பிரம்மிப்பா இருக்கு... டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களை பற்றிய இந்த விஷயம் தெரியுமா?

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார்கள் அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரம்மிப்பா இருக்கு... டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களை பற்றிய இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைய தொடங்கியுள்ளன. பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து கொண்டே வருவதாலும், வழக்கமான ஐசி இன்ஜின் கார்களில் இருந்து, எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.

பிரம்மிப்பா இருக்கு... டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களை பற்றிய இந்த விஷயம் தெரியுமா?

அத்துடன் மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எடுத்து வரும் தீவிரமான முயற்சிகளும் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரிக்க முக்கியமான காரணமாக இருக்கின்றன. மானியங்களை வழங்குவது, சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு வழங்குவது போன்ற சலுகைகள் மூலமாக எலெக்ட்ரிக் கார்கள் பிரபலமாக்கப்பட்டு வருகின்றன.

பிரம்மிப்பா இருக்கு... டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களை பற்றிய இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையை பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கைதான் முழுமையாக ஓங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Tata Nexon EV) மற்றும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் (Tata Tigor EV) ஆகிய கார்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்கின்றன.

பிரம்மிப்பா இருக்கு... டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களை பற்றிய இந்த விஷயம் தெரியுமா?

இந்த சூழலில், நடப்பு 2022 காலாண்டர் ஆண்டின் முதல் அரையாண்டில், அதாவது நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்திற்கான, இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் 'சேல்ஸ் ரிப்போர்ட்' தற்போது நமக்கு கிடைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் (2021 ஜனவரி-ஜூன்), இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுமே விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

பிரம்மிப்பா இருக்கு... டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களை பற்றிய இந்த விஷயம் தெரியுமா?

இந்த 2 கார்கள் அடங்கிய பட்டியலில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டின் முதல் அரையாண்டில், டாடா மோட்டார்ஸ் வெறும் 3,204 நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2022ம் ஆண்டின் முதல் அரையாண்டில் இந்த எண்ணிக்கை 13,280 ஆக உயர்ந்துள்ளது. இது 314.4 சதவீத வளர்ச்சியாகும்.

பிரம்மிப்பா இருக்கு... டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களை பற்றிய இந்த விஷயம் தெரியுமா?

அதே நேரத்தில் இந்த பட்டியலில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் இரண்டாவது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டின் முதல் அரையாண்டில் டாடா மோட்டார்ஸ் வெறும் 222 டிகோர் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2022ம் ஆண்டின் முதல் அரையாண்டில் இந்த எண்ணிக்கை 5,532 ஆக உயர்ந்துள்ளது. இது 2391.8 சதவீத வளர்ச்சியாகும்!

பிரம்மிப்பா இருக்கு... டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களை பற்றிய இந்த விஷயம் தெரியுமா?

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார் ஆகிய 2 தயாரிப்புகள் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய சந்தையில் ஏற்கனவே நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய 2 கார்களின் ஐசி இன்ஜின் வெர்ஷன்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பிரம்மிப்பா இருக்கு... டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களை பற்றிய இந்த விஷயம் தெரியுமா?

அவையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. இந்த 2 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களுக்கும் வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வழங்கி வருவதை, விற்பனை எண்ணிக்கை நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகிறது. வரும் காலங்களில் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

பிரம்மிப்பா இருக்கு... டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களை பற்றிய இந்த விஷயம் தெரியுமா?

ஏனெனில் அதற்கான நடவடிக்கைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக எடுத்து கொண்டே வருகிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலானது, டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) என்ற பெயரில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

பிரம்மிப்பா இருக்கு... டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களை பற்றிய இந்த விஷயம் தெரியுமா?

முன்பு இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு எந்த எலெக்ட்ரிக் காரும் நேரடி போட்டியாக இல்லை. ஆனால் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் கார், ஹூண்டாய் கோனா (Hyundai Kona) மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு நேரடி போட்டியாக வந்துள்ளது.

பிரம்மிப்பா இருக்கு... டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களை பற்றிய இந்த விஷயம் தெரியுமா?

இதன் மூலமாக ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களை வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களை நெக்ஸான் இவி மேக்ஸ் காரின் பக்கம் இழுப்பதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதவிர வரும் காலங்களில் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மற்றும் பன்ச் எலெக்ட்ரிக் கார் என பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் டாடா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Tata nexon ev tata tigor ev h1 2022 sales
Story first published: Monday, July 25, 2022, 12:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X