டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!

டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 47,655 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!

முதல் இரண்டு இடங்களில் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனத்திற்கும், டாடா நிறுவனத்திற்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 2,145 கார்கள் மட்டுமே. கடந்த சில மாதங்களாகவே ஹூண்டாய் நிறுவனத்திற்கும், டாடா நிறுவனத்திற்கும் இடையே 2வது இடத்தை பிடிப்பது யார்? என்ற போட்டி நிலவி வருகிறது.

டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!

கடந்த செப்டம்பர் மாதம் சிறிய வித்தியாசத்தின் மூலம் ஹூண்டாய் நிறுவனம் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. சிறிய வித்தியாசத்தின் காரணமாக 2வது இடத்தை ஹூண்டாய் நிறுவனத்திடம் பறிகொடுத்திருந்தாலும் கூட, விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 25,729 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 47,655 ஆக உயர்ந்துள்ளது. இது 85.2 சதவீத வளர்ச்சியாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த சிறப்பான வளர்ச்சிக்கு நெக்ஸான் மற்றும் பன்ச் ஆகிய இரண்டு கார்களும் மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளன.

டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் டாடா நிறுவனம் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெக்ஸான் மற்றும் பன்ச் கார்களை (ஒட்டுமொத்தமாக) விற்பனை செய்துள்ளது. தனித்தனியாக பார்த்தால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 14,518 நெக்ஸான் கார்களையும், 12,251 பன்ச் கார்களையும் விற்பனை செய்து அசத்தியுள்ளது.

டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!

ஒட்டுமொத்தமாக கடந்த செப்டம்பர் மாதம் 26,769 நெக்ஸான் மற்றும் பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார்கள் ஆகும். இந்த இரண்டு கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!

டாடா நெக்ஸான் காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மறுபக்கம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது.

டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!

டிரான்ஸ்மிஷன் பணிகளை பொறுத்தவரையில் டாடா நெக்ஸான் காரில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. மறுபக்கம் டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் டாடா நெக்ஸான் மற்றும் டாடா பன்ச் ஆகிய இரண்டு கார்களிலும் ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, டாடா நெக்ஸான் மற்றும் டாடா பன்ச் ஆகிய 2 கார்களையும் வெற்றிகரமான தயாரிப்புகளாக மாற்றியுள்ளன.

டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. கூடிய விரைவில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!

இதுதவிர அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வெகு சமீபத்தில் டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles
English summary
Tata nexon and punch registers cumulative sales of over 26000 units in september 2022
Story first published: Thursday, October 6, 2022, 18:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X