாகோ என்ஆர்ஜி சக்சஸ்ஃபுல் மாடலாக இந்தியாவில் மாறியிருப்பதாக டாடா தெரிவிக்கின்றது.

டியாகோ என்ஆர்ஜி தற்போது குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்... புதிய தேர்வை அறிமுகம் செய்த டாடா!

இத்தகைய ஓர் வாகனத்தை சிறப்பிக்கும் விதமாக ஆண்டு விழாவையும், புதிய டியாகோ எக்ஸ்டி தேர்வையும் டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. டியாகோ என்ஆர்ஜி தேர்வில் எக்ஸ்இசட் எனும் ட்ரிம் ஏற்கனவே விற்பனைக்குக் கிடைத்து வரும் நிலையில், புதிதாக எக்ஸ்டி தேர்வும் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இனி டாடா டியாகோ என்ஆர்ஜி இரு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

டியாகோ என்ஆர்ஜி தற்போது குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்... புதிய தேர்வை அறிமுகம் செய்த டாடா!

புதிய எக்ஸ்டி வேரியண்ட் விலை குறைவானதாக இருந்தாலும் பன்முக சிறப்பம்சங்களைக் கொண்டதாக அது காட்சியளிக்கின்றது. ஹர்மேன் 3.5 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை, முன் பக்கத்தில் பனி மின் விளக்கு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் புதிய தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டியாகோ என்ஆர்ஜி தற்போது குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்... புதிய தேர்வை அறிமுகம் செய்த டாடா!

இத்துடன் புதிய தேர்வில் கவர்ச்சியைக் கூட்டும் வகையில் 14 அங்குல ஹைபர்ஸ்டைல் வீல்கள், முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட கிளாடிங்குகள், சார்கோல் கருப்பு நிறத்திலான உட்பக்கம், கருப்பு நிற ரூஃப் மற்றும் ரெயில் ஆகியவை என்ஆர்ஜி எக்ஸ்டி வேரியண்டில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டியாகோ என்ஆர்ஜி தற்போது குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்... புதிய தேர்வை அறிமுகம் செய்த டாடா!

டாடாவின் டியாகோ என்ஆர்ஜி அல்லாத தேர்வு ரூ. 5.40 லட்சத்தில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவ்வளவு மிகக் குறைவான விலையை இக்ககார் கொண்டிருப்பதனால் இந்தியாவின் மலிவு விலை ஹேட்ச்பேக்குகளில் இதுவும் ஒன்றாக காட்சியளிக்கின்றது. இந்த மாடலின் அதிகபட்ச விலையே ரூ. 7.82 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டியாகோ என்ஆர்ஜி தற்போது குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்... புதிய தேர்வை அறிமுகம் செய்த டாடா!

அதேவேலையில், டியாகோவின் என்ஆர்ஜி ட்ரிம் ரூ. 6.42 லட்சம் தொடங்கி ரூ. 7.38 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கம். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அனைத்து ட்ரிம்களிலும் ஒரே திறன் கொண்ட எஞ்ஜின் தேர்வே வழங்கப்படுகின்றன.

டியாகோ என்ஆர்ஜி தற்போது குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்... புதிய தேர்வை அறிமுகம் செய்த டாடா!

1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே இக்கார் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 86 பிஎஸ் வரை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றது. அதேநேரத்தில், எக்ஸ்இசட் பிளஸ் என்ஆர்ஜி போன்ற உயர்நிலை தேர்வில் ஏஎம்டி தேர்வு வழங்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Tata motors launched tiago nrg xt variant
Story first published: Wednesday, August 3, 2022, 19:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X