Just In
- 1 hr ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 4 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
- 4 hrs ago
5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!
- 4 hrs ago
வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!
Don't Miss!
- News
டெல்லி அடகில் அதிமுக! லேடியா? மோடியா? எனக்கேட்ட ஜெயலலிதாவை மறந்துட்டாங்க! கி வீரமணி விளாசல்
- Sports
ஃபார்ம்க்கு திரும்பினார் கிரிக்கெட்டின் ராஜா.. பயிற்சி ஆட்டத்தில் கோலி கிளாஸ் பேட்டிங்.. பும்ரா ஷாக்
- Movies
"விஜய்க்கு நடிப்புதான் மூச்சு".. அவரைப்போல ஒரு நடிகரை பார்க்கமுடியாது.. புகழ்ந்த தயாரிப்பாளர் !
- Finance
மும்பை பெண்ணின் வர்த்தகத்தை புகழ்ந்து தள்ளும் ஆனந்த் மஹிந்திரா..!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Lifestyle
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் மின்சார கார்! அட இந்த காருக்கா இப்படி ஒருநிலைமை ஆகியிருக்கு?
சாலையில் பிரபல நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஒன்று கொழுந்துவிட்டு எரியும் வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மின்சார வாகனங்கள் அதீத வேகத்தில் பிரபலமடைந்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையும் சந்தையில் சூடுபிடித்துக் காணப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் சமீப சில காலமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தொடர் தீ விபத்தில் சிக்கி சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. இந்தியாவில் கோடை வெயில் தொடங்கிய பின்னர் மின்சார இருசக்கர வாகனங்கள் சார்ந்து எக்கசக்க தீ விபத்து சம்பவங்கள் அரங்கேறிவிட்டன.

இந்த மாதிரியான சூழ்நிலையில் தற்போது மின்சார கார் ஒன்று திடீரென தீ விபத்தில் சிக்கியிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்து சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரங்கேறியிருக்கின்றன. தீ விபத்திற்கான காரணம் பற்றிய முழு விபரம் வெளியாகவில்லை.

அதேநேரத்தில், இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. டாடா மோட்டார்ஸின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றான நெக்ஸான் இவி-யே தீ விபத்தில் சிக்கிய இ-காராகும். இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் கார் மாடலாக இது விளங்குகின்றது.

இந்த வாகனமே மர்மமான முறையில் தீ விபத்தைச் சந்தித்துள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையும், தீயணைப்பு துறையும் கடுமையாக போராடியிருப்பதை நம்மால் வீடியோவின் வாயிலாக காண முடிகின்றது. இருப்பினும், காருக்குள் அடியில் தீ பிடித்திருந்ததால் அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் பெருத்த சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.
Tata Nexon EV catches massive fire in Vasai West (near Panchvati hotel), a Mumbai Suburb, Maharashtra. TataMotors pic.twitter.com/KuWhUCWJbB
— Kamal Joshi (KamalJoshi108) June 22, 2022
ஆகையால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னரே தீ அணைக்கப்பட்டது. அதற்குள்ளாக நெக்ஸான் இவி-யின் பெரும்பாலான முக்கிய பாகங்கள் தீயிற்கு இரையாகிவிட்டன. தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நெருப்பு கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிவதையும் நம்மால் காண முடிகின்றது.

இதை வைத்து பார்க்கையில் காரின் பேட்டரி பகுதியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. இதனாலயே வேகமாக தண்ணீரை பாய்ச்சியபோதும் நெருப்பு மிக வேகமாக பரவிய நிலையிலேயே இருந்திருக்கின்றது. மும்பையின் மேற்கு வசை பகுதியில் அரங்கேறிய இந்த தீ விபத்தது சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

விரைவில் இந்த நிகழ்வுகுறித்து டாடா மோட்டார்ஸ் ஆய்வு செய்து, தீ விபத்திற்கான காரணத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது டாடா மோட்டார்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அதில், "சமூக ஊடகங்களில் டாடா நெக்ஸான் இவி தீ விபத்துக்குள்ளான வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த சம்பவத்தின் உண்மைகளைக் கண்டறிய தற்போது விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. முழுமையான விசாரணைக்குப் பிறகு விரிவான பதிலைப் பகிர்ந்து கொள்வோம். எங்கள் வாகனங்கள் மற்றும் அவற்றின் பயனர்களின் பாதுகாப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சுமார் 4 ஆண்டுகளில் 30,000க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் நாடு முழுவதும் விற்கப்பட்டுள்ளன. அவை, 100 மில்லியன் கி.மீட்டர்களுக்கும் மேல் பயணித்திருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த சம்பவம் முதல் முறையாக அரங்கேறியிருக்கின்றது" என தெரிவித்துள்ளது.

நாட்டின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களில் நெக்ஸான் இவி-யும் ஒன்று. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராகவும் இதுவே இருக்கின்றது. ஏன், நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராகவும் நெக்ஸான் இவி-யே இருக்கின்றது.

நிறுவனம் நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் சற்று குறைவான விலையில் டிகோர் இவி எனும் மின்சார காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இக்காரை வாங்குவோர்களைவிட நெக்ஸான் இவி-யை வாங்குவோரே நாட்டில் அதிகமாக உள்ளனர். புதிய நெக்ஸான் இவி இந்தியாவில் ரூ. 14.79 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் அதிகம் ரேஞ்ஜ் தரும் வெர்ஷனான நெக்ஸான் இவி மேக்ஸ் ரூ. 17.74 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். அதாவது, நெக்ஸான் இவி மேக்ஸ் ஓர் முழுமையான சார்ஜில் 437 கிமீ ரேஞ்ஜை தரும் வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், நெக்ஸான் இவி ஓர் முழுமையான சார்ஜில் 312 கிமீ ரேஞ்ஜை மட்டும் வழங்கும்.

இந்தியாவில் மின்சார வாகனங்கள் சார்ந்து அதிகளவில் தீ விபத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றிற்கு இதுவரைக் காரணம் கண்டறியப்படவில்லை. இதை ஆராயும் பணியில் தீ விபத்தைச் சந்தித்த அந்த வாகனங்களை தயாரித்த நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. அரசும், அதன் சார்பில் தனிக் குழுவை அமைத்து இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றது.

இந்த குழு மின்சார வாகனங்களின் தொடர் தீ விபத்திற்கான காரணங்களையும், வரும் காலங்களில் மின் வாகன தயாரிப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அது வெளியிட இருக்கின்றது. எதிர்காலத்தில் ஆபத்தில்லா பயணத்தை மின் வாகனங்கள் வழங்கும் பொருட்டு இந்த நடவடிக்கையில் மத்திய அரசு களமிறங்கியிருக்கின்றது.
-
ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!
-
எந்த அளவிற்கு பாதுகாப்பான கார் கியா கேரன்ஸ்? உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனை முடிவுகள் வெளியீடு!!
-
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம், ப்யூர் இவி, பூம் மோட்டார்ஸ் -ஐ தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ்!