Just In
- 9 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 10 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 21 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 24 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- News
கல்லூரி சுவர் தரமில்லாமல் விழுந்ததாக வீடியோ எடுத்த எம்எல்ஏ மீது வழக்கு பதிவு: உ.பி. போலீஸ் நடவடிக்கை
- Finance
டெஸ்லா கார்கள் உளவு பார்க்கிறதா.. சீனா-வின் புதிய கட்டுப்பாடு..!! - வீடியோ
- Movies
இத்தனை நாளா இஸ்ரோ மறைச்சு வச்சிடுச்சோ...மாதவனை கிண்டல் செய்யும் டி.எம்.கிருஷ்ணா
- Technology
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- Sports
ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் கனவு கதை
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
டாடா களமிறக்கிய புதிய எலெக்ட்ரிக் காருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா? வாங்குவதற்கு நிறைய பேர் போட்டி போட்றாங்க!
டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இந்திய சந்தையில் உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் கார் செக்மெண்ட்டில் முன்னணியில் உள்ள நிறுவனம் டாடா மோட்டார்ஸ். இதற்கு நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிதான் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற மகுடத்தை இது தன் தலையில் கம்பீரமாக சுமந்து வருகிறது.

இந்த சூழலில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) என்ற பெயரில், இந்த புதிய மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய மாடலுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு 4 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் (Waiting Period) நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை தற்போது முன்பதிவு செய்தால் 4 மாதங்களுக்கு பிறகே டெலிவரி செய்யப்படும்.

மும்பை நகரில் மட்டும் சுமார் 200 டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கு இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு 4 மாதங்கள் காத்திருப்பு காலம் என்பது உங்களுக்கு நீண்ட காத்திருப்பு போல் தோன்றலாம். ஆனால் ஸ்டாண்டர்டு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு தற்போதைய நிலையில் 6 மாதங்கள் காத்திருப்பு காலம் உள்ளது என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

ஸ்டாண்டர்டு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் ஒப்பிடும்போது, பெரிய பேட்டரி தொகுப்பு மற்றும் அதிக சக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் உடன் புதிய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் 40.5 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ஸ்டாண்டர்டு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை காட்டிலும் இது அதிகம் ஆகும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 437 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும்.

எனவே நடைமுறை பயன்பாட்டில் இவ்வளவு அதிகமான ரேஞ்ச் கிடைப்பது சந்தேகம்தான். எனினும் நடைமுறை பயன்பாட்டில் இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 330-340 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணிக்க முடியும் என்பது உறுதி. டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

அப்போது நடைமுறை பயன்பாட்டில் இந்த புதிய மாடல் எவ்வளவு ரேஞ்ச் தருகிறது? என்பதை சோதனை செய்தோம். இந்த சோதனையில்தான் நாங்கள் இதனை கண்டறிந்தோம். டிரைவிங் திறன் மேலும் சிறப்பாக இருந்தால், டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ரேஞ்ச் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் டிகோர் எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

டிகோர், நெக்ஸான், அல்ட்ராஸ் ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை தொடர்ந்து, பன்ச் காரின் எலெக்ட்ரிக் மாடலையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் அதிகரிப்பதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.