ஃபுல் கருப்பு நிறத்தில் செம கவர்ச்சியா இருக்கு! டாடா சஃபாரி டார்க் எடிசன் அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் டார்க் எடிசன் சஃபாரி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஃபுல் கருப்பு நிறத்தில் செம்ம கவர்ச்சியா இருக்கு... டார்க் எடிசன் டாடா சஃபாரி அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் புகழ்பெற்ற சஃபாரி கார் மாடலில் டார்க் எடிசன் எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கார் சஃபாரி டார்க் எடிசன் (Safari Dark Edition) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த பதிப்பு எக்ஸ்டி ப்ளஸ், எக்ஸ்டிஏ ப்ளஸ், எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் ஆகிய ட்ரிம்களில் கிடைக்கும்.

ஃபுல் கருப்பு நிறத்தில் செம்ம கவர்ச்சியா இருக்கு... டார்க் எடிசன் டாடா சஃபாரி அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதற்கு அறிமுக விலையாக ரூ. 19.05 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். டாடா நிறுவனம் ஏற்கனவே அதன் குறிப்பிட்ட சில புகழ்பெற்ற கார் மாடல்களில் டார்க் எடிசன் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. நெக்ஸான், நெஸ்கான் இவி (எலெக்ட்ரிக் கார்), ஹாரியர் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார் மாடல்களில் டார்க் எடிசன் தேர்வை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ஃபுல் கருப்பு நிறத்தில் செம்ம கவர்ச்சியா இருக்கு... டார்க் எடிசன் டாடா சஃபாரி அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இவற்றின் வரிசையிலேயே தன்னுடை சஃபாரி காரையும் சேர்த்திருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த சஃபாரி காரில் ஏற்கனவே அட்வென்சர் மற்றும் கோல்டு எடிசன் எனும் இரு சிறப்பு தேர்வுகளை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த நிலையிலேயே மற்றும் ஓர் சிறப்பு தேர்வாக தற்போது பிளாக் எடிசன் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

ஃபுல் கருப்பு நிறத்தில் செம்ம கவர்ச்சியா இருக்கு... டார்க் எடிசன் டாடா சஃபாரி அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

வழக்கமான மாடல்களைக் காட்டிலும் சற்றே மாறுதலான தோற்றத்தை டாடா சஃபாரி டார்க் எடிசன் பெற்றிருக்கின்றது. காஸ்மெட்டிக் மாற்றங்களே பெருமளவில் இக்காரில் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், வெளிப்புறத்திற்கு பெருமளவில் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்காக ஓபெரான் பிளாக் (Oberon Black) எனும் நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஃபுல் கருப்பு நிறத்தில் செம்ம கவர்ச்சியா இருக்கு... டார்க் எடிசன் டாடா சஃபாரி அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்த நிறம் டாடா சஃபாரிக்கு ஓர் பிரீமியம் தர தோற்றத்தை வழங்குகின்றது. இதற்கு மேலும் மெருகேற்றும் வகையில் பியானோ கருப்பு நிறத்திலான அலங்காரப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வழக்கமான வேரியண்டுகளில் குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஃபுல் கருப்பு நிறத்தில் செம்ம கவர்ச்சியா இருக்கு... டார்க் எடிசன் டாடா சஃபாரி அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதுமட்டுமின்றி சார்கோல் நிறத்திலான முன் பக்க க்ரில் மற்றும் அலாய் வீல்களும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், மிக சிறப்பான மாற்றமாக டார்க் எனும் பெயர் பேட்ஜ் குரோம் பூச்சு பிளேட்டுடன் டெயில் கேட்டில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஃபுல் கருப்பு நிறத்தில் செம்ம கவர்ச்சியா இருக்கு... டார்க் எடிசன் டாடா சஃபாரி அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், காரின் உட்பகுதியிலும் கருப்பு நிறத்திலான அலங்காரப் பொருட்கள் பல பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பிளாக்ஸ்டோன் மேட்ரிக்ஸ் ரக டேஷ்போர்டு மற்றும் நப்பா கிராணைட் நிறத்திலான போர்வை போர்த்தப்பட்ட இருக்கை ஆகியவை இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஃபுல் கருப்பு நிறத்தில் செம்ம கவர்ச்சியா இருக்கு... டார்க் எடிசன் டாடா சஃபாரி அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

மேலும், இதன் இரு வரிசை இருக்கையிலும் காற்றோட்டத்தை அதிகம் வழங்கக் கூடிய இருக்கைகள் மற்றும் காருக்குள் இருக்கும் காற்றை தூய்மைப்படுத்தக் கூடிய ஏற் ஃபில்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், கூடுதல் சிறப்பம்சமாக ஒய்ஃபை இணைப்பு வசதிக் கொண்ட 8.8 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது) இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

ஃபுல் கருப்பு நிறத்தில் செம்ம கவர்ச்சியா இருக்கு... டார்க் எடிசன் டாடா சஃபாரி அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பான பயணத்தை வழங்கும் வகையிலும் கூடுதல் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், பன்முக ஏர் பேக்குகள், இஎஸ்சி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபுல் கருப்பு நிறத்தில் செம்ம கவர்ச்சியா இருக்கு... டார்க் எடிசன் டாடா சஃபாரி அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

எஞ்ஜினை பொருத்தவரை வழக்கமான டாடா சஃபாரி கார்களில் வழங்கப்படும் எஞ்ஜினே டார்க் எடிசன் சஃபாரியிலும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், எஞ்ஜின் திறன் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றிலும் எந்த மாற்றமும் இன்றி இப்புதிய கார் காட்சியளிக்கின்றது.

Most Read Articles

English summary
Tata motors launches safari dark edition in india at price of rs 19 05 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X