ஹூண்டாயிடம் கெளரவத்தை பறி கொடுத்த டாடா.... என்னங்க இப்படி ஆகிபோச்சு?

டாடா நிறுவனத்தின் ஜூன் மாதவிற்பனை அறிக்கையில் மே மாதம் அந்நிறுவனம் இருந்த 2ம் இடத்தை மீண்டும் ஹூண்டாய் நிறுவனத்திற்கே விட்டு கொடுத்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை காணலாம்.

ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா . . . . என்னங்க இப்படி ஆகிபோச்சு

கடந்த சில மாதங்களாக மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்று வரும் நிறுவனம் டாடா. இந்நிறுவனத்தின் வாகனங்கள் தரமாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். அதனால் இந்நிறுவன கார்களுக்கு மக்கள் மத்தியில் செம வரவேற்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக நெக்ஸான் கார் இந்நிறுவனத்திற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது.

ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா . . . . என்னங்க இப்படி ஆகிபோச்சு

இந்நிலையில் டாடா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் தன் நடந்த விற்பனை நிலவரத்தை அறிக்கையாக அறித்துள்ளது. அதன்படி டாடா கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. டாடா நிறுவனம் மொத்தம் 45,197 கார்களை கடந்த ஜூன் மாதம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2021 ஏப்ரல் மாத விற்பனையை ஒப்பிடும் பேஆது 87.46 சதவீத வளர்ச்சியாகும். அப்பொழுது வெறும் 24,110 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன.

ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா . . . . என்னங்க இப்படி ஆகிபோச்சு
Domestic Sales Performance
Category June 2022 June 2021 % change (Y-o-Y)
Total Sales 79,606 43,704 82%
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா . . . . என்னங்க இப்படி ஆகிபோச்சு

இதுவே கடந்த மே மாத விற்பனையை ஒப்பிட்டால் மொத்தம் 43,341 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. அதாவது 4.28 சதவீதம் வளர்ச்சியை கடந்த ஜூன் மாத விற்பனை பெற்றுள்ளது. டாடா இதுவரை இல்லாத அளவிற்கு பயணிகள் வாகன விற்பனையை செய்துள்ளது கடந்த மே மாதம் ஒட்டு மொத்த கார்கள் விற்பனையில் ஹூண்டாயை பின்னிற்கு தள்ளி டாடா 2ம் இடத்தைபிடித்திருந்தது. ஆனால்இந்த மாதம் அதை ஹூண்டாயிடம் பரிகொடுத்துவிட்டது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 49 ஆயிரம் கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டது.

ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா . . . . என்னங்க இப்படி ஆகிபோச்சு
Domestic Commercial Vehicles
Category June 2022 June 2021 % change (Y-o-Y)
M&HCV 9,191 5,243 75%
I&LCV 4,718 2,785 69%
Passenger Carriers 3,868 943 310%
SCV cargo and pickup 16,632 10,623 57%
Total CV Domestic 34,409 19,594 76%
CV Exports 2,856 2,506 14%
Total CV 37,265 22,100 69%
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா . . . . என்னங்க இப்படி ஆகிபோச்சு

இதில் டாடா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் கம்பஷன் இன்ஜின் பயணிகள் வாகனங்களாக 41,690 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு ஜூன் மாதம் வெறும் 23,452 ஆக இருந்தது. எலெக்ட்ரிக் வாகன பிரிவிலும் டாடா நிறுவனம் வளர்ந்து வரும் நிலையில் கடந்த ஜூனன் மாதம் மட்டும் 3507 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. நெக்ஸான் இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவிமேக்ஸ் ஆகிய வாகனங்கள் எல்லாம் அந்நிறுவனம் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் வாகங்கள்.

ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா . . . . என்னங்க இப்படி ஆகிபோச்சு
Domestic Passenger Vehicles
Category June 2022 June 2021 % change (Y-o-Y)
PV ICE 41,690 23,452 78%
PV EV 3,507 658 433%
Total PV Domestic 45,197 24,110 87%
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா . . . . என்னங்க இப்படி ஆகிபோச்சு

கார்களை பொருத்தவரை டாடா நிறுவனம் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட டாடா சஃபாரி, மற்றும் ஹாரியர் பெட்ரோல் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. ஏற்கனவே மார்கெட்டில் மஹிந்திரா நிறுவனம் இந்த செக்மெண்டில் ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யூவி 700 என்ற கார்களை விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா . . . . என்னங்க இப்படி ஆகிபோச்சு

டாடா மோட்டாஸ் நிறுவனம் ஒட்டு மொத்த உள்நாட்டு விற்பனையிலும் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் மொத்தம் 79,606 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் வெறும் 43,704 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. கடந்த மே மாதம் மொத்தம் 74,755 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது அதை ஒப்பிடும் போது ஜூன் மாத விற்பனை 6 சதவீதம் அதிகம் ஆகும்.

Most Read Articles
English summary
Tata sales report in june 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X