ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா! டாடா நெக்ஸானுக்கு செம்ம போட்டி

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் டாடா நெக்ஸான் (Tata Nexon)-க்கு போட்டியாக அதன் அப்டேட் செய்யப்பட்ட பிரெஸ்ஸா (2022 Brezza) காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. என்ன மாதிரியான புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் விலையில் அக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது என்பது பற்றிய விரிவான தகவலை பார்க்கலாம், வாங்க.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் மிக முக்கியமான கார் மாடல்களில் விட்டாரா பிரெஸ்ஸா (Vitara Brezza)-வும் ஒன்று. இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனையே நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. புதுப்பித்தலின் கீழ் இக்காரில் புதுமுக சிறப்பம்சங்கள் பலவற்றை மாருதி சுஸுகி வழங்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி புதிய பெயரும் காருக்கு சூட்டப்பட்டுள்ளது.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

'விட்டாரா பிரெஸ்ஸா' என்ற பெயரில் தற்போது 'விட்டாரா' நீக்கப்பட்டுள்ளது. ஆகையால், இனி 'ப்ரெஸ்ஸா' என்கிற பெயரிலேயே அக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த காருக்கு ஏற்கனவே இந்திய சந்தையில் மிக சூப்பரான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய தலைமுறை 2022 ப்ரெஸ்ஸாவை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி காராகும். இந்த பிரிவில் மிக சிறப்பான விற்பனையைப் பெற்றும் வரும் காராக இது இருக்கின்றது.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

இதனை இரட்டிப்பாக்கும் வகையிலேயே தற்போது புதிய வெர்ஷன் பன்முக சிறப்பு வசதிகள் மற்றும் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவிற்கு ரூ. 7.99 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் உயர்நிலை வேரியண்டிற்கு ரூ. 13.96 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஆறு விதமான ட்ரிம்களில் புதிய ப்ரெஸ்ஸா விற்பனைக்குக் கிடைக்கும்.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ ட்யூவல் டோன், இசட்எக்ஸ்ஐ பிளஸ் மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ட்யூவல் டோன் ஆகிய ட்ரிம்களிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை முதல் முறையாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியபோது டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்கியது.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

ஆனால், இப்போது பெட்ரோல் மோட்டாரில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 1.5 லிட்டர் கே15சி எஞ்ஜினையே புதிய பிரெஸ்ஸாவில் பயன்படுத்தியிருக்கின்றது. இதே மோட்டாரே சமீபத்திய அறிமுகமான ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்எல்6 காரிலும் மாருதி பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 103 எச்பி பவரையும், 137 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

இந்த மோட்டாருடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் சேர்த்து பேடில் ஷிஃப்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. மாருதி நிறுவனம் இதே பிரெஸ்ஸாவில் சிஎன்ஜி தேர்வையும் வழங்க இருக்கின்றது. வெகுவிரைவில் இதன் அறிமுகம் இருக்கின்றது.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் பிரெஸ்ஸா ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20.15 கிமீ மைலேஜை வழங்கும். இது மேனுவல் வெர்ஷனின் அதிகபட்ச மைலேஜ் திறனாகும். இக்காரின் தானியங்கி டிரான்ஸ்மிஷன் கொண்ட தேர்வு அதிகபட்சமாக 19.08 மைலேஜை வழங்கும். இவற்றை விட மிக சூப்பரான மைலேஜை வழங்கக் கூடிய தேர்வாகவே பிரெஸ்ஸாவின் சிஎன்ஜி எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை புதுப்பித்தலின்கீழ் பன்மடங்கு மாற்றியமைத்திருப்பதாக மேலே கூறியிருந்தோம். இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் காரின் பாடி பேனல்களை முழுமையாக மறுசீரமைப்பு செய்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க உட்பக்கத்தையும் முழுமையாக ரீ-ஃப்ரெஷ் செய்திருக்கின்றது.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

இதனால், காரின் உருவ அளவில் லேசாக மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக காரின் உயரம் முன்பைக் காட்டிலும் தற்போது 45 மிமீ அதிகரித்துள்ளது. முன்னதாக 1,640 மிமீ உயரத்தை மட்டுமே அது கொண்டிருந்தது. தற்போது அது 1,685 மி.மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற அளவுகள் முன்பை போன்றே இருக்கின்றது.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

அதாவது, புதிய பிரெஸ்ஸா 3,995 மிமீ நீளம், 1,790 மிமீ அகலம் மற்றும் 2,500 மிமீ வீல்பேஸைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. புதிய பிரெஸ்ஸாவை கவர்ச்சியானதாக காட்ட வேண்டும் என்பதற்காக கிளாம்ஷெல் பான்னெட், ஸ்குவாரிஷ் ட்யூவல் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் கன் மெட்டல் ஷேடிலான கிரில் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

இதுமட்டுமின்றி, காரை சுற்றிலும் கருப்பு நிற கிளாடிங் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காரின் பின் பக்கத்தில் மெல்லிய எல்இடி லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. விட்டாரா நீக்கப்பட்ட நிலையில் வெறும் ப்ரெஸ்ஸா என்கிற பேட்ஜ் மட்டும் காரின் மையப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இக்காரில் 16 அங்குல ட்யூவல் டோன் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

மாருதி சுஸுகி நிறுவனம் உட்புறத்தையும் ரீ-ஃப்ரெஷ் செய்திருப்பதாக மேலே குறிப்பிட்டிருந்தோம். இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் பன்முக சிறப்பு வசதிகளை காருக்குள் வாரி வழங்கியிருக்கின்றது. அந்த வகையில், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 9.0 அங்குல ஸ்மார்ட் ப்ளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்பம் கொண்ட தொடுதிரை உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

இந்த திரை ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டதும்கூட. மேலும், ஆர்கேமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜர், பின்பக்கத்திற்கு ஏசி வெண்ட், குரல் கட்டளை சப்போர்ட், கார் இணைப்பு தொழில்நுட்பம், ஹெட்ஸ்-அப் திரை, க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் மின் விளக்கு, டைப் சி ரக சார்ஜர் போர்ட், அலெக்ஸா மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவையும் 2022 பிரெஸ்ஸாவில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

இக்காரின் மிட்-ஸ்பெக் ட்ரிம்மில் 7 அங்குல தொடுதிரையே பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களையும் வாரி வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், இஎஸ்பி, ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் ஐசோஃபிக்ஸ் ரியர் ஆங்கர்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராவை இந்த காரே முதல் முறையாக பெறுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 7.99 லட்சம் மட்டுமே... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் நிலைமை என்னவாக போகுதோ!

மாருதி சுஸுகி ப்ரெஸ்ஸா காரின் விலை விபரம்:

2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் விலை விபரம், வேரியண்ட் வாரியாக.
Variant Manual Automatic
LXi ₹7,99,000 -
VXi ₹9,46,500 ₹10,96,500
ZXi ₹10,86,500 ₹12,36,500
ZXi Dual Tone ₹11,02,500 ₹12,52,500
ZXi+ ₹12,30,000 ₹13,80,000
ZXi+ Dual Tone ₹14,46,000 ₹13,96,000

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Tata nexon rival 2022 maruti suzuki brezza launched in india at inr 7 99 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X