5 ஸ்டார் ரேட்டிங் வாங்குச்சே அதுதான்... டாடாவின் விலை குறைவான காரில் இப்படி ஒரு மாடலா! நாளைக்கு லான்ச் ஆகுது!

டாடா நிறுவனத்தின் விலை குறைவான காரில் புதிய மாடல் ஒன்று நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

5 ஸ்டார் ரேட்டிங் வாங்குச்சே அதுதான்... டாடாவின் விலை குறைவான காரில் இப்படி ஒரு மாடலா! நாளைக்கு லான்ச் ஆகுது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது கார்களின் ஜெட் எடிசன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து பன்ச் (Tata Punch) மைக்ரோ எஸ்யூவி காரின் ஸ்பெஷல் எடிசன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தயாராகி விட்டது. கேமோ எடிசன் (Camo Edition) என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வரவுள்ளது.

5 ஸ்டார் ரேட்டிங் வாங்குச்சே அதுதான்... டாடாவின் விலை குறைவான காரில் இப்படி ஒரு மாடலா! நாளைக்கு லான்ச் ஆகுது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரில் ஏற்கனவே காஸிரங்கா எடிசனை (Kaziranga Edition) விற்பனை செய்து வருகிறது. இதை தொடர்ந்து பன்ச் காரின் கேமோ எடிசனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாளை (செப்டம்பர் 22) விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அதற்கு முன்னதாக பன்ச் கேமோ எடிசனின் டீசரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

5 ஸ்டார் ரேட்டிங் வாங்குச்சே அதுதான்... டாடாவின் விலை குறைவான காரில் இப்படி ஒரு மாடலா! நாளைக்கு லான்ச் ஆகுது!

டாடா பன்ச் காரின் டாப் மாடலான க்ரியேட்டிவ் வேரியண்ட்டின் (Creative Variant) அடிப்படையில் இந்த கேமோ எடிசன் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள டீசரில், முன் பக்க ஃபெண்டர்களின் (Front Fenders) மீது கேமோ பேட்ஜ் இருப்பதை நம்மால் தெளிவாக காண முடிகிறது.

5 ஸ்டார் ரேட்டிங் வாங்குச்சே அதுதான்... டாடாவின் விலை குறைவான காரில் இப்படி ஒரு மாடலா! நாளைக்கு லான்ச் ஆகுது!

புதிய கேமோ க்ரீன் (Camo Green) வண்ண தேர்வில் இந்த டாடா பன்ச் கேமோ எடிசன் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் ஓஆர்விஎம்கள், அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ஆகியவற்றில் பளபளப்பான கருப்பு வண்ண அலங்கார வேலைப்பாடுகள் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

5 ஸ்டார் ரேட்டிங் வாங்குச்சே அதுதான்... டாடாவின் விலை குறைவான காரில் இப்படி ஒரு மாடலா! நாளைக்கு லான்ச் ஆகுது!

அதேபோல் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையிலான ஓட்டுனர் இருக்கை, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், பல்வேறு கண்ட்ரோல்களுக்கான பட்டன்களுடன் கூடிய தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகிய வசதிகள் க்ரியேட்டிவ் வேரியண்ட்டில் இருந்து, அப்படியே கேமோ எடிசனுக்கும் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 ஸ்டார் ரேட்டிங் வாங்குச்சே அதுதான்... டாடாவின் விலை குறைவான காரில் இப்படி ஒரு மாடலா! நாளைக்கு லான்ச் ஆகுது!

டாடா பன்ச் காரில் தற்போதைய நிலையில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. கேமோ எடிசனினும் இதே இன்ஜின் ஆப்ஷன்தான் வழங்கப்படும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

5 ஸ்டார் ரேட்டிங் வாங்குச்சே அதுதான்... டாடாவின் விலை குறைவான காரில் இப்படி ஒரு மாடலா! நாளைக்கு லான்ச் ஆகுது!

இந்திய சந்தையில் தற்போது டாடா பன்ச் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், பாதுகாப்பு மற்றும் விலை குறைவு ஆகியவைதான் மிகவும் முக்கியமான காரணங்கள். குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை டாடா பன்ச் கார் பெற்றுள்ளது.

5 ஸ்டார் ரேட்டிங் வாங்குச்சே அதுதான்... டாடாவின் விலை குறைவான காரில் இப்படி ஒரு மாடலா! நாளைக்கு லான்ச் ஆகுது!

எனவே இது இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும். பாதுகாப்பு விஷயத்தில் தலை சிறந்து விளங்கினாலும், டாடா பன்ச் காரின் விலை மிகவும் குறைவு. தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 5.93 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.49 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

5 ஸ்டார் ரேட்டிங் வாங்குச்சே அதுதான்... டாடாவின் விலை குறைவான காரில் இப்படி ஒரு மாடலா! நாளைக்கு லான்ச் ஆகுது!

இந்த 2 காரணங்களால்தான் டாடா பன்ச் காரின் விற்பனை மிகவும் அமோகமாக உள்ளது. இந்த சூழலில்தான் பன்ச் காரின் புதிய கேமோ எடிசனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதன் காரணமாக பன்ச் காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

5 ஸ்டார் ரேட்டிங் வாங்குச்சே அதுதான்... டாடாவின் விலை குறைவான காரில் இப்படி ஒரு மாடலா! நாளைக்கு லான்ச் ஆகுது!

பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் பன்ச் காரின் கேமோ எடிசன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பெரிதும் உதவி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் காலங்களில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 ஸ்டார் ரேட்டிங் வாங்குச்சே அதுதான்... டாடாவின் விலை குறைவான காரில் இப்படி ஒரு மாடலா! நாளைக்கு லான்ச் ஆகுது!

ஏற்கனவே டிகோர் மற்றும் நெக்ஸான் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த வரிசையில் டியாகோ, அல்ட்ராஸ் மற்றும் பன்ச் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Most Read Articles
English summary
Tata punch camo edition india launch details
Story first published: Wednesday, September 21, 2022, 16:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X