பச்சை நிற நம்பர் பிளேட்டில் வலம்வந்த டாடா சஃபாரி! இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போ விற்பனைக்கு வந்துச்சு?

பச்சை நிற நம்பர் பிளேட்டில் டாடா சஃபாரி (Tata Safari) கார் வலம் வந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பச்சை நிற நம்பர் பிளேட்டில் வலம் வந்த டாடா சஃபாரி... இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போ விற்பனைக்கு வந்துச்சு?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வரும் சூப்பரான கார் மாடல்களில் சஃபாரி (Tata Safari)-யும் ஒன்று. இந்த பெயர் இந்தியர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டதுதான். ஆனால், அதன் தோற்றம் புதியது. இந்த புதிய அவதாரம் கொண்ட சஃபாரி 2021 பிப்ரவரி 22ம் தேதியில் இருந்து நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பச்சை நிற நம்பர் பிளேட்டில் வலம் வந்த டாடா சஃபாரி... இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போ விற்பனைக்கு வந்துச்சு?

டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் டாடா சஃபாரி பச்சை நிற நம்பர் பிளேட்டுடன் சாலையில் பயணித்துக் கொண்டிருப்பதைப் போன்ற படங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. ஏனெனில், பச்சை நிற நம்பர் பிளேட் என்பது எலெக்ட்ரிக் கார்களுக்கு தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பச்சை நிற நம்பர் பிளேட்டில் வலம் வந்த டாடா சஃபாரி... இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போ விற்பனைக்கு வந்துச்சு?

இந்த மாதிரியான சூழலில் பச்சை நிற நம்பர் பிளேட் சஃபாரியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது பலவிதமான கேள்விகளையும், சந்தேகத்தையும் நம் மத்தியில் எழுப்பியிருக்கின்றது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் எப்போது எலெக்ட்ரிக் வெர்ஷன் சஃபாரியை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்தது என்ற பெருத்த சந்தேகத்தை நம்மிடையே ஏற்படுத்தியிருக்கின்றது.

பச்சை நிற நம்பர் பிளேட்டில் வலம் வந்த டாடா சஃபாரி... இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போ விற்பனைக்கு வந்துச்சு?

ஆனால், இது மின்சார கார் அல்ல, டீசல் எஞ்ஜின் வாகனமே என்பது வாஹன் தளத்தின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஆம், நீங்க சந்தேகப்படுவது சரிதான். ஹரியானா ஆர்டிஓ தவறுதலாக டாடா சஃபாரி டீசல் காருக்கு பச்சை நிற நம்பர் பிளேட்டை வழங்கியிருக்கின்றது. விரைவில் இது அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பச்சை நிற நம்பர் பிளேட்டில் வலம் வந்த டாடா சஃபாரி... இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போ விற்பனைக்கு வந்துச்சு?

பச்சை நிற நம்பர் பிளேட் கொண்ட சஃபாரி காரில் 2.0 லிட்டர் கைரோடெக் டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க்ககையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷன் கொண்ட வாகனமே இது.

பச்சை நிற நம்பர் பிளேட்டில் வலம் வந்த டாடா சஃபாரி... இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போ விற்பனைக்கு வந்துச்சு?

சஃபாரி காரை 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா நிறுவனம் ஒமெகா-ஆர்க் பிளாட்பாரத்தை பயன்படுத்தியே ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரு கார் மாடல்களையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த தளத்தில் வைத்து மின்சார வாகனங்கள் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களையும் உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பச்சை நிற நம்பர் பிளேட்டில் வலம் வந்த டாடா சஃபாரி... இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போ விற்பனைக்கு வந்துச்சு?

இதனால்தான் ஒரு சிலர் பச்சை நிற நம்பர் பிளேட்டில் சஃபாரி காரை பார்த்த உடன் உண்மையில் அது எலெக்ட்ரிக் காராக இருக்கலாம் என நம்பிவிட்டனர். ஆனால், சரியாக ஆய்வு செய்ததில் அது தவறுதலாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பச்சை நிற நம்பர் பிளேட்டில் வலம் வந்த டாடா சஃபாரி... இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போ விற்பனைக்கு வந்துச்சு?

Image Courtesy: Auto Journal India/Instagram

டாடா மோட்டார்ஸ் தற்போதைய சூழலில் டிகோர் இவி (இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்), நெக்ஸான் இவி மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் (மிக அதிக ரேஞ்ஜ் தரும் மாடல்) ஆகிய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றின் வரிசையில் இன்னும் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் டாடா மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

பச்சை நிற நம்பர் பிளேட்டில் வலம் வந்த டாடா சஃபாரி... இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போ விற்பனைக்கு வந்துச்சு?

அந்தவகையில், நிறுவனம் அடுத்த எலெக்ட்ரிக் வாகனமாக அல்ட்ராஸ் இவி-யை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, சியாரா இவி, கர்வ் இவி, அவின்யா இவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் நாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்த கார் மாடல்களில் சிலவற்றை டாடா பொதுப் பார்வைக்குக் கொண்டு வந்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

பச்சை நிற நம்பர் பிளேட்டில் வலம் வந்த டாடா சஃபாரி... இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போ விற்பனைக்கு வந்துச்சு?

தற்போது மின்சார கார் விற்பனையில் நாட்டில் பெரும் பங்குடன் முதல் இடத்தை டாடா மோட்டார் பிடித்திருக்கின்றது. இந்நிறுவனத்தின் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கே நாட்டு மக்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரான டிகோர் இவி-யைக் காட்டிலும் அதிகளவில் நெக்ஸான் இவி விற்பனையாகுவது அனைவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. டாடா நெக்ஸான் இவிரூ. 17.74 லட்சம் தொடங்கி ரூ. 19.24 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Tata safari spotted with green registration plate here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X