Just In
- 10 hrs ago
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- 12 hrs ago
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- 13 hrs ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- 15 hrs ago
மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!
Don't Miss!
- News
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : 11.78 லட்சம் பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர் - இது அவசியம்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவே காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
இந்தியாவே காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் (Tata Nexon EV) பெற்றுள்ளது. இதன் லாங்-ரேஞ்ச் வெர்ஷனை (Long-range Version) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் (Tata Nexon EV Max) என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட இந்த புதிய மாடல் இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களாக நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காரின் டீசர் புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த நிலையில், தற்போது முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள வழக்கமான டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 30.2 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் பல்வேறு அப்டேட்களை பெற்றுள்ளது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS EV) மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி (Hyundai Kona Electric SUV) போன்ற கார்களுடன், புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் போட்டியிடும்.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காரில், 40.5 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும் இது 10.3 kWh பெரியது. புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காரின் பவர் அவுட்புட் 143 ஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் ஆகும். ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும் இது 14 ஹெச்பி மற்றும் 5 என்எம் அதிகம்.

பெரிய பேட்டரி தொகுப்பை பொருத்துவதற்காக மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் கூட, பழைய மாடலின் பூட் ஸ்பேஸ் அப்படியே தொடர்கிறது. அதாவது பூட் ஸ்பேஸ் தொடர்ந்து 350 லிட்டர்களாகவே உள்ளது. புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 437 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆக கருதப்படுகிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பழைய மாடலின் ரேஞ்ச் வெறும் 312 கிலோ மீட்டர்கள் மட்டுமே. இந்த வகையில் பார்த்தால், பழைய மாடலை காட்டிலும் புதிய மாடலின் ரேஞ்ச் 125 கிலோ மீட்டர்கள் அதிகம். இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.

XZ+ மற்றும் XZ+ Lux என டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கும். கூடுதல் சார்ஜிங் வசதியை சேர்த்திருப்பதும், இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய மற்றொரு ஹைலைட் ஆகும். புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காரில், அதிக சக்தி வாய்ந்த 7.2 kW சார்ஜர் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் 3.3 kW சார்ஜர் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும்.

3.3 kW சார்ஜரை பயன்படுத்தினால், பேட்டரியை முழுமையாக நிரப்ப சுமார் 16 மணி நேரம் ஆகும். ஆனால் 7.2 kW சார்ஜரை பயன்படுத்தும்போது, பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை நிரப்புவதற்கு வெறும் 6.30 மணி நேரம் மட்டுமே ஆகும். அதே நேரத்தில் 50 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், வெறும் 56 நிமிடங்களிலேயே, பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காரின் டெலிவரி பணிகள் நடப்பு மாதத்திலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ ஆரம்பிக்கப்படும். வசதிகளை பொறுத்தவரையில், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், முன் பகுதியில் லெதர் வென்டிலேட்டட் இருக்கைகள், ஏர் ப்யூரிஃபையர், பல்வேறு டிரைவிங் மோடுகள், க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

இதுதவிர ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஹில் டெசண்ட் கண்ட்ரோல், ரோல் ஓவர் மிட்டிகேஷன் போன்ற வசதிகளையும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரின் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காருக்கு சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காரின் XZ+ வேரியண்ட்டின் விலை 17.74 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் 7.2 kW சார்ஜருடன் கிடைக்கும் XZ+ வேரியண்ட்டின் விலை 18.24 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் XZ+ Lux வேரியண்ட்டின் விலை 18.74 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் 7.2 kW சார்ஜருடன் கிடைக்கும் XZ+ Lux வேரியண்ட்டின் விலை 19.24 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். முக்கியமான போட்டியாளர்களான எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களுடன் ஒப்பிடுகையில், புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காரின் விலை மிகவும் குறைவு என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய சிறப்பம்சம் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், 22 லட்ச ரூபாய் முதல் 25.88 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். மறுபக்கம் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், 23.84 லட்ச ரூபாய் முதல் 24.03 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

முக்கியமான போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காரின் விலை மிகவும் குறைவாக இருப்பது சிறப்பான விஷயம். பல லட்ச ரூபாய் குறைவான விலையில் வந்துள்ளதால், இந்த புதிய மாடல் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஏற்கனவே விற்பனையில் உள்ள டிகோர் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.