டாடாவை தூக்கி நிறுத்தும் பாதுகாப்பான கார்... விலை இவ்வளவு கம்மியா இருந்தா யாரு தான் வாங்காம இருப்பா?

டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகனத்தில் 24 சதவீதம் டாடா பஞ்ச் கார் தான் விற்பனையாகிறது என அந்நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடாவை தூக்கி நிறுத்தும் பாதுகாப்பான கார் . . . விலை இவ்வளவு கம்மியா இருந்தா யாரு தான் வாங்காம இருப்பா . . .

இந்தியாவில் கார் விற்பனையில் வேகமாக முன்னேறி வரும் நிறுவனம் என்றால் அது டாடா நிறுவனம் தான். இந்நிறுவனம் சமீபகாலமாக வெளியிடும் கார்கள் தரமான கார்களாக இருப்பதாக மக்கள் கருதுவதால் அதிகமான கார்கள் விற்பனையாகிறது. விற்பனையில் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக இரண்டாம் இடத்தில் இருந்து வந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு தற்போது டாடா நிறுவனம் கடும் போட்டியை கொடுத்து வருகிறது.

டாடாவை தூக்கி நிறுத்தும் பாதுகாப்பான கார் . . . விலை இவ்வளவு கம்மியா இருந்தா யாரு தான் வாங்காம இருப்பா . . .

கடந்த ஓராண்டிலேயே ஒட்டு மொத்த கார்களின் விற்பனையில் டாடா நிறுவனம் சில மாதங்கள் ஹூண்டாயை பின்னிற்கு தள்ளியுள்ளது. டாடா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட டாடா நெக்ஸான் கார் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இந்நிறுவனம் டாடா நெக்ஸான் காரின் முதல் தலைமுறை காரை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வந்தது முதல் தற்போது வரை 4 லட்சம் கார்களை தயாரித்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.

டாடாவை தூக்கி நிறுத்தும் பாதுகாப்பான கார் . . . விலை இவ்வளவு கம்மியா இருந்தா யாரு தான் வாங்காம இருப்பா . . .

இந்த வகையில் டாடா நிறுவனம் கடந்தாண்டு வெளியிட்ட கார் டாடா பஞ்ச். இந்த கார் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த காரை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியது முதல் இந்த காருக்கா எதிர்பார்ப்பும் புக்கிங்கும் பட்டையை கிளப்பியது.

டாடாவை தூக்கி நிறுத்தும் பாதுகாப்பான கார் . . . விலை இவ்வளவு கம்மியா இருந்தா யாரு தான் வாங்காம இருப்பா . . .

தற்போது கிட்டத்தட்ட மாதம் 11 ஆயிரம் பஞ்ச் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அந்த அளவிற்கு இந்த கார் மீது மக்கள் பெரும் அபிமானத்தை வைத்துவருகின்றனர். இதற்கிடையில் டாடா மோட்டாஸ் நிறுவனம் இந்த காரில் வாடிக்கையாளர்கள் விருப்பத்தை அறிந்து அவ்வப்போது பல புதிய வேரியன்ட்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்த காரின் காஸிரங்கா எடிசன் கார் வெளியானது.

டாடாவை தூக்கி நிறுத்தும் பாதுகாப்பான கார் . . . விலை இவ்வளவு கம்மியா இருந்தா யாரு தான் வாங்காம இருப்பா . . .

தற்போது இந்த கார் விற்பனைக்கு வந்து 1 ஆண்டு ஆனதை கொண்டாடும் நிலையில் கேமோ எடிசன் காரை அறிமுப்படுத்தியுள்ளது. இந்த காரின் அறிமுகத்தின் போது இந்நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் கஸ்டமர் கேர் அதிகாரியான ராஜன் அம்பா கூறிய போது : "நாங்கள் எங்கள் ஃபோர்ட்போலியோவை புதுப்பிக்க தற்போது கேமோ எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த புதிய வேரியன்ட் இந்த காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

டாடாவை தூக்கி நிறுத்தும் பாதுகாப்பான கார் . . . விலை இவ்வளவு கம்மியா இருந்தா யாரு தான் வாங்காம இருப்பா . . .

இந்த காரின் அட்டகாசமான டிசைன், பலதரப்பட்ட அம்சங்கள், சிறப்பான பெர்ஃபாமென்ஸ், அதிக இட வசதி, பாதுகாப்பு அம்சங்கள் என எல்லாம் மக்களை கவரும் வகையில் வடிவமைத்துள்ளோம். இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் டாடா நிறுவனத்தின் ஒட்டு மொத்த பயணிகள் வாகன விற்பனையில் டாடா பஞ்ச் கார் மட்டும் 24 சதவீதம் விற்பனையாகி வருகிறது. " என கூறினார்.

டாடாவை தூக்கி நிறுத்தும் பாதுகாப்பான கார் . . . விலை இவ்வளவு கம்மியா இருந்தா யாரு தான் வாங்காம இருப்பா . . .

டாடா மோட்டார் நிறுவனம் பஞ்ச் காரை வெளியிட்டு ஒராண்டு ஆனதை கொண்டாடும் விதமாக கேமோ எடிசனை வெளியிட்டுள்ளது. இந்த எடிசன் கார் ரிதம் மற்றும் டேஸில் ஆகிய பேக்களில் அட்வெஞ்சர் மற்றும் அக்கம்பிஷ்டு வேரியன்ட்களில் கிடைக்கும். இந்த காரின் விலை ரூ6.85 லட்சம் முதல் ரூ8.63 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகிறது.

டாடாவை தூக்கி நிறுத்தும் பாதுகாப்பான கார் . . . விலை இவ்வளவு கம்மியா இருந்தா யாரு தான் வாங்காம இருப்பா . . .

டாடா நிறுவனம் இந்த கேமோ எடிசன் காரை ஃபோலியேஜ் க்ரீன் நிறத்திலும், டூயல் டோனாக பியானோ பிளாக் மற்றும் பிரிஸ்டைன் ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் உட்புறமும் டூயல் டோனாக கருப்பு மற்றும் ஃபோலியேஜ் க்ரீன் நிறத்திலும் தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்ன வென்றால் இந்த கார் குளோபல் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த கார் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
Tata punch shares 24 percent share in their over all pv sales
Story first published: Thursday, September 22, 2022, 20:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X