டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Recommended Video

Mahindra Scorpio-N Tamil Review | மூன்றாவது வரிசை இருக்கை, ஆஃப் ரோடு, டீசல் இன்ஜின், ஆட்டோமேட்டிக்

ஜூன் மாதம் முடிவடைந்து, ஜூலை மாதத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சூழலில் இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், நடப்பாண்டு ஜூன் மாதத்திற்கான தனது சேல்ஸ் ரிப்போர்ட்டை தற்போது வெளியிட்டுள்ளது.

டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!

இதன்படி நடப்பாண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 45,197 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுதான் டாடா நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர கார் விற்பனை (Highest-ever Monthly Sales) எண்ணிக்கை ஆகும்.

டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!

இதற்கு முன்பாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்தது கிடையாது. ஒரு மாதத்தில் இதுவே அதிகபட்சம். இங்கே மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நடப்பாண்டு ஜூன் மாதம், தனது அதிகபட்ச மாதாந்திர எலெக்ட்ரிக் கார் விற்பனை எண்ணிக்கையையும் (Highest-ever Monthly Electric Vehicle Sales) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பதிவு செய்து அசத்தியுள்ளது.

டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!

நடப்பாண்டு ஜூன் மாதம் டாடா நிறுவனம் இந்திய சந்தையில் 3,507 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இதுதான் ஒரு மாதத்தில் டாடா நிறுவனம் விற்பனை செய்த அதிகபட்ச எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையாகும். எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதனை படைத்திருப்பதுடன், கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது பிரம்மாண்டமான வளர்ச்சியையும் டாடா நிறுவனம் பதிவு செய்துள்ளது.

டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!

கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெறும் 658 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 3,507 ஆக உயர்ந்துள்ளது. இது 433 சதவீத வளர்ச்சியாகும். இது மிகவும் பிரம்மாண்டமான விற்பனை வளர்ச்சி என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.

டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!

வருடாந்திர ரீதியில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலும், எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வளர்ச்சியை கண்டுள்ளது. நடப்பாண்டு மே மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 3,454 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை அதன் பின் வந்த ஜூன் மாதம் 3,507 ஆக உயர்ந்துள்ளது. இது 2 சதவீத வளர்ச்சியாகும்.

டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் (Tata Tigor EV), டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் (Tata Nexon EV) மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் (Tata Nexon EV Max) ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!

இது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் லாங்-ரேஞ்ச் வெர்ஷன் (Long-range Version) ஆகும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காரில், 40.5kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 437 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!

மறுபக்கம் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 306 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 312 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் கார்களுமே ஓரளவிற்கு சிறப்பான டிரைவிங் ரேஞ்சை வழங்குகின்றன. அத்துடன் சரியான விலையில் கிடைப்பதும், அவற்றின் பிரம்மாண்டமான வெற்றிக்கு முக்கியமான காரணமாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது.

டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!

வேறு எந்த நிறுவனமும் இந்தியாவில் இந்த அளவிற்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில்லை. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்று பெயரெடுத்துள்ள மாருதி சுஸுகியோ இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. இந்த ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்வதற்காக வரும் காலங்களில், நிறைய எலெக்ட்ரிக் கார்களை டாடா அறிமுகம் செய்யவுள்ளது.

டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!

இதில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் (Tata Altroz EV), டாடா பன்ச் எலெக்ட்ரிக் (Tata Punch EV), டாடா கர்வ் எலெக்ட்ரிக் (Tata Curvv EV), டாடா அவின்யா எலெக்ட்ரிக் (Tata Avinya EV) போன்றவை குறிப்பிடத்தக்கவை. நிறைய எலெக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனம் தயார் செய்து வருவதால், எதிர்காலத்திலும் அதன் முழுமையான ஆதிக்கம் தொடரலாம்.

Most Read Articles
English summary
Tata motors records highest ever monthly electric vehicle sales in june 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X