Just In
- 2 min ago
இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்.. நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க!
- 11 hrs ago
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- 13 hrs ago
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- 14 hrs ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
Don't Miss!
- News
லடாக்கில் பாலம்..ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி...சீனா சொந்தம் கொண்டாடுவதை ஏற்கமாட்டோம் - அரிந்தம் பக்சி
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வேற லெவல் தொழில்நுட்ப அம்சங்களுடன் டாடா டியாகோ, டிகோர் 'சிஎன்ஜி' கார்கள் அறிமுகம்!
சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்கள் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கார்களில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பதை மிஞ்சிய வசதிகளையும், தொழில்நுட்ப அம்சங்களையும் கொடுத்து டாடா மோட்டார்ஸ் அசத்தி இருக்கிறது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி மாடல்களானது iCNG என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. டாடா டியாகோ சிஎன்ஜி எரிபொருள் மாடலானது எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் என நான்கு வேரியண்ட்டுகளிலும், டிகோர் சிஎன்ஜி மாடலானது எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் என இரண்டு வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

டாடா டியாகோ காரில் ஏற்கனவே வழங்கப்படும் வண்ணத் தேர்வுகள் தவிர்த்து புதிதாக மிட்நைட் ப்ளம் என்ற புதிய வண்ணத்தேர்வும், டிகோர் காரில் புதிதாக மேக்னெட்டிக் ரெட் என்ற வண்ணத் தேர்வும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லை. க்ரோம் அலங்கார அம்சங்களுடன் முகப்பு க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டே டைம் ரன்னிங் லைட்டுகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. டெயில் கேட்டில் சிஎன்ஜி பேட்ஜ் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

ஹார்மன் நிறுவனத்தின் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. டிகோர் காரில் கூடுதலாக ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் மற்றும் டியூவல் டோன் ரூஃப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலானது 84 பிஎச்பி பவரை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும் நிலையில், சிஎன்ஜி மாடலில் உள்ள எஞ்சின் அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிகிறது.

பெட்ரோல் மாடலைவிட குறைவான பவரை வெளிப்படுத்தினாலும், இதன் ரக சிஎன்ஜி கார்களில் மிகச் சிறப்பான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக கூறலாம். மேலும், நகர்ப்புறத்தில் எளிதாக ஓட்டுவதற்கும், மலைப்பாங்கான மற்றும் ஏற்றமான சாலைகளில் கார் திணறாமல் செல்லும் வகையில் தொழில்நுட்ப அம்சங்களை வழங்கி இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி மாடல்கள் 100 கிலோ கூடுதல் எடை கொண்டதாக இருக்கின்றன. இதனால், இந்த கார்களின் சஸ்பென்ஷனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி எரிபொருள் கலனை முழுமையாக நிரப்பும் பட்சத்தில், 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த காரில் சிஎன்ஜி எரிபொருள் கசிவு ஏற்படுவது குறித்த எச்சரிக்கை வழங்கும் தொழில்நுட்பம், சிஎன்ஜி மோடில் வைத்தே காரை ஸ்டார்ட் செய்யும் வசதி, அதி விரைவாகவும், பாதுகாப்பாகவும் சிஎன்ஜி எரிபொருளை நிரப்புவதற்கான தொழில்நுட்ப வசதிகள் இந்த கார்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா டியாகோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்டுகள் ரூ.6.09 லட்சம் ஆரம்ப விலையிலும், டிகோர் சிஎன்ஜி வேரியண்ட்டுகள் ரூ.7.69 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. மாருதி செலிரியோ சிஎன்ஜி மற்றும் ஹூண்டாய் சான்ட்ரோ சிஎன்ஜி கார்களைவிட டாடா டியாகோ சிஎன்ஜி மாடலுக்கு மிக சவாலான ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

டிகோர் சிஎன்ஜி மாடலானது ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி மாடலுடன் போட்டி போடும். இன்று புக்கிங் துவங்கப்பட்டு நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இன்று முதலே டெலிவிரி கொடுக்கும் பணிகளும் நடைபெற உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சிஎன்ஜி எரிபொருள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்ததாக தன்மை கொண்டதாக இருப்பதுடன், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்பதால், தற்போது உள்ள பெட்ரோல், டீசல் விலைகளை கருத்தில்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மாற்றுத் தேர்வாக இருக்கும்.

மேலும், வாடிக்கையாளர்களிடத்திலும் சிஎன்ஜி கார்களுக்கான வரவேற்பும் வெகுவாக அதிகரித்து வருகிறது. ஆனால், சிஎன்ஜி எரிபொருள் வழங்கும் நிலையங்கள் நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இருப்பது இந்த கார்களுக்கான சிறிய நடைமுறை சிக்கலாக இருந்து வருகிறது.