இனி காத்தே வரலனு புலம்ப மாட்டீங்க... சூப்பரான இருக்கைகள் சஃபாரியில் அறிமுகம்! போட்டியாளர்களுக்கு கூடுதல் டஃப்!

சந்தையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் சஃபாரி காரில் புதிய சிறப்பு வசதி கொண்ட இருக்கைகளை அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

காத்தோட்டமா இருக்கும்... முன்னாடி, பின்னாடி என இரு வரிசை சீட்டுகளிலும் புதிய வசதி அறிமுகம்! இன்னும் சூப்பர் காராக மாறிய டாடா சஃபாரி!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தயாரித்து வரும் மிக முக்கியமான தயாரிப்புளில் சஃபாரி (Safari) எஸ்யூவி கார் மாடலும் ஒன்று. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. கவர்ச்சியான தோற்றம் மற்றும் ஏராளமான சிறப்பு வசதிகளை இவ்வாகனத்தில் டாடா மோட்டார்ஸ் வழங்கியிருக்கின்றது.

காத்தோட்டமா இருக்கும்... முன்னாடி, பின்னாடி என இரு வரிசை சீட்டுகளிலும் புதிய வசதி அறிமுகம்! இன்னும் சூப்பர் காராக மாறிய டாடா சஃபாரி!

இத்தகைய சிறப்புகளின் காரணத்தினால் வேறு நிறுவனத்தின் எஸ்யூவி கார் பயன்பாட்டாளர்கள்கூட இக்காரை வாங்க திட்டமிட்டிருக்கின்றனர். ஏன், ஒரு சிலர் இந்த கார் வந்த உடன் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த வாகனங்களை ஓரம் கட்டிவிட்டு புதிய சஃபாரியை டெலிவரியே எடுத்திருக்கின்றனர்.

காத்தோட்டமா இருக்கும்... முன்னாடி, பின்னாடி என இரு வரிசை சீட்டுகளிலும் புதிய வசதி அறிமுகம்! இன்னும் சூப்பர் காராக மாறிய டாடா சஃபாரி!

இத்தகைய சிறப்புமிக்க வாகனமாக சஃபாரி நாட்டில் காட்சியளிக்கின்றது. இத்தகை வாகனத்தையே இன்னும் பல மடங்கு சிறப்புகள் கொண்டதாக டாடா மோட்டார்ஸ் தற்போது மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெண்டிலேட் (காற்றோட்ட) வசதி கொண்ட இருக்கையை சஃபாரி காரில் புதிதாக டாடா அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சிறப்பு வசதியானது அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சஃபாரியின் உயர்நிலை தேர்வுகளிலேயே வழங்கப்பட்டுள்ளது.

காத்தோட்டமா இருக்கும்... முன்னாடி, பின்னாடி என இரு வரிசை சீட்டுகளிலும் புதிய வசதி அறிமுகம்! இன்னும் சூப்பர் காராக மாறிய டாடா சஃபாரி!

எக்ஸ்இசட்-ப்ளஸ் (XZ+) மற்றும் எக்ஸ்இசட்ஏ-ப்ளஸ் (XZA+) ஆகிய ட்ரிம்களிலேயே வெண்டிலேட் இருக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன் இருக்கைகள் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளில் மட்டுமே இவ்வசதி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் போட்டிகள் அதிகரித்து வருகின்றது.

காத்தோட்டமா இருக்கும்... முன்னாடி, பின்னாடி என இரு வரிசை சீட்டுகளிலும் புதிய வசதி அறிமுகம்! இன்னும் சூப்பர் காராக மாறிய டாடா சஃபாரி!

புதிய மாடல்களின் வருகையால் இந்த நிலை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனை சமாளிக்கும் பொருட்டும், புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டே வெண்டிலேட் இருக்கையை சஃபாரியில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்திருக்கின்றது.

காத்தோட்டமா இருக்கும்... முன்னாடி, பின்னாடி என இரு வரிசை சீட்டுகளிலும் புதிய வசதி அறிமுகம்! இன்னும் சூப்பர் காராக மாறிய டாடா சஃபாரி!

ஆறு இருக்கை தேர்வுகளைக் கொண்ட டாடா சஃபாரியில் கேப்டைன் ரக இருக்கையாக மட்டுமே இந்த வசதி வழங்கப்பட இருக்கின்றது. போட்டி அதிகரித்து வருகின்ற காரணத்தினால் அவ்வப்போது சிறப்பு பதிப்பு வாகனங்களையும் டாடா நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது.

காத்தோட்டமா இருக்கும்... முன்னாடி, பின்னாடி என இரு வரிசை சீட்டுகளிலும் புதிய வசதி அறிமுகம்! இன்னும் சூப்பர் காராக மாறிய டாடா சஃபாரி!

அந்தவகையில், மிக சமீபத்தில் கோல்ட் எடிசன் மற்றும் டார்க் எடிசன் எனும் சிறப்பு பதிப்புகளை அது அறிமுகப்படுத்தியது. தோற்றத்தில் மட்டுமின்றி அதிக தொழில்நுட்ப வசதிகளிலும் இவை மிக சிறப்பான தயாரிப்பாக காட்சியளிக்கின்றன. அப்படியாக, இந்த சிறப்பு பதிப்பு வாகனங்களில் வழங்கப்பட்ட ஓர் அம்சமே வெண்டிலேட் இருக்கை அமைப்பு. இதனையே தற்போது வழக்கமான சஃபாரி வேரியண்டுகளிலும் கிடைக்கும் பொருட்டு டாடா மோட்டார்ஸ் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

காத்தோட்டமா இருக்கும்... முன்னாடி, பின்னாடி என இரு வரிசை சீட்டுகளிலும் புதிய வசதி அறிமுகம்! இன்னும் சூப்பர் காராக மாறிய டாடா சஃபாரி!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே சஃபாரியில் காற்று வடிகட்ட, ஒயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஆப்பிள் கார் ப்ளே/ ஆண்ட்ராய்டு ஆட்டோவிற்கான ஒயர்லெஸ் இணைப்பு வசதி ஆகிய சிறப்பு வசதிகளை டாடா அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதனை இன்னும் பல மடங்கும் மேம்படுத்தும் வகையிலேயே தொடர்ச்சியாக அப்கிரேடுகளை டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகின்றது.

காத்தோட்டமா இருக்கும்... முன்னாடி, பின்னாடி என இரு வரிசை சீட்டுகளிலும் புதிய வசதி அறிமுகம்! இன்னும் சூப்பர் காராக மாறிய டாடா சஃபாரி!

டாடா சஃபாரி கார் இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700, ஹூண்டாய் அல்காஸ், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ஆனால், இந்த போட்டி மாடல்களைக் காட்டிலும் சஃபாரி குறைவான அம்சங்களே இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையை மாற்றும் பொருட்டு டாடா மோட்டார்ஸ் இக்காரை மேம்படுத்தி வருகின்றது. இதன் ஓர் பகுதியாக அண்மையில் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வெண்டிலேட் இருக்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

காத்தோட்டமா இருக்கும்... முன்னாடி, பின்னாடி என இரு வரிசை சீட்டுகளிலும் புதிய வசதி அறிமுகம்! இன்னும் சூப்பர் காராக மாறிய டாடா சஃபாரி!

இந்த நடவடிக்கை இக்காரின் விற்பனையை பல மடங்கு மேம்படுத்தும் என நிறுவனம் நம்புகின்றது. இக்காரில் 8.8 இன்ச் தொடு திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் இருக்கை, பனோராமிக் சன்ரூஃப் மற்றும் ஐ.ஆர்.ஏ கார் இணைப்பு தொழிற்நுட்பம் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. டாடா சஃபாரி எஸ்யூவி இந்தியாவில் ரூ.14.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Tata safari top spec variants gets cooled seats
Story first published: Saturday, January 29, 2022, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X